தூத்துக்குடி பனிமய மாதா ஆலயத்தில் அண்ணாமலை பிராரத்தனை செய்தார்.
தமிழ்நாடு பாரதிய ஜனதா கட்சியின் மாநிலத் தலைவர் கு. அண்ணாமலை, கட்சி நிர்வாகி வீட்டின் திருமண நிகழ்ச்சியில் கலந்துகொள்ள தூத்துக்கு சென்றார்.
Advertisment
அப்போது, தூத்துக்குடி தெற்கு பீச் ரோட்டில் உள்ள உலக புகழ்பெற்ற பேராலயங்களில் ஒன்றான பனிமய மாதா பேராலயத்திற்கு சென்று பிரார்த்தனை நடத்தினார்.
இன்று, தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள உலகப் புகழ்பெற்ற தூய பனிமய மாதா பேராலயத்திற்குச் செல்லும் வாய்ப்பு கிடைத்தது. ஆங்கிலேய, போர்த்துகீசிய ஆட்சியாளர்கள் காலத்து வரலாற்றுச் சிறப்புகள் மிக்க பேராலயமான இது, சுமார் 450 ஆண்டுகள் பழமையானது.
மேலும் அங்கு மெழுகுவர்த்தி ஏந்தி வழிபாடு நடத்தினார். அப்போது பாஜக துணைத் தலைவர் சசிகலா புஷ்பா மற்றும் தூத்துக்குடி மாவட்ட பொறுப்பாளர் சித்தாரங்கன் உள்ளிட்ட பாஜக நிர்வாகிகள் பலர் உடனிருந்தனர்.
தொடர்ந்து, அண்ணாமலை கட்சிக் கூட்டங்களில் கலந்துகொள்ள உள்ளார். தூத்துக்குடி பனிமயமாதா பேராலயத்துக்கு அண்ணாமலை சென்றபோது அவரை அங்கு பங்குதந்தை குமாரராஜா வரவேற்றார்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“