/indian-express-tamil/media/media_files/2025/10/31/whatsapp-image-2025-2025-10-31-19-38-19.jpeg)
Annamalai
கோவை:
பாஜக முன்னாள் மாநிலத் தலைவர் அண்ணாமலை இன்று (அக்டோபர் 31) கோவை விமான நிலையத்தில் செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது அவர், "திமுக அரசு பல்வேறு ஊழல் குற்றச்சாட்டுகளை மறைப்பதற்காக, பிரதமர் பீகார் தேர்தல் பிரச்சாரத்தில் தமிழர்களைப் பற்றிப் பேசியதாகப் பொய்யான கருத்துக்களைக் கூறி வருகிறார்," என்று தெரிவித்தார்.
சென்னையிலிருந்து கோவை விமான நிலையம் வந்த அண்ணாமலை, செய்தியாளர்கள் சந்திப்பில் பேசியதாவweது:
திமுக ஊழலை மறைக்கும் முயற்சி
"தமிழக அரசு உள்ளாட்சித் துறையில் பல்வேறு ஊழல்களைச் செய்திருக்கிறது. உள்ளாட்சித் துறை அமைச்சர் கே.என்.நேரு மீது ஊழல் குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளன. மேலும், உணவுப் பொருள் வழங்கல் துறை அமைச்சர் சக்கரபாணி மீதும் ஊழல் புகார்கள் வந்துள்ளன.
திமுக அரசின் இந்தக் கடுமையான ஊழல் புகார்களை மறைக்கும் விதமாக, பீகார் தேர்தல் பிரச்சாரத்தில் பிரதமர் தமிழர்கள் குறித்துப் பேசியதாகப் பொய்யான தகவல்களை முதல்வர் கூறி வருகிறார்.
கடந்த காலங்களில் திமுக தலைவர்கள் பீகார் மக்களைக் கொச்சையாகப் பேசியுள்ள வீடியோ காட்சிகள் உள்ளன. திமுக கட்சியினர் தான் பீகார் மக்களை விமர்சித்துப் பேசியதாகப் பிரதமர் பேசினார். ஆனால், முதல்வர் வேண்டுமென்றே உண்மைக்குப் புறம்பான தகவலைப் பரப்புகிறார்."
வாக்காளர் பட்டியல் விவகாரம்: திமுகவுக்கு கண்டனம்
"தேர்தல் ஆணையத்தின் சிறப்பு வாக்காளர் பட்டியல் திருத்த நடவடிக்கையை திமுக எதிர்த்து வருகிறது. இது ஏற்கனவே மேற்கொள்ளப்பட்ட ஒரு வழக்கமான நடவடிக்கைதான்.
திமுக பல இடங்களில் வாக்காளர் பட்டியலில் குளறுபடிகளையும் முறைகேடுகளையும் செய்துள்ளது. அவை அனைத்தும் இந்த நடவடிக்கையின் மூலம் சீர் செய்யப்படும். அரசியலமைப்புச் சட்டத்தின்படி, இந்த நடவடிக்கையை ஏற்றுக் கொள்ள முடியாது என்று யாரும் கூற முடியாது.
யாருடைய வாக்குரிமையும் பறிக்கப்படவில்லை. மாறாக, அனைவரது வாக்குரிமையையும் பாதுகாக்கும் வகையில்தான் இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்படுகிறது."
இவ்வாறு அண்ணாமலை தெரிவித்தார்.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.
/indian-express-tamil/media/agency_attachments/33Ho9XHwZawzDekwDLnu.png)
Follow Us