Advertisment

‘கை, காலை வெட்டுவேன்’ பெண் தாசில்தாருக்கு வி.சி.க மாவட்ட செயலாளர் மிரட்டல் வீடியோ; அண்ணாமலை கண்டனம்

சின்ன சேலம் வருவாய் கோட்டாசியர் இந்திராவை வி.சி.க கள்ளக்குறிச்சி மாவட்ட செயலாளர் கை, காலை வெட்டுவேன் என மிரட்டல் விடுத்த வீடியோ வைரலானதைத் தொடர்ந்து பா.ஜ.க மாநிலத் தலைவர் அண்ணாமலை கண்டனம் தெரிவித்துள்ளார்.

author-image
WebDesk
New Update
Annamalai condemns to VCK District Secretary threaten to woman Tashildar, ‘கை, காலை வெட்டுவேன்’ பெண் தாசில்தாருக்கு வி.சி.க மாவட்ட செயலாளர் மிரட்டல் வீடியொ, அண்ணாமலை கண்டனம், Annamalai condemns to VCK District Secretary threaten to woman Tashildar

பெண் தாசில்தாருக்கு வி.சி.க மாவட்ட செயலாளர் மிரட்டல் வீடியொ, அண்ணாமலை கண்டனம்

சின்ன சேலம் வருவாய் கோட்டாசியர் இந்திராவை வி.சி.க கள்ளக்குறிச்சி மாவட்ட செயலாளர் கை, காலை வெட்டுவேன் என மிரட்டல் விடுத்த வீடியோ வைரலானதைத் தொடர்ந்து பா.ஜ.க மாநிலத் தலைவர் அண்ணாமலை கண்டனம் தெரிவித்துள்ளார்.

Advertisment

கள்ளக்குறிச்சி மாவட்டம், சின்னசேலம் வருவாய் வட்டாட்சியர் இந்திரா-வை வி.சி.க கள்ளக்குறிச்சி மாவட்டச் செயலாளர் தனபால் தகாத வார்த்தைகளால் பேசி, கை காலை வெட்டுவேன் என்று மிரட்டல் விடுத்த வீடியோவை தனது ட்விட்டரில் பகிர்ந்துள்ள பா.ஜ.க மாநிலத் தலைவர் அண்ணாமலை, கண்டனம் தெரிவித்துள்ளார்.

மேலும், பெண் அதிகாரிக்கு மிரட்டல் விடுத்த நபர்களைக் கைது செய்து கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும், அரசு அதிகாரிகளுக்கான பாதுகாப்பை உறுதி செய்ய வேண்டும் என்றும் தி.மு.க அரசை அண்ணாமலை வலியுறுத்தியுள்ளார்.

இது குறித்து பா.ஜ.க மாநிலத் தலைவர் அண்ணாமலை தனது ட்விட்டர் பக்கத்தில் கூறியிருப்பதாவது: “கள்ளக்குறிச்சி மாவட்டம், சின்னசேலம் வருவாய் வட்டாட்சியர் திருமதி இந்திரா அவர்களை, விடுதலை சிறுத்தைகள் கட்சி மாவட்டச் செயலாளர் தனபால் என்பவர், தகாத வார்த்தைகளால் பேசி, கை காலை வெட்டுவேன் என்று மிரட்டல் விடுத்திருக்கிறார்.

அனுமதி இல்லாமல் அமைத்த கொடிக் கம்பத்தை அகற்ற வேண்டும் என உத்தரவிட்ட பெண் வட்டாட்சியரை, காவல்துறை முன்னிலையில் பகிரங்கமாக மிரட்டல் விடுக்கும் தைரியம் எங்கிருந்து வந்தது?

திறனற்ற தி.மு.க ஆட்சியில், அரசு அதிகாரிகள் கொலை செய்யப்படுவதும், மிரட்டப்படுவதும் தொடர்கிறது. நடப்பது மக்களுக்கான ஆட்சியா அல்லது சமூக விரோதிகளுக்கான ஆட்சியா?

உடனடியாக, பெண் அதிகாரிக்கு மிரட்டல் விடுத்த நபர்களைக் கைது செய்து கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும், அரசு அதிகாரிகளுக்கான பாதுகாப்பை உறுதி செய்ய வேண்டும் என்றும் தி.மு.க அரசை வலியுறுத்துகிறேன்.” என்று தெரிவித்துள்ளார்.

"தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil"

Annamalai
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment