/indian-express-tamil/media/media_files/2025/03/30/1xEbteEsVJ0sqRMHt766.jpg)
தமிழ்நாட்டிற்கு தரவேண்டிய ரூ.4,034 கோடி அளவுக்கு மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதி திட்டம் (MGNREGA) நிதியை வழங்காத மத்திய அரசை கண்டித்து நேற்று (மார்ச்29) தமிழ்நாடு முழுவதும் திமுக சார்பில் ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டது.
பா.ஜ.க. அரசு மீது ஸ்டாலின் குற்றச்சாடு:
"காந்தியைப் பிடிக்காதவர்களுக்கு அவர் பெயரிலான 100 நாள் வேலைத் திட்டத்தையும் பிடிக்கவில்லை. இந்தியக் கிராமப்புறப் பொருளாதாரத்தின் முதுகெலும்பாக, இரத்த ஓட்டமாக UPA அரசால் வளர்த்தெடுக்கப்பட்ட MGNREGA மீது சம்மட்டி கொண்டு அடித்து ஒரேயடியாக ஒழித்துக்கட்டும் வேலையில் இறங்கியிருக்கிறது இரக்கமற்ற பா.ஜ.க அரசு.
காந்தியைப் பிடிக்காதவர்களுக்கு அவர் பெயரிலான நூறு நாள் வேலைத் திட்டத்தையும் பிடிக்கவில்லை.
— M.K.Stalin (@mkstalin) March 29, 2025
இந்தியக் கிராமப்புறப் பொருளாதாரத்தின் முதுகெலும்பாக, இரத்த ஓட்டமாக #UPA அரசால் வளர்த்தெடுக்கப்பட்ட #MGNREGA மீது சம்மட்டி கொண்டு அடித்து ஒரேயடியாக ஒழித்துக்கட்டும் வேலையில்… pic.twitter.com/bHyWLq8CNN
உங்களுக்கு வேண்டப்பட்ட கார்ப்பரேட்டுகள் என்றால் பல லட்சம் கோடி ரூபாய்க் கடனைக் கூட ஒரே கையெழுத்தில் தள்ளுபடி செய்கிறீர்களே? வேகாத வெயிலில் உடலை வருத்தி, வியர்வை சிந்தி உழைத்த ஏழைகளின் சம்பளப் பணத்தை விடுவிக்க மட்டும் ஏன் பணமில்லை? பணமில்லையா அல்லது மனமில்லையா? என தமிழக முதலமைச்சரும், தி.மு.க. தலைவருமான மு.க.ஸ்டாலின் கேள்வி எழுப்பி இருந்தார்.
முதல்வர் ஸ்டாலினுக்கு அண்ணாமலை பதிலடி:
தமிழ்நாட்டில் 100 நாள் வேலை திட்டத்தில் முறைகேடுகள் நடப்பதாக பகிரங்கமாக குற்றச்சாட்டை சுமத்தி உள்ளார் பா.ஜ.க. மாநிலத் தலைவர் அண்ணாமலை. தமது எக்ஸ் சமூக வலைதள பக்கத்தில் இன்று வெளியிட்டுள்ள பதிவில், "தமிழக முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் பின்வரும் கேள்விகளுக்கு பதிலளிக்க வேண்டும்.
1) மத்திய அரசு கடந்த 4 ஆண்டுகளில், நமது பிரதமர் மோடியின் தலைமையின் கீழ், MGNREGA 100 நாள் வேலைத் திட்டத்திற்காக, தமிழகத்துக்கு வரலாற்றிலேயே அதிகமாக, ₹39,339 கோடி நிதியை ஒதுக்கியுள்ளது. இந்தத் திட்டத்தை செயல்படுத்துவதில் ஏற்பட்டுள்ள முறைகேடுகளின் வலையில் நீங்கள் சிக்கியிருப்பதால், தமிழகத்தில் இந்தத் திட்டத்தில் ஏற்பட்டுள்ள பரவலான ஊழலை விசாரிக்க சி.பி.ஐ. விசாரணைக்கு நீங்கள் ஒப்புதல் அளிப்பீர்களா ஸ்டாலின் அவர்களே?
2) தமிழகத்தை விட மூன்றில் இருந்து ஐந்து மடங்கு அதிகமான கிராமப்புற மக்கள்தொகை கொண்ட மாநிலங்கள், MGNREGA நூறு நாள் வேலைத் திட்டத்தின் கீழ், தமிழகத்தை விடக் குறைவான நிதியைப் பெற்றுள்ளன என்பது உங்களுக்குத் தெரியுமா?
3) MGNREGA 100 நாள் வேலைத்திட்ட வேலை நாட்களை, 100லிருந்து 150 ஆக உயர்த்துவதாக நீங்கள் கூறிய தேர்தல் வாக்குறுதியை எப்போது நிறைவேற்றப் போகிறீர்கள்?
தமிழக முதலமைச்சர் திரு @mkstalin பின்வரும் கேள்விகளுக்கு பதிலளிக்க வேண்டும்.
— K.Annamalai (@annamalai_k) March 30, 2025
1) மத்திய அரசு கடந்த நான்கு ஆண்டுகளில், நமது மாண்புமிகு பிரதமர் திரு @narendramodi அவர்களின் சீரிய தலைமையின் கீழ், MGNREGA நூறு நாள் வேலைத் திட்டத்திற்காக, தமிழகத்துக்கு வரலாற்றிலேயே அதிகமாக, ₹39,339… pic.twitter.com/BzReaRzujw
முதல்வர் ஸ்டாலின் அவர்களே.. கடின உழைப்பாளிகளான தமிழக மக்களுக்குச் சேர வேண்டிய நிதியைக் கொள்ளையடித்துள்ள உங்கள் கட்சி திமுக, வெறும் ஊழல் கட்சி மட்டுமல்ல; அது மோசடியான, இரக்கமற்ற, பிரிவினையைத் தூண்டும் கட்சி. எனக் குறிப்பிட்டு உள்ளார். மேலும், தமிழ்நாட்டின் ஈரோடு மாவட்டத்தில் உள்ள ஒரு பஞ்சாயத்தில் MGNREGA 100 நாள் வேலைத்திட்டத்தில் நடைபெற்றுள்ள முறைகேடு எனக் குறிப்பிட்டு ஒரு பட்டியலையும் வெளியிட்டுள்ளார் அண்ணாமலை.
இதனிடையே, கோவை விமான நிலையத்தில் செய்தியாளர்களிடம் பேசிய அண்ணாமலை, தமிழ்நாட்டில் பாஜக கூட்டணி குறித்து தேசிய தலைமை தான் உரிய நேரத்தில் அறிவிக்கும் என்றார். தேசிய ஊரக வேலை வாய்ப்பு திட்டத்தில் திமுக அரசு முறைகேடுகளை செய்து மத்திய அரசு நிதி வழங்கவில்லை என்றும் அண்ணாமலை குற்றஞ்சாட்டினார்.
Cvoter கருத்துக்கணிப்பு ஸ்டாலினுக்கு பின்னடைவு:
தமிழகத்தின் வளர்ச்சியும், பா.ஜ.க.-வின் வளர்ச்சியும்தான் தனக்கு முக்கியம் எனவும் அண்ணாமலை தெரிவித்தார். செய்தியாளர் சந்திப்பில் அவர் பேசியதாவது, "அதிமுக தலைவர்கள் உள்துறை அமைச்சர் அமித்ஷாவை சந்தித்து வரும் நிலையில் பாஜக அதிமுக கூட்டணி குறித்து தேசிய தலைமை உரிய நேரத்தில் அறிவிக்கும். சமீபத்தில் CVoters நிறுவனம் நடத்திய கருத்துக்கணிப்பில் தமிழ்நாடு முதலமைச்சர் ஸ்டாலினுக்கு வெறும் 27 சதவீதம் மட்டுமே கிடைத்துள்ளது. மோசமான முதல்வராக இருந்தாலும் கூட 40% மக்களின் ஆதரவு பெற்றிருப்பார்கள். இந்த எண்ணிக்கை முதல்வர் ஸ்டாலின் மீது மக்களுக்கு இருக்கும் அதிருப்தியை வெளிப்படுத்தும் விதமாக உள்ளது.
அ.தி.மு.க. உடன் கூட்டணியா? - அண்ணாமலை பதில்
மேலும், அதிமுக குறித்து கூறிய கருத்துக்களில் எந்த மாற்றம் இல்லை எனவும், பாஜக தேசிய தலைமை எடுக்கும் முடிவு தமிழகத்தின் வளர்ச்சிக்கும் தமிழகத்தில் பாஜகவின் வளர்ச்சிக்கும் அடிப்படையாக இருக்கும் என்றார். மேலும், அதற்கு ஒரு தொண்டனாகவும் எப்போதும் துணை நிற்பேன் என அண்ணாமலை தெரிவித்தார்.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.