/indian-express-tamil/media/media_files/2025/08/30/annamalai-coimbatore-thudiyalur-vinayaka-chaturthi-2025-speech-tamil-news-2025-08-30-16-45-57.jpg)
விநாயகர் சிலையை கரைக்கும் இளைஞர்கள் ஏரியை சுத்தம் செய்ய 10 நாட்கள் ஒதுக்க வேண்டும் என்று பா.ஜ.க முன்னாள் மாநிலத் தலைவர் அண்ணாமலை தெரிவித்தார்.
இந்து முன்னணி அமைப்பின் கோவை மாநகர் வடக்கு பகுதியில் பிரதிஷ்டை செய்யப்பட்ட விநாயகர் சிலைகள் இன்று விசர்ஜனம் செய்யும் நிலையில் துடியலூர் பகுதியில் நடைபெறும் பொதுக் கூட்டத்தில் பங்கேற்று உள்ள பா.ஜ.க தேசிய பொதுக்குழு உறுப்பினர் அண்ணாமலை பேசியதாவது:-
இந்து முன்னணி 1980 ல் ராமகோபாலன், இதை ஆரம்பித்த பிறகு தமிழகத்தில் பட்டி, தொட்டி எல்லாம் விநாயகர் வழிபாடு, அதன் பிறகு அதனுடைய ஊர்வலம் என்பது இந்து மக்கள் மத்தியில் பெரிய எழுச்சியை ஏற்படுத்துகிறது. குறிப்பாக, துடியலூரை எடுத்துக் கொண்டால் கடந்த ஆண்டு 230 விநாயகப் பெருமானை ஒரு பலமாக கொண்டு சென்றோம். 38 விநாயகர் பெருமான் இந்த ஆண்டு புதிதாக வந்து இருக்கிறார். இது இன்று நேற்று நடப்பவை அல்ல.
1893 ல் பா.ஜ.க வின் முன்னாள் மாவட்ட தலைவர் நந்தகுமார் சொன்னது போல, பாலகங்காதர திலக் அவர்கள் இந்த விநாயகர் ஊர்வலத்தை எல்லாம் ஒரு அரசியல் கருவியாக பயன்படுத்தி ஆங்கிலேயருக்கு எதிராக ஒரு பெரும் எழுச்சியை உருவாக்கினார். குறிப்பாக மகாராஷ்டிரா மாநிலத்தில் மும்பை பகுதியில் ஏற்படுத்தி வந்திருக்கக் கூடிய மக்களை எல்லாம் தேசிய உணர்வு ஊட்டி பெரிய எழுச்சியோடு அனுப்பி வைத்தார்.
1892 ல் ஆங்கிலேயர்கள், பொதுமக்கள் மதத்தின் அடிப்படையில் எங்கேயும் பொது அடிப்படையில் சேரக் கூடாது என்று கூறினார்கள். அதை எதிர்த்து 1893 விநாயகர் பந்தலை பயன்படுத்தி மக்களுக்கு ஒரு தேசிய உணர்வு ஊட்ட முடியும் நிகழ்வாக அதை மாற்றிக் காட்டினார். அதன் பிறகு கடந்த 132 ஆண்டுகளாக இந்தியா முழுவதுமே விநாயகப் பெருமான் விநாயகர் ஊர்வலம் என்பது இந்து மக்களுடைய வாழ்வியலில் ஒன்றிணைந்த நிகழ்வாக மாறி இருக்கிறது.
இன்று கோயம்புத்தூர் முழுவதும் தமிழ்நாடு முழுவதுமே பட்டி, தொட்டி எங்கும் இலட்சக் கணக்கான விநாயகர் பெருமானை பிரதிஷ்டை செய்து அதை ஒன்றாவது நாள், மூன்றாவது நாள், ஐந்தாவது நாள், ஏழாவது நாள், ஒன்பதாவது நாள் என வேறு, வேறு தினங்களில் மக்கள் ஜாதி மதத்தை மறந்து ஒன்றினைந்து இதை எடுத்துச் செல்வதில் ஒரு ஆனந்தம் இருக்கிறது.
எந்த ஒரு மதத்திலும் கூட இப்படிப்பட்ட , களிமண்ணை விநாயகராக மாற்றி விநாயகருக்கு ஒரு உயிர் கொடுத்து, அதே விநாயகரை வேறு, வேறு நாட்களை, குளம், ஏரி, ஆறு என கரைத்து அதன் மூலம் கிடைக்கின்ற களிமண்ணை மீண்டும் பூமித் தாயின் மடியில் சேர்த்து, அது விவசாய பெருமக்களின் எல்லாவிதமான வாழ்வியலிலும் வேறு, வேறு சூழ்நிலையில் அந்தந்த ஏரியில் பயன்படுத்தப்பட்டு, மீண்டும் அடுத்த ஆண்டு அதே போல களிமண்ணில் விநாயகர் பெருமானை பிடித்து உயிரூட்டி இந்த ஆண்டு ஒவ்வொரு ஆண்டும் தொடர்ந்து நடைபெற்றுக் கொண்டு இருக்கிறது.
இதற்குப் பின்னால் மிகப்பெரிய அறிவியல் இருக்கிறது. களிமண்ணை பிடித்து உயிரைக் கொடுத்து எடுத்துச் செல்வதில் பெரிய அறிவியல் இருக்கிறது. பகவத் கீதை சமஸ்கிருதத்தில் எழுதப்பட்டு இருக்கிறது. சமீபத்தில் பிரதமர் நரேந்திர மோதி கங்கை கொண்ட சோழபுரம் வந்த போது, அந்த பகவத் கீதை புத்தகத்தில் சமஸ்கிருதத்தில் இருக்கக் கூடிய வாக்கியங்கள் எல்லாம் தமிழில் எழுதப்பட்டு, இசைஞானி இளையராஜா அவர்கள் அதற்கு இசை அமைத்து அதை மேடையில் பாரத பிரதமர் நரேந்திர மோடி வெளியிட்டார்.
அதே சமஸ்கிருதத்தில் இருந்தாலும் கூட அதை எல்லாராலும் படிக்க முடியாது. எல்லோரும் கூட பகவத் கீதை என்னுடைய ஆழ்ந்த அர்த்தங்களை புரிந்து கொள்ள வேண்டும் என்பதற்காக, தமிழில் கொண்டு வரப்பட்டு உள்ளது. நாமும் இந்த பூமியில் பிறக்கிறோம் சில ஆண்டுகள் வாழ்கிறோம், ஆனால் விநாயகப் பெருமானுக்கு இருக்கக் கூடிய ஜீவன் எப்பொழுதும் உயிரோடு இருக்கிறது. அதேபோல மனிதனுக்குள் இருக்கிற ஆத்மாவும் உயிரோடு இருக்கிறது. இது நம்முடைய இந்து தர்மத்தின் ஆழ்ந்த அறிவியல். இதை எதற்காக அரசியல் கட்சிகளும் காவல் துறையும் எதிர்க்கிறார்கள் ? என்பதை புரிந்து கொள்ள முடியவில்லை.
கடந்த ஆண்டு இதயத் துடியலூரில் விநாயகர் சதுர்த்தி ஊர்வலம் நடத்தப்பட்ட போது, கலவரத்தை யாரும் இங்கு ஏற்படுத்தவில்லை. இங்கு கலவரத்தை ஏற்படுத்தியதே காவல்துறை தான்.. ஊர்வலம் செல்லும் போது தொண்டர்களை சாட்டையால் அடிப்பது, போன்ற துன்பங்களை பக்தர்களுக்கு கொடுத்தார்கள். அதை இந்து முன்னணி கடுமையாக கண்டித்த பிறகு மக்களுடைய கோபத்திற்கு ஆளான பிறகு இன்று காவல் துறை நண்பர்கள் இந்த ஆண்டு நிறைய தளர்வுகளை ஏற்படுத்தி, உண்மையிலும், விநாயகர் சதுர்த்தி விழாவிற்கு எந்த இடையூறும் ஏற்படுத்தாமல் காவல் துறை நடந்து கொண்டு இருக்கிறார்கள்.
அதற்காக என்னுடைய தனிப்பட்ட முறையில் அவர்களுக்கு என்னுடைய பாராட்டுகளை தெரிவித்துக் கொள்கிறேன். இது போன்ற நிகழ்வுகள் மட்டும் தான் மக்களை ஒன்றிணைக்கிறது. இதுபோன்ற நிகழ்வுகள் மட்டும் தான் இந்து தர்மத்தை பிணைப்பாக வைத்து இருக்கிறது. இது போன்ற நிகழ்வுகள் மட்டும் தான் இந்தியன் என்கின்ற பெருமைக்குரிய பாரத அடையாளத்தை அந்த மனிதனுக்கு கொடுக்கிறது. இதை காவல் துறை செய்தப்படுத்தி நாங்கள் விடமாட்டோம் என்று கூறினால் பிரச்சனை அவர்களுக்குத் தான் வருகிறது. மக்கள் ஒன்றாக இருக்க வேண்டும் என காவல் துறை விருப்பப்பட்டால், இதுபோன்ற விழாக்கள் மூலமாக தான் மக்களிடம் ஒற்றுமை, உணர்வு வெளிப்படும்.
அதனால் ஒவ்வொரு ஆண்டும் கூட புதிதாக ஒரு விநாயகரை வைப்பது பெரும் பாடாக இருக்கிறது. கடந்தாண்டு எவ்வளவு வைத்தீர்களோ? அதை மட்டுமே வையுங்கள் எனக் கூறுகிறார்கள். அதற்கு மேல் ஒரு விநாயகர் வைக்க வேண்டும் என்றாலும் கூட 20 பேரிடம் அனுமதி பெற வேண்டி உள்ளது. அரசு இதை புரிந்து கொள்ள வேண்டும், மக்கள் எந்த மதத்தை சார்ந்தவராக இருந்தாலும் அவர்கள் செய்யக் கூடிய பண்டிகைகளுக்கு அரசு தான் பங்களிப்பு தர வேண்டும். நன்றாக அந்த பண்டிகைகள் நடந்து முடிய வேண்டும் என அரசு ஒத்துழைக்க வேண்டும். 230 ல் இருந்து 268 ஆக துடிகளூரில் விநாயகர் சிலை அதிகரிக்கப்பட்டு இருக்கிறது.
இதே போல தமிழ்நாடு முழுவதுமே 2021ல் இருந்து அவர்கள் போட்டு இருக்கக் கூடிய கடுமையான கட்டுப்பாடுகளில் ஒரு தளர்வு வேண்டும். திராவிட முன்னேற்றக் கழக ஆட்சி ஆட்சிக்கு வந்த பிறகு எவ்வளவு பிரச்சனைகள் தொடங்கி இருக்கிறது. விநாயகர் சிலை செய்யும் இடத்தில் இருந்து தொடங்கும் பிரச்சனை நீண்டு கொண்டே இருக்கிறது. விநாயகர் செய்வதில் தொடங்கி விநாயகர் சிலை கரைக்கும் வரை பிரச்சனைகள் தலைக்கு மேல் வருகிறது. அன்றில் இருந்து இது மக்கள் எல்லாம் ஒன்றாக இணைந்து இந்த விழாவை நடத்திக் கொண்டு இருக்கின்றார்கள்.
இளைஞர்களில் இருந்து பெரியவர் வரை இதுபோன்ற எந்த விழாக்களில் கலந்து கொள்கிறார்கள் என்பதை பார்க்க வேண்டும். இங்கு சிறியவர் முதல் பெரியவர் வரை அனைவரும் சமம் என்பதை எத்தனை விழாக்கள் ஒன்றிணைக்கிறது என்பதை யோசித்துப் பார்க்க வேண்டும். 1980 ல் ராமகோபாலன் அவர்கள் ஒரு சூலூரை எடுத்தார், பட்டி, தொட்டி எங்கும் விநாயகர் சிலை வைக்க வேண்டும் என முடிவெடுத்தார். ஒவ்வொரு பஞ்சாயத்திலும் குறைந்தபட்சம், விநாயகர் சிலை வைக்கப்பட்டு ஏரி குளங்களில் கரைக்கப்பட வேண்டும் என முடிவெடுத்தார்.
இப்போ தற்போது 2025-ல் மிகக் கடினமான பாதையை நாம் கடந்து வந்து இருக்கிறோம். நம்முடைய கடமை, வீர துறவி அய்யா விட்டுச் சென்ற கடமையை நாம் செய்து கொண்டு இருக்கிறோமா என்பதை சிந்திக்க வேண்டும். எத்தனை ஏரி, குளங்களில் தண்ணீர் இருக்கிறது இங்கு இருக்கக் கூடிய இளைஞர்கள் எதை நினைத்தாலும் உங்களால் செய்ய முடியும், என்னுடைய அன்பான வேண்டுகோள் இந்த ஆண்டு எவ்வளவு குதூகலமாக வீரத்தோடு விநாயகரை கரைப்பதற்கு தயாராக இருக்கிறோமோ, அதேபோல அடுத்த ஆண்டு குறைவாக, ஒவ்வொரு இளைஞரும் அவர்கள் பகுதியில் இருக்கும் ஏரியை குறைந்தது 10 நாட்கள் ஆவது சுத்தம் செய்ய நேரம் ஒதுக்கி தர வேண்டும்.
மழைக் காலத்தில் அப்பொழுது தான் தண்ணீரை தேக்கி வைத்துக் கொள்ள முடியும். அடுத்த ஆண்டு விநாயகரை அங்கு விஷர்சனம் செய்ய முடியும். அதற்கும் இந்து முன்னணி பொறுப்பேற்று அடுத்த ஆண்டுக்குள் ஏரி குளங்களை சுத்தம் செய்வதை இயக்கமாக முன்னெடுத்துச் செல்ல வேண்டும். 50 ஆண்டுகளில் அதை கான்கிரீட் தளமாக மாறி விடக் கூடாது, சென்னையை எல்லாம் கம்பேர் செய்து பார்க்கும் பொழுது, அந்த நிலைமை நம் ஊருக்கு வந்து விடக் கூடாது.
அவையெல்லாம் இளைஞர் படை மனதில் வைத்து களத்தில் இறங்கி குளங்களை தூர்வார வேண்டும். அரசு இதை செய்ய வேண்டும் என எதிர்பார்க்கக் கூடாது. நாம் தான் செய்து காட்ட வேண்டும்.. தமிழகத்தில் இதை எதிர்க் கட்சியின் நண்பர்கள் நம்மை அவமானப்படுத்துவதற்காக விநாயகர் நம்முடைய கடவுளா ? தமிழ் கடவுளா ? என்றெல்லாம் பேசுவார்கள், விநாயகர் இந்தியாவின் எந்த பகுதியில் இருந்து வந்தார் என்றெல்லாம் கேள்வி எழுப்புவார்கள்.
*எத்தனை எதிர்க்கட்சி நண்பர்களுக்கு தெரியும் விநாயகர் அகவலில் ஔவை பாட்டி, 1500 ஆண்டுகளுக்கு முன்பு அவ்வை பாட்டி விநாயகரை பற்றி எழுதி இருப்பது.. பாலும் தெளிந்த தேனும், பாகும் பருப்பும் இவை நான்கும் கலந்து உனக்கு நான் தருவேன். என எனக்கு இயல், இசை, நாடகம் வரமாக தர வேண்டும் என அவ்வையார் பாட்டி பாடி இருக்கிறார். அதனால் தான் ஒவ்வொரு குடும்பத்திலும் நாம் படிக்க வேண்டும் என்றால் பிள்ளையார் சுழி போட்டு ஆரம்பிக்கிறோம். விநாயகருக்கு பிடித்தமான நான்கையும் பலகாரமாக பிடித்து வைக்கிறோம். இயல், இசை, நாடகம் மூன்றையும் நாம் கற்றுக் கொள்ள வேண்டும் என்றால் விநாயகரின் அருள் நமக்கு தேவை எனக் கேட்கிறோம்.
விநாயகருக்கு பிடித்ததை நான்கு பொருட்கள் தான் அது அனைத்து வகையான குடும்பத்திலும் அது கிடைக்கும். பால், தேன், வெள்ள பாகு, பருப்பு என்பது அனைவர் வீட்டிலும் இருப்பது. யார் ? வேண்டுமானாலும் இதை எடுத்து விநாயகருக்கு படைக்க முடியும். வேறு எதுவும் ஆடம்பரமாக விநாயகருக்கு தேவையில்லை. ஒரு களிமண்ணில் விநாயகரை உருவாக்கலாம், மஞ்சத்தூளில் தண்ணீரை கலந்து பிள்ளையார் பிடித்து வைக்கலாம். மிக எளிமையாக உருவாக்கக் கூடிய ஒரு கடவுள் தான் பிள்ளையார்.
இவரை நாம் போற்றி வணங்கும் போது சங்கத் தமிழை நமக்கு கொடுப்பார் என்பது நமக்கு நம்பிக்கை. கடந்த மூன்று நாட்களாக இந்த விநாயகர் சதுர்த்தியை பக்தியோடு உருக்கத்தோடு, வழிபாடு செய்து அந்த விநாயகப் பெருமானை இன்று ஏக்கத்தோடு மனவேதனையோடு விநாயகர் பிரிந்து செல்கிறார் என்கின்ற நினைப்போடு யாரெல்லாம் எடுத்துச் செல்கிறீர்களோ ? நிச்சயமாக அவர்களுக்கெல்லாம், விநாயகர் எல்லாம் வல்ல செல்வத்தையும் அருளையும், கல்வியும் கொடுப்பார். நம்மளுடைய தமிழ் சமுதாயம் வாழ்வாங்கு வாழ்ந்து அடுத்த கட்டத்திற்கு செல்ல விநாயகர் துணை இருக்கட்டும்.
அதேபோல எப்படி ? விநாயகர் பந்தலில் அரசியல் பேசக் கூடாது என்ற மரபு இருந்தாலும் கூட, நாம் ஒன்றைப் புரிந்து கொள்ள வேண்டும். விநாயகருக்கு தீங்கிழைக்கக் கூடிய எல்லோரையும் வெளியேற்ற வேண்டிய நேரம் இது. இன்று இந்து முன்னணியின் பத்திரிக்கையில் கூட விநாயகர் சதுர்த்தையில் மிக முக்கியமான விஷயத்தை சொல்லி இருக்கிறோம். கோவில் நகைகளை உருக்கி வங்கியில் டெபாசிட் செய்த கணக்கில் எந்த விதமான வெளிப்படை தன்மையும் இல்லை..
மூன்று லட்சம் கோடி ஒரு அரசு பட்ஜெட் போட்டும், வருமானம் இல்லை கோவில் பக்தர்கள் கொடுத்த நகைகளை, பிரித்து அதில் வரக் கூடிய சில கோடிகளை வைத்து தான் அரசாங்கம் நடத்த வேண்டும் என்று திராவிட முன்னேற்றக் கழகம் என்று பிச்சை எடுத்து பிழைப்பு நடத்திக் கொண்டு இருக்கிறது.
கோவிலில் ஒவ்வொருவரும் மனம் உருகி அரசுக்கு கொடுக்க வேண்டும் என்று கொடுத்தது அல்ல. அது கடவுளுக்காக அர்ப்பணிக்கப்பட்ட நகை. அது உடைந்த நகை பயன்படுத்த முடியாத நகையை உருக்கி இருக்கிறோம் என அரசு கூறுகிறது. தமிழ்நாட்டில் எத்தனையோ சாமானிய மக்கள் கேள்வி கேட்டும் கூட எவ்வளவு டன் நகையை உறுப்பினர் எப்படிப்பட்ட நகை ஒடுக்கப்பட்ட நகை எங்கே இருக்கிறது ? அதன் மூலமாக எவ்வளவு வருமானம் வந்து இருக்கிறது அதை என்ன செய்து இருக்கிறார்கள் என்பதற்கான பதில் குறையாது.
ஒவ்வொரு கோவிலிலும் ஆகம விதிகள் மீறப்படுகிறது. இன்று கேரளாவின் கம்யூனிஸ்ட் அரசு, ஐயப்ப மாநாட்டை கேரளாவில் நடத்துகிறார்கள். பேய், பேய் என்று கேட்டால் பிசாசு வருகிறது என்பது போல அந்த விழாவிற்கு சிறப்பு விருந்தினர் தமிழ்நாட்டின் முதல்வர் மு.க ஸ்டாலின் என்ன பேசுவார் என்று அனைவருக்கும் தெரியும்.
பீகாரில் ராகுல் காந்தி யாத்ராவில் கலந்து கொண்ட ஸ்டாலின் ராஜீவ்காந்தி அவர்களை என்று ராகுலை பார்த்து பேசினார். அதனால் நான் கேரளாவுக்கு செல்ல மாட்டேன் என பி.டி.ஆர் அவர்களையும் இன்று அறநிலைத் துறை அமைச்சரையும் அனுப்பி வைக்கிறார்.
கேரளாவில் கம்யூனிஸ்ட் அரசை ஒரு ஃபிராடு, 0 சபரிமலைக்காக பிரச்சனையை ஏற்படுத்தியவர்கள் என்று ஐயப்பனுக்காக மாநாடு போடுகிறார்கள். நீங்க தி.மு.க முருகனுக்கு மாநாடு எடுப்பது போல கொள்ளை அடிக்கிறவன் எல்லாம் ஒன்றாக சேர்ந்தால் நல்லவர்களாக விட முடியுமா ?.. இவர்கள் முருகனுக்கு மாநாடு எங்கு ? எடுக்கிறார்கள். கம்யூனிஸ்ட் ஐயப்பனுக்கு கேரளாவில் மாநாடு எடுத்தால் இந்து முன்னணி என்ன செய்ய முடியும்? இதையெல்லாம் கூட உங்களுடைய கவனத்திற்கு முன் வைக்கிறேன். சாமானிய மனிதன் என்னிடம் இருக்கக் கூடிய ஒரே ஒரு ஆய்வு தான் நம்முடைய வாக்கு மட்டும் தான், அதைப் போடும் போது ஒரு நிமிடம் யோசித்து, நம்முடைய மனதை எதற்குமே பறிகொடுக்காமல் நம்முடைய வாக்கைச் செலுத்த வேண்டும். அப்படி செய்தாலே ஜனநாயகம் உருப்பட்டு விடும்.
கோவில் நிலங்கள் ஆக்கிரமிப்பு சொத்துக்கள் கொள்ளை கோவில் பராமரிப்பு போன்ற வழிகாட்டு நெறிமுறைகள் உட்பட நீதிமன்ற தீர்ப்புகள் உள்ளிட்ட எதையும் அறநிலையத் துறை மதிக்கவே இல்லை. 1986 க்கு பிறகு தமிழகத்தில் கோவிலின் உடைய சொத்துக்கள் மட்டுமே ஒரு லட்சம் ஏக்கர் நாம் இழந்து இருக்கிறோம். 50 ஆண்டுகளில் கோவில் நிலங்களில் இருக்கக் கூடிய வணிக வளாகங்கள், 1 ரூபாய் வாடகைக்கு இருக்கிறார்கள். அதனால் தான் கோவில் சொத்துக்கள் மூலமாக அறநிலைத் துறைக்கு தமிழகத்தில் வரக் கூடிய மொத்த வருமானமே 300 கோடி ரூபாய் தான். ஐந்தரை லட்சம் ஏக்கர் இருக்கிறது, 46 ஆயிரம் கோவில்கள் இருக்கிறது, ஆனால் கோவில் சொத்துக்கள் மூலமாக வரக் கூடிய வருமானம் மட்டும் வெறும் 300 கோடி தான்.
அதையெல்லாம் தட்டிக் கேட்பதற்கான நேரம் இது தான். நீங்கள் இதையெல்லாம் நிச்சயம் தட்டிக் கேட்க வேண்டும். இதையெல்லாம் கேள்வியாக கேட்பதை நம்முடைய கடமையாக கருத வேண்டும். 2026 சட்டமன்ற தேர்தலில் நம்முடைய வாக்கை செலுத்துவதற்கு முன்பாக ஒரு நிமிடம் யோசித்துப் பார்க்க வேண்டும், விநாயகருக்கு எப்படி ? நாம் மரியாதை கொடுக்கிறோமோ ? அதேபோல நாம் செலுத்தும் வாக்கு இருக்கும் மரியாதை கொடுக்க வேண்டும் என்று கூறினார். தமிழகத்தில் இந்து தர்மம் நன்றாக இருக்க வேண்டும் என்றால் பெண்கள் ஒவ்வொருவரும் வீட்டில் கைப்பிடி விநாயகரை வைத்து குடும்பத்தோடு வழிபட்டு இதுபோல ஊர்வலம் செல்லக் கூடிய பெரிய விநாயகரோடு இணைத்து அதை நீங்கள் அனுப்ப வேண்டும். அடுத்த வருடம் இன்னும் விநாயகர் சதுர்த்தி பட்டிதொட்டியெல்லாம் கொண்டாடப்பட வேண்டும் என கேட்டுக்கொள்கிறேன்
இவ்வாறு அண்ணாமலை கூறினார்.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.