Advertisment

9 மாதங்களில் 3 முறை ஆவின் பால் பொருட்கள் விலை உயர்வு: அண்ணாமலை கண்டனம்

தி.மு.க அரசு கடந்த கடந்த 9 மாதத்தில் மூன்று முறை ஆவின் பால் பொருட்களின் விலை உயர்த்தப்பட்டதற்கு தமிழ்நாடு பா.ஜ.க தலைவர் அண்ணாமலை கண்டனம் தெரிவித்துள்ளார்.

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
Annamalai, Annamalai BJP, Annamalai bjp, Tamilnadu, Annamalai, Tamilnadu, India

தமிழக அரசு கடந்த கடந்த 9 மாதத்தில் மூன்று முறை ஆவின் பால் பொருட்களின் விலை உயர்த்தப்பட்டதற்கு தமிழ்நாடு பா.ஜ.க தலைவர் அண்ணாமலை கண்டனம் தெரிவித்துள்ளார்.

Advertisment

ஆவின் ஆரஞ்ச் பால் லிட்டருக்கு 12 ரூபாய் உயர்த்தப்பட்ட நிலையில் தற்போது நெய் விலையும் லிட்டருக்கு 50 ரூபாய் உயர்த்தப்பட்டுள்ளது. இந்த விலை உயர்வு நுகர்வோர்களை கவலையடைய வைத்துள்ளது.

இந்த நிலையில், தி.மு.க அரசு கடந்த கடந்த 9 மாதத்தில் மூன்று முறை ஆவின் பால் பொருட்களின் விலை உயர்த்தப்பட்டதற்கு தமிழ்நாடு பா.ஜ.க தலைவர் அண்ணாமலை கண்டனம் தெரிவித்துள்ளார்.

இது குறித்து பா.ஜ.க மாநிலத் தலைவர் அண்ணாமலை தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டிருப்பதாவது: “ஆவின் பால் விலையை உயர்த்தி வாக்களித்த மக்களை வஞ்சித்து வந்த இந்த திறனற்ற திமுக அரசு, இது போதாதென்று மீண்டும் ஒருமுறை ஆவின் பொருட்களின் விலையை உயர்த்தியுள்ளதை தமிழ்நாடு பா.ஜ.க வன்மையாக கண்டிக்கிறது.

கடந்த 9 மாதத்தில் மூன்று முறை ஆவின் பால் பொருட்களின் விலை உயர்த்தப்பட்டிருக்கிறது.

இதற்கு முன்பு ஆவின் ஆரஞ்சு நிற பால் விலையை 12 ரூபாய் உயர்த்தியதன் விளைவாக அதன் விற்பனை சரிந்தது.

தனியார் பால் மற்றும் பால் பொருட்கள் விற்பனையாளர்களுக்கு சாதகமாக செயல்பட்டு ஆவின் நிறுவனத்திற்கு மூடுவிழா நடத்துவதற்கு திட்டமிட்டுள்ளதா திறனற்ற திமுக அரசு?” என்று கேள்வி எழுப்பியுள்ளார்.

"தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil"

Bjp Dmk Annamalai Aavin
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment