/indian-express-tamil/media/media_files/2025/09/01/annamalai-stalin-germany-2025-09-01-20-35-14.jpg)
ஜெர்மனி சென்ற முதலமைச்சர் மு.க. ஸ்டாலின், கொலோன் பல்கலைக்கழகத்தில் தமிழ்த்துறை நூலகத்தைப் பார்வையிட்டதாக எக்ஸ் தளத்தில் வீடியோ மற்றும் புகைப்படங்களை வெளியிட்டார். Photograph: (x/@mkstalin)
முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் வெளிநாட்டு முதலீடுகளை ஈர்ப்பதற்காக ஐரோப்பிய நாடுகளுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளார். ஜெர்மனி சென்ற முதலமைச்சர் மு.க. ஸ்டாலின், கொலோன் பல்கலைக்கழகத்தில் தமிழ்த்துறை நூலகத்தைப் பார்வையிட்டதாக எக்ஸ் தளத்தில் வீடியோ மற்றும் புகைப்படங்களை வெளியிட்டார்.
பழந்தமிழ் இலக்கியச் சுவடிகள், பல முதற்பதிப்புகள் என 40 ஆயிரம் அரிய தமிழ் நூல்களைக் கொண்ட கொலோன் பல்கலைக்கழகத் தமிழ்த்துறை நூலகத்தைப் பார்வையிட்டேன்.
— M.K.Stalin (@mkstalin) September 1, 2025
ஐரோப்பாவில் தமிழியல் ஆய்வுகளுக்கான முக்கிய மையமான #Köln தமிழ்த்துறை மூடப்படுவதைத் தடுக்க, ஆட்சிக்கு வந்ததுமே 1.25 கோடி ரூபாயை… pic.twitter.com/3OuvGFekyu
இது குறித்து மு.க.ஸ்டாலின் தனது எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டிருப்பதாவது: “பழந்தமிழ் இலக்கியச் சுவடிகள், பல முதற்பதிப்புகள் என 40 ஆயிரம் அரிய தமிழ் நூல்களைக் கொண்ட கொலோன் பல்கலைக்கழகத் தமிழ்த்துறை நூலகத்தைப் பார்வையிட்டேன்.
ஐரோப்பாவில் தமிழியல் ஆய்வுகளுக்கான முக்கிய மையமான கொலோன் தமிழ்த்துறை மூடப்படுவதைத் தடுக்க, ஆட்சிக்கு வந்ததுமே 1.25 கோடி ரூபாயை வழங்கியது நமது திராவிட மாடல் அரசு.
அது வீணாகவில்லை என்பதை இங்குள்ள டாக்டர் ஸ்வென் வொர்ட்மேன், ஷாரோன் நாதன், டாரியா லாம்ப்ரிசெத் (Dr. Sven Wortmann, Mr. Sharon Nathan, Mrs. Daria Lambrecht) ஆகியோரின் தமிழார்வத்தைக் கண்டபோது அறிந்து மகிழ்ந்தேன்.
சென்னை, மதுரையைத் தொடர்ந்து கோவை, திருச்சியிலும் மாபெரும் நூலகங்களை அனைவருக்குமான அறிவு மையங்களாக அமைத்து வரும் நமது முயற்சிகளுக்கு நல்லூக்கமாக இந்த 'கொலோன் நூலகப் பார்வை' அமைந்தது.” என்று தெரிவித்தார்.
முதலமைச்சர் மு.க. ஸ்டாலின், ஜெர்மனியில் கொலோன் பல்கலைக்கழக தமிழ்த் துறை நூலகத்தைப் பார்வையிட்டதைக் குறிப்பிட்டு தமிழக பா.ஜ.க முன்னாள் தலைவர் அண்ணாமலை, அந்த பல்கலைக்கழகத்தின் தமிழ்த்துறை மூடபட்டுவிட்டதாகவும், இது கவுண்டமணியின், ‘போன் ஒயர் பிஞ்சு ஒரு வாரம் ஆச்சு’ என்ற நகைச்சுவைக் காட்சிக்கு சிறிதும் குறைந்ததல்ல என்று கடுமையாக விமர்சித்துள்ளார்.
ஜெர்மனி நாட்டுக்குச் சுற்றுலா சென்றிருக்கும் முதலமைச்சர் திரு @mkstalin அவர்கள், கொலோன் பல்கலைக்கழக தமிழ்த் துறை நூலகத்தைப் பார்வையிட்டதாகத் தெரிவித்துள்ளார்.
— K.Annamalai (@annamalai_k) September 1, 2025
இந்தப் பல்கலைக்கழக தமிழ்த் துறை, கடந்த ஆண்டு அக்டோபர் மாதமே மூடப்பட்டதாக, இந்த ஆண்டு ஜனவரி மாதம் செய்திகள்… https://t.co/ABY1R61ItApic.twitter.com/YO2pr6HunC
இது குறித்து அண்ணாமலை தனது எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டிருப்பதாவது: “ஜெர்மனி நாட்டுக்குச் சுற்றுலா சென்றிருக்கும் முதலமைச்சர் மு.க. ஸ்டாலின், கொலோன் பல்கலைக்கழக தமிழ்த் துறை நூலகத்தைப் பார்வையிட்டதாகத் தெரிவித்துள்ளார்.
இந்தப் பல்கலைக்கழக தமிழ்த் துறை, கடந்த ஆண்டு அக்டோபர் மாதமே மூடப்பட்டதாக, இந்த ஆண்டு ஜனவரி மாதம் செய்திகள் வெளியாகியிருந்தன.
சூரியன் திரைப்படத்தில், அண்ணன் திரு. கவுண்டமணி அவர்களின், "போன் ஒயர் பிஞ்சு ஒரு வாரம் ஆச்சு" என்ற நகைச்சுவைக் காட்சி, மிகவும் புகழ்பெற்றது. முதலமைச்சரின் நகைச்சுவை நாடகங்கள், அதற்குச் சிறிதும் குறைந்ததல்ல.
முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், தனது வீண் விளம்பரங்களை நிறுத்தி விட்டு, கொலோன் பல்கலைக்கழகத்தில், மீண்டும் தமிழ்த் துறையைக் கொண்டு வர உரிய நடவடிக்கைகள் மேற்கொள்ள வேண்டும் என்று வலியுறுத்துகிறேன்.” என்று பதிவிட்டுள்ளார்.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.