பொறுப்பு டி.ஜி.பி நியமனம்: உச்சநீதிமன்ற வழிகாட்டுதல் நெறிமுறைகளுக்கு எதிரானது - அண்ணாமலை கண்டனம்

“உச்சநீதிமன்ற வழிகாட்டுதல் நெறிமுறைகளுக்கு எதிராக, தமிழகக் காவல்துறைக்கு, பொறுப்பு டி.ஜி.பி நியமனம் செய்திருக்கிறது தி.மு.க அரசு” என்று பா.ஜ.க முன்னாள் மாநிலத் தலைவர் அண்ணாமலை கண்டனம் தெரிவித்துள்ளார்.

“உச்சநீதிமன்ற வழிகாட்டுதல் நெறிமுறைகளுக்கு எதிராக, தமிழகக் காவல்துறைக்கு, பொறுப்பு டி.ஜி.பி நியமனம் செய்திருக்கிறது தி.மு.க அரசு” என்று பா.ஜ.க முன்னாள் மாநிலத் தலைவர் அண்ணாமலை கண்டனம் தெரிவித்துள்ளார்.

author-image
WebDesk
New Update
Annamalai 15

பா.ஜ.க முன்னாள் மாநிலத் தலைவர் அண்ணாமலை

தமிழக காவல்துறையின் டி.ஜி.பி-யாக பணியாற்றிய சங்கர் ஜிவால் ஓய்வுபெற்ற நிலையில், தற்போது காவல்துறையின் நிர்வாகப் பிரிவு டி.ஜி.பி-யாக பணியாற்றிவரும் வெங்கட்ராமன் கூடுதல் பொறுப்பாக சட்டம் ஒழுங்கு பொறுப்பு டி.ஜி.பி-யாக நியமனம் செய்யப்பட்டுள்ளார்.

Advertisment

இந்நிலையில், “உச்சநீதிமன்ற வழிகாட்டுதல் நெறிமுறைகளுக்கு எதிராக, தமிழகக் காவல்துறைக்கு, பொறுப்பு டி.ஜி.பி நியமனம் செய்திருக்கிறது தி.மு.க அரசு” என்று குறிப்பிட்டுள்ள பா.ஜ.க முன்னாள் மாநிலத் தலைவர் அண்ணாமலை, “காவல்துறை அதிகாரிகளை, தங்கள் அரசியலுக்குப் பலிகடாவாக்கும் தி.மு.க அரசின் இந்த அதிகார துஷ்பிரயோகத்தை, வன்மையாகக் கண்டிக்கிறேன்.” என்று கண்டனம் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக பா.ஜ.க முன்னாள் மாநிலத் தலைவர் அண்ணாமலை தனது எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டிருப்பதாவது: “உச்சநீதிமன்ற வழிகாட்டுதல் நெறிமுறைகளுக்கு எதிராக, தமிழகக் காவல்துறைக்கு, பொறுப்பு டி.ஜி.பி நியமனம் செய்திருக்கிறது தி.மு.க அரசு.

Advertisment
Advertisements

மாநிலக் காவல்துறை தலைவர் நியமனம் தொடர்பாக, உச்சநீதிமன்றம், மிகவும் தெளிவான விதிமுறைகளை வகுத்துள்ளது. டி.ஜி.பி பொறுப்பில் இருப்பவர் ஓய்வு பெறுவதற்கு ஆறு மாதம் முன்பாகவே, அடுத்த டி.ஜி.பி பதவிக்குத் தகுதியான அதிகாரிகள் பட்டியலை அனுப்ப வேண்டும் என்று கூறியிருக்கிறது. சங்கர் ஜிவால் அவர்களைக் காவல்துறை தலைவராக நியமிக்கும்போதே, அவர் ஓய்வு பெறும் தினமும் தமிழக அரசுக்கும் தெரியும். 

ஆனால், தமிழகத்தில் அத்தனை உயர் அதிகாரிகள் பதவியையும், அரசியல் பதவியாக்கி வைத்திருக்கிறது தி.மு.க அரசு. ஒரு சில காவல்துறை உயர் அதிகாரிகள், தி.மு.க வட்டச் செயலாளர்களைப் போல பேசுவதையும் தமிழக மக்கள் கவனித்துக் கொண்டிருக்கிறார்கள்.

இந்த நிலையில், அடுத்த காவல்துறை டி.ஜி.பி பதவிக்குத் தகுதியான அதிகாரிகள் 6 பேர் இருக்க, பொறுப்பு டி.ஜி.பி நியமனம் மூலம், அவர்கள் பதவி உயர்வைத் தட்டிப் பறித்திருப்பதோடு, உச்சநீதிமன்ற வழிகாட்டுதலையும் புறக்கணித்திருக்கிறது தி.மு.க.

காவல்துறை அதிகாரிகளை, தங்கள் அரசியலுக்குப் பலிகடாவாக்கும் தி.மு.க அரசின் இந்த அதிகார துஷ்பிரயோகத்தை, வன்மையாகக் கண்டிக்கிறேன். உங்கள் ஆட்டம் விரைவில் முடிவுக்கு வரவிருக்கிறது என்பதையும், நினைவுபடுத்திக் கொள்கிறேன்.” என்று தெரிவித்துள்ளார்.

இதனிடையே, கோவையில் விநாயகர் சதுர்த்தி முன்னிட்டு  விசர்ஜன ஊர்வலத்தின் பொதுக் கூட்டம் இந்து முன்னணி சார்பில் பூ மார்க்கெட் அருகே உள்ள தெப்பக்குளம் மைதானத்தில் நடைபெற்றது. இதில் கலந்து கொண்ட பா.ஜ.க தேசிய பொதுக்குழு உறுப்பினர் அண்ணாமலை பேசியதாவது: “சென்னிமலை மதுரை, திருப்பரங்குன்றம் போன்ற பகுதிகளில் நடைபெற்றவைகளை நாம் பார்த்தோம். மக்கள் எழுச்சியாக ஒரு இடத்தில் வந்து கேள்விகள் எழுப்ப வேண்டும் என்பதற்காக இந்து முன்னணியின் தலைவர்கள் அனைவரும் ஒன்றிணைந்து முருகர் மாநாட்டை ஏற்பாடு செய்து இருந்தார்கள்.

தமிழர்களின் வரலாற்றில் சாதாரண பொதுமக்கள் கைக்குழந்தையோடு, பெண்கள் எதையும் பொருட்படுத்தாமல் அந்த நிகழ்வுக்கு ஐந்து நாட்களுக்கு முன்பு,  6 லட்சத்திற்கும் மேற்பட்டோர் வந்து தரிசனம் செய்து விட்டு தன் சார்பில். அதேபோல முருகர் மாநாடு நடைபெற்ற தினத்தன்று ஒரு ஏழரை இலட்சம் பேர் வந்து தரிசனம் செய்து சென்றார்கள்.

அனைவரும் மிகப் பொறுமையாக அமர்ந்து, நிகழ்ச்சியை முடியும் வரை இருந்து தரிசனம் செய்து சென்றார்கள்.

கந்த சஷ்டி பாராயணம் தமிழ்நாடு முழுவதும் படிக்க வேண்டும் என்ற படித்த பொழுது கூட சாரில் இருந்து ஒருவரும் எழுந்து செல்லவில்லை. இதெல்லாம் தமிழகத்தில் ஆன்மீகம் எந்த அளவுக்கு மனதில் இடம்பெற்று உள்ளது. என்பதற்கு சிறிய உதாரணங்கள். குறிப்பாக சில அரசியல் கட்சி தலைவர்கள், ஆன்மீகத்திற்கு எதிராக நடந்து கொள்ளும் பொழுது மக்கள் தன்னெழுச்சியாக வருகிறார்கள். இதற்கு முருகர் மாநாடு ஒரு சாட்சியாக அமைந்தது. 

திராவிட முன்னேற்றக் கழகத்தின் ஆட்சி நான்கு ஆண்டுகள் முடிந்து இருக்கிறது. எப்பொழுதும் ஒரு காவல் துறை அதிகாரி ரிட்டைட் ஆகும் முன்பு பிரிவு உபச்சார விழா நடைபெறும். நம்முடைய முதல்வர் ஸ்டாலின் அவர்கள் 2026 அன்று ரிட்டயர்டு ஆக போகிறார். அதனால் அவரே பிரிவு உபச்சார விழாவாக ஜெர்மனிக்கும், லண்டனுக்கும் சென்று இருக்கிறார். 

எப்படி எல்லோரும் ரிட்டயர்டு ஆவார்களோ அதே போல குடும்பத்தோடு ஜெர்மனிக்கு சென்று இருக்கிறார். அதே போல, அவர்களுடைய தேர்தல் வாக்குறுதியை எடுத்து படித்தீர்களானால், ஆட்சிக்கு வந்தால் இந்து கோயிலை புணரமைப்பதற்காக ஓராண்டுக்கு ஆயிரம் கோடி ஒதுக்கவும் எனக் கூறினார்கள்.

இன்று நான்கு ஆண்டுகள் முடிவடைந்து இருக்கும் நிலையில் நான்காயிரம் கோடி ஒதுக்கி இருக்க வேண்டும். மொத்தமாக பட்ஜெட்டை கூட்டி பார்த்தீர்கள் என்றால் திராவிட முன்னேற்றக் கழகம் கோவிலுக்காக ஒதுக்கப்பட்ட நிதி 155 கோடி ரூபாய் மட்டும் தான். நான்காயிரம் கோடி செலவு செய்திருக்க வேண்டிய இடத்தில் வெறும் 155 கோடி மட்டுமே ஒதுக்கி இருக்கிறார்கள். இப்படித் தான் அவர்கள் கணக்கு மொத்தமுமே இருக்கும். கும்பாபிஷேகம் கூட யாரோ ? நடத்துவார்கள் யாரோ ? கோவிலுக்கு வெள்ளை அடிப்பார்கள்.

யாரோ ஐயர் சாமி வந்து பூஜை செய்து விட்டு செல்வார்கள். ஆனால், கடைசி நேரத்தில் அறநிலைத் துறை அமைச்சர் சேகர்பாபு வந்து போட்டோவிற்கு போஸ் கொடுக்க நிற்பார். அவரே வெள்ளை அடித்து பூசி பூஜை செய்தது போல  ஆயிரம் ஆவது கோவில் பூஜை என சொல்வார்கள். இதை யாரும் நம்ப போவது கிடையாது. ஒரு சின்ன துரும்பை கூட இல்லாமல் கடைசியில் போட்டோவுக்கு போஸ் கொடுப்பார். இதை இவர்கள் நான்கு ஆண்டு சாதனையாக பார்த்துக் கொண்டு இருக்கிறார்கள். தி.க வை பொருத்த வரை மேடையில் இருக்கும் நான்கு பேர் மட்டும் தான் அந்தக் கட்சியில் இருக்கிறார்கள். அந்த நான்கு பேர் போன பிறகு வேறு யாருமே இருக்க மாட்டார்கள்.

அவர்களோடு தி.மு.க காரர்கள் மேடை ஏறினார்கள். உதயநிதி ஸ்டாலின் ஏறினார், சனாதன தர்மத்தை வேரறுப்போம் என கூறினார். 

அது உச்ச நீதிமன்றம் வரை வழக்காக மாறியது. உச்ச நீதிமன்றம் சொல்லியது சனாதன தர்மம் வேறு இந்து தர்மம் வேறு எனக் கூறியது. அதே மேடையில் உதயநிதிக்கு முன்பு வீரப்பன் பேசினார். சனாதன தர்மமும் இந்து தர்மமும் ஒன்று தான் என பேசினார். அதன் பின்பு உதயநிதி சனாதன தர்மத்தை டெங்குவை போல ஒழித்து தள்ளுவோம் என கூறினார்.

இதையெல்லாம் நான் உங்களுக்கு ஞாபகப்படுத்துகிறேன். ஏனென்றால் நமக்கு ஞாபகம் வருதே இருக்கும் இதையெல்லாம் மறந்து விடக் கூடாது என்பதற்காக நான் ஞாபகப்படுத்துகிறேன்.

நான்கு வருடம் மிக மோசமான ஆட்சி நடத்தினார்கள் அதை நான் உங்களுக்கு ஞாபகப்படுத்துகிறேன்.. டி.ஆர்.பாலு எத்தனை கோவில்களை உடைத்தேன் எத்தனை சிலைகளை உடைத்தோம் என்பதை கூறி மார்க்கட்டி கொண்டார்.

இன்று தமிழ்நாடு முழுவதுமே அறநிலையத் துறை எதற்காக தங்களை தணிக்கைக்கு உட்படுத்திக்கொள்ள மறுக்கிறது. அவர்களே அவர்களை தணிக்கை செய்து கொள்வார்கள். மத்திய அரசு தணிக்கையாளர் அனைவரையும் தணிக்கை செய்வார். னால் தமிழ்நாடு கோவில் மட்டும் அதற்கு அனுமதி கொடுக்கவில்லை. துபோல் நாம் எத்தனை கோவில்களுக்கு போய் காசு போடுகிறோம் அதை யார் ? உடைக்கிறார்கள் என்று நாம் பார்ப்பது இல்லை. நாம் இதையெல்லாம் உணர்ந்து கொள்ள வேண்டும்.  2021 ல் திராவிட கழகம் ஆட்சிக்கு வந்த பொழுது விநாயகர் சதுர்த்தியை கொண்டாடக் கூடாது என்பதற்காக எவ்வளவு இடையூறு செய்தார்கள்.

பிள்ளையார் செய்யும் இடத்தில் பிரச்னை. அப்படியும் மீறி பிள்ளையார் செய்தால் அதை வாங்கும் இடத்தில் பிரச்சனை. வீட்டுக்கு கொண்டு வந்தீர்கள் என்றால் வீட்டிலேயும் பிரச்னை.

2021-ல் அவ்வளவு பிரச்னைகள் நடந்து கொண்டு இருந்த பொழுது உதயநிதி ஸ்டாலின் தன்னுடைய எக்ஸ் வலைதள பக்கத்தில், தையல் தொல்லை யாரை பிடித்துக் கொண்டு இருப்பது போன்று ஒரு புகைப்படத்தை பதிவிடுகிறார். இதை மீடியாக்காரர்கள் கேள்வியாக எழுப்பும் பொழுது ஒரு பொம்மையை கொடுத்தார்கள் அதைத்தான் வாங்கி கையில் வைத்துக் கொண்டு இருந்தேன் என பதில் கூறினார். அடிப்படையில் இந்த திராவிட முன்னேற்றக் கழகத்தின் குடும்பம் ஒரு மதத்திற்கு எதிராக தொடர்ந்து செயலாற்றி கொண்டு இருக்கிறது..

ஆனால். அங்கு துர்கா அம்மாவை பார்த்தீர்கள் என்றால் அப்பொழுது கோவிலுக்கு சென்று ஒரு புகைப்படம் எடுத்து அதை பதிவு செய்து விடுவார். ஆனால் தமிழ்நாட்டு மக்கள் இதயத்தில் தான் யோசிப்போம் மூளையின் வழியாக யோசிப்பது இல்லை அதனால் அவர்கள் இப்படி எல்லாம் செய்து மக்களை ஏமாற்றுகிறார்கள்.

இதுபோல மாத மாதம் ஒவ்வொரு கோவிலுக்கு சென்று வந்து புகைப்படம் போட்டு, எங்கள் குடும்ப மக்களுக்கு எதிரானது அல்ல என்பதை பதிவு செய்வார்கள்.

தி.மு.க வில் ஏதாவது பிரச்சனை ஏற்படும் பொழுது அண்ணன் சேக்கர்பாபுவின் தாடியும் அதிகரிக்கும். திடீரென்று வெள்ளை வலையே என்று தாடி வைத்துக்கொண்டு வருவார். அப்பொழுது எல்லாம் மக்கள் அவர் மீது கோபமாக இருக்கிறார்கள் என்று அர்த்தம். உடனே அவர் சபரிமலைக்கு கிளம்பி சென்று விடுவார். இது போன்ற ஏமாற்ற வேலைகளை நாம் நன்கு புரிந்து கொள்ள வேண்டும். 

தமிழர்கள் நாம் நல்லவர்களாக இருப்பது தான் நமக்கு பிரச்சனையாக இருக்கிறது. அதுதான் தி.மு.க வுக்கு சாதகமாக இருக்கிறது. போனா போங்கடா தவறு செய்யாதீர்கள் எனக் கூறி அவர்களை வாக்கு செலுத்தி மீண்டும் மாற்றிக் கொண்டு வந்து விடுகிறோம். 

இந்த முறை அந்த தவறை செய்யாமல் ஒரு மதத்திற்கு எதிராக ஒரு அரசு தொடர்ந்து செயல்பட்டுக் கொண்டு இருப்பதை கண்டித்து நீங்கள் ஓட்டு போடும் பொழுது ஒரு பத்து விஷயத்தை வாக்கு செலுத்த வேண்டும்.

அதைத் தான் நான் உங்களுக்கு அறிவுறுத்துகிறேன்.. கல்வி பெண்களுக்கான பாதுகாப்பு ஆகியவை மிகவும் முக்கியம்.. செப்டம்பர் 10 ஆம் தேதி கேரளாவில் கம்யூனிஸ்ட் அரசு, ஐயப்பனுக்கு விழா எடுக்கிறார்கள்.

ஆகஸ்ட் மாதம் தமிழ்நாட்டில் திமுகவுக்கு விழா எடுக்கிறார்கள். அகில உலக முருகன் மாநாடு பழனியில் நடைபெற்றது.

ஆனால் ஸ்டாலின் ஐயா எவ்வளவு விவரமானவர் என்றால், அந்த மேடைக்கு சென்றால் பிரச்சினையாகும் என்று அந்த மேடைக்கு செல்லவில்லை.

சென்னையில் இருந்து முதல் நாள், வீடியோ கான்பரன்ஸ் மூலம் மக்களுக்கு ஹாய் சொல்லிவிட்டு சென்றார். இரண்டாவது நாள் உதயநிதி ஸ்டாலின் அவரும் வீடியோ கான்பிரன்சிங்கில் வந்து பேசினார்.

சேக்கர்பாபு மட்டும் தாடியை பெரிதாக வளர்த்துக் கொண்டு.. சில சாமிகளை அருகில் உட்கார வைத்துக் கொண்டு. தி.மு.க தான் முருகரை காப்பாற்றுகிறது என்பது போல வேடம் போட்டார். அப்படியானால் இந்து முன்னணி எதற்காக தமிழ்நாட்டில் இருக்க வேண்டும்?.. தி.மு.க வின் கூட்டத்தைக் காட்டிலும் இந்து முன்னணி ஏற்பாடு செய்த முருக பக்தர்கள் மாநாட்டில் அவ்வளவு லட்சம் பக்தர்கள் திரண்டு இருக்கிறார்கள்.

நாம் செய்யும் வேலையை அவர்கள் எடுத்து, பவுடர் அடித்து செய்கிறார்கள் என்பதை நாம் புரிந்து கொள்ள வேண்டும்.. அந்த மாநாட்டில் 21 தீர்மானங்கள் போட்டு இருக்கிறார்கள் . அதில் எட்டாவது தீர்மானம் என்னவென்றால், இந்து அறநிலை துறை கோவில்கள் தமிழ்நாட்டில் எங்கெல்லாம் இருக்கிறதோ, அங்கெல்லாம் கல்லூரி பள்ளிகளில் படிக்கும் குழந்தைகளை கூட்டி வந்து கந்த சஷ்டி பாராயணம் படிக்க வைப்போம் என்பது தான். இன்று ஓராண்டு முழுமையாக முடிந்து இருக்கிறது.. ஆனால் இந்த ஓர் ஆண்டுகளில் ஏதாவது ஒரு அறநிலையத் துறை கோவில்களில், யாராவது ஒரு குழந்தையை தி.மு.க அரசு கோவிலுக்குள் அழைத்து வந்து கந்த சஷ்டி பாராயணம் படிக்க வைத்ததா ?   கோபம் மக்களுக்கு அதிகரித்தவுடன் எதை கேட்டால் சந்தோஷப்படுவார்களோ அதை கூறி அவர்கள் தப்பித்துக் கொள்கிறார்கள். இதே தி.மு.க வின் வாடிக்கையாக அமைந்து இருக்கிறது.

2026 தேர்தல் வருவதற்கு முன்பாக, தி.மு.க அரசு இதுபோன்ற பல கட்டு கதைகளை அவிழ்த்து விடுவார்கள். மக்கள் அதை நம்பக் கூடாது என்பதற்காக முதலிலேயே நான் உங்களுக்கு இதை சொல்லிக் கொள்கிறேன். எனக்கு முன்பு இங்கு பேசிய தலைவர்கள், காவல்துறை பற்றி அவர்களுக்கு இருக்கக் கூடிய மனஸ்தாபலங்களை சிறிதளவு எடுத்துச் சொன்னார்கள். ஆனால் இன்று இங்கு இருக்கக் கூடிய காவல் துறை அதிகாரிகள், உண்மையாளுமே பாவமாக இருக்கிறார்கள்.

தமிழ்நாட்டில் டி.ஜி.பி யாக ஒருவர் பொறுப்பேற்று இருக்கிறார்.. டி.ஜி.பி யாக பொறுப்பு ஏற்ப அதை பார்ப்போம் ஆனால் பொறுப்பு டி.ஜி.பி யாக பொறுப்பேற்பதை யாராவது பார்த்து இருக்கிறோமா??.. பொறுப்பு டி.ஜி.பி பொறுப்பேற்றார் என்பதை எங்காவது பார்த்திருக்கிறோமா ? அதுபோன்ற ஒரு அவலத்தை தி.மு.க அரசு அரங்கேற்று இருக்கிறது. சங்கர் ஜிவால் அவர்கள் ரிட்டயர்டு ஆகி இருக்கிறார்.. அவர் ரிட்டயர்டு ஆகும் தினத்தன்று புது டி.ஜி.பி பொறுப்பேற்க வேண்டும்.. அவருக்குப் பிறகு ஆறு பேர் டி.ஜி.பி ஆக பொறுப்பேற்க வெயிட்டிங் லிஸ்டில் இருக்கிறார்கள். ஆறு பேரில் முதல் மூன்றில் ஒருவர் பொறுப்பேற்க வேண்டும்.. உச்ச நீதிமன்றம் என்ன சொல்கிறது என்றால் ஒரு டி.ஜி.பி, ரிட்டயர்டு ஆவதற்கு முன்பே லிஸ்ட்டை எங்களுக்கு அனுப்புங்கள் அதில் நாங்கள் ஒருவரை தேர்ந்தெடுத்து கொடுக்கிறோம் என கூறுகிறது. ஆனால். ஆறு மாதமாக ஒரு பெயரை கூட அனுப்பவில்லை. அதில் லிஸ்ட் எடுத்து பார்க்கிறார்கள் சீமாக அகர்வால் நம்முடைய ஆட்சிக்கு தடையாக இருப்பார். அதனால், அவர் வேண்டாம், அப்படி ஆறு பேரை பார்த்து விட்டு யாருமே நமக்கு ஒத்து வர மாட்டார்கள் என தெரிந்து கொண்டு அப்படியே விட்டு இருக்கிறார்கள்.

ஒன்பதாவதாக சீனியாரேட்டில் யார் இருக்கிறார்களோ அவருக்கு டி.ஜி.பி என்கிற அந்தஸ்தை கொடுக்க முடியாது. அதனால். முதல்வர் என்ன செய்கிறார் என்றால் பொறுப்பு டி.ஜி.பி என்கிற பொறுப்பை கொடுக்கிறார். அப்படி இருக்கும் பொழுது காவல்துறை எப்படி விளங்கும் ??.. காவல் துறையை பொருத்த வரை  தான மீது மரியாதை இருக்க வேண்டும், மேல இருக்கக் கூடிய அதிகாரிக்கு மரியாதை இருக்கும்.. அந்தப் பொறுப்பேற்கும் நிகழ்வில் முதல் எட்டு இடத்தில் இருக்கும் அதிகாரிகள் செல்லவே இல்லை... மேல் இருப்பவர்கள் அவர்களுக்கு சரியான முறையில் இன்ஸ்டிரக்சன் கொடுப்பது இல்லை அதனால் கையை கட்டி போட்டு விட்டு ஓடு என்றால் காவல் துறை எப்படி ஓடும்.. இன்று காலையில் இருந்து இதைப் பற்றி எந்த ஒரு அரசியல் கட்சியும் வாய் திறந்து பேசவில்லை.. இவ்வளவு பெரிய தவறு நடந்து இருக்கிறது.. இதற்கு முன்பு தமிழ்நாட்டில் இது போன்ற தவறு நடந்ததே கிடையாது.. இதை யாருமே கேள்வி கேட்கவில்லை என்றால் காவல்துறை என்ன செய்யும்... அதே நேரத்தில் இந்தியாவில் இருக்கக்கூடிய பெரும் நகரங்களில், 31 நகரங்களில் ஸ்டடி செய்யும் பொழுது எங்கு பாதுகாப்பு பெண்களுக்கு இருக்கும் என பார்க்கும் பொழுது, சென்னை 31 நகரத்தில் 21 வது நகரத்தில் வந்து இருக்கிறது..

சென்னையில் பாதுகாப்பு என்பது இந்திய அளவில் குறிப்பாக பெண்களுக்கு பாதுகாப்பு இல்லை என்பதில் 21-வது இடத்தை பிடித்து இருக்கிறது.. 

மத்திய அரசு நடத்தக்கூடிய இந்த சர்வேயில் பெண்கள், நூற்றுக்கு ஆறு பெண்கள் மட்டுமே பாதுகாப்பாக இருக்கிறோம் என சொல்கிறார்கள்... எவ்வளவு பெரிய தலைகுனிவாக உள்ளது.. இன்று ஒவ்வொரு வண்டிகளும் காவல்துறை அதிகாரிகள் கான்ஸ்டபிள் செல்கிறார்கள்.. கலவரத்தை ஏற்படுத்துவது இங்கு இருக்கக் கூடிய அதிகாரிகள் அல்ல இதை உண்டாக்குவதே அரசு தான்.. பொறுப்பு டி.ஜி.பி பங்கேற்கும் விழாவில், முதல் எட்டு பேர் பங்கேற்கவில்லை என்றால் எப்படி ? ஒரு மீட்டிங்கில் முகத்தை பார்த்து பேசிக்கொள்ள முடியும்? .. இதுதான் தமிழகத்தின் சட்ட ஒழுங்கு இலட்சணம்... இவர்களாக அவர்கள் நமக்கு ஒத்து வர மாட்டார்கள் என நினைத்துக் கொண்டார்கள்.

இப்படியாக என்று எட்டு பேரைக் கழித்து இருக்கிறார்கள். இப்படியே கழித்து கொண்டு போனால் எத்தனை பேரை இவர்களால் கழித்து விட முடியும். இப்படிப்பட்ட ஒரு அரசு இருக்கும்பொழுது தமிழகத்தின் சட்டம் ஒழுங்கு எப்படி ? இருக்கும் என்பதை நினைத்து பார்க்க வேண்டும். 

தமிழகத்தில் இன்று அரசு பள்ளி தனியார் பள்ளி பற்றி பேசுகிறோம்.. ஆனால் எந்த அளவிற்கு திராவிட முன்னேற்றக் கழக ஆட்சியில் அரசு பள்ளி முழுவதுமாக முடிவிட்டார்கள் என்பதற்கு உதாரணமாக உள்ளது.. தமிழகத்தில் இன்று 62% குழந்தைகள் தனியார் பள்ளியில் படிக்கிறார்கள்.. 37 சதவீதம் குழந்தைகள் அரசு பள்ளிகள் படிக்கிறார்கள்.

தி.மு.க ஆட்சிக்கு வந்த பொழுது 43 சதவீதம் குழந்தைகள் அரசு பள்ளியில் படித்தார்கள்.. இன்று 37 சதவீதமாக அது குறைந்து இருக்கிறது. கடந்த நான்கு ஆண்டுகளில் ஏழு சதவீதம் குறைந்து இருக்கிறது.. ஆனால் பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் என அன்பில் மகேஷ் பொய்யாமொழி இருக்கிறார்.

அவருடைய வேலை என்னவென்றால் உதயநிதி ஸ்டாலின் எங்கு செல்கிறாரோ அங்கெல்லாம் அரிகில் கொண்டு சென்று விடுவார். பள்ளிக் கல்வித் துறை என்பதை மிகப்பெரிய பொறுப்பு ஐயன் கக்கன் இருந்த இடம்.. ஆனால் இன்று பெட்டர் மாஸ் லைட் எடுத்துக் கொண்டு செல்பவன் எல்லாம் கல்வித்துறை அமைச்சர் ஆக இருக்கிறார்.

தமிழகத்தை பொறுத்தவரை மக்களுக்கு ஏதோ என்றும் ஆனால் அரசியல்வாதிகளுக்கு வேறு ஏதோ வேண்டும். இரண்டும் மார்ச் ஆகாததால் வண்டி இப்படி ஓடிக் கொண்டு இருக்கிறது. அதனால், நிச்சயமாக 2026 தேர்தலில், அன்னைக்கு நிச்சயமாக நீங்கள் எல்லாம் விநாயகருக்கு ஆக ஒரு முறை யோசித்து,  அரசு ஒரு தர்மத்திற்கு எதிராக இருப்பதால் உங்கள் யோசித்து வாக்களிக்க வேண்டும். வீரகோபாலன் ஐயா இந்து முன்னணியை ஆரம்பித்த பொழுது,  ஒரு விநாயகரைக் கொண்டு செல்வதற்கே சிரமமாக இருந்த பொழுது ஒரு பஞ்சாயத்தில் ஒரு விநாயகர் ஆவது வைத்து எடுத்துச் செல்ல வேண்டும் என ஆசைப்பட்டார். ஆனால் இன்று, லட்சக் கணக்கான விநாயகர்களை வைத்து ஊர் பலமாக எடுத்துச் சென்று கொண்டு இருக்கிறோம். இதில் தனிப்பட்ட முறையில் யாருக்கும் எந்த லாபமும் இல்லை. அவ்வளவு நேர்த்தியாக விநாயகர் வைத்து ஊர்வலம் எடுத்துச் செல்கிறார்கள்.

அதனால், நாம் அனைவருமே இந்து முன்னணியை ஆதரிக்க வேண்டிய கடமையும் கட்டாயமும் இருக்கிறது. நமக்கு தமிழகத்தில் ஏதாவது பிரச்சனை என்றால் நமக்காக பேசக்கூடிய ஒரே அமைப்பு தமிழகத்தில் இருக்கிறது என்றால் அது இந்து முன்னணி மட்டும்தான்” என்று அண்ணாமலை கூறினார்.

Annamalai

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us: