அ.தி.மு.க பொதுச்செயலாளரும், எதிர்க்கட்சித் தலைவருமான எடப்பாடி பழனிசாமி மதுரை விமான நிலையத்தில் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது, அண்ணாமலையின் குற்றச்சாட்டுக்கு பதில் அளித்தார்.
அப்போது, “ நான் துரோகி அல்ல, துரோகத்தின் மொத்த உருவமே அண்ணாமலை தான். நான் கிளை செயலாளராக இருந்து முதல்வராக வந்தவன். கட்சியில் படிப்படியாக ஒவ்வொரு மட்டத்தில் இருந்து வந்தேன்.
ஆனால் அண்ணாமலை அப்படியல்ல. கட்சியின் தலைவராக நியமிக்கப்பட்டவர். `நான் தேர்ந்தெடுக்கப்பட்டவன், அண்ணாமலை ஒரு கட்சியின் தலைவராக நியமிக்கப்பட்டார். பேசுவதற்கு முன் அண்ணாமலை கண்ணாடியை பார்த்துக் கொள்ள வேண்டும்” என்றார்.
2024 மக்களவை தேர்தலில் அதிமுக, பாஜக கூட்டணி முறிவுக்கு அண்ணாமலைதான் காரணம் என அ.தி.மு.க.வினரும், எடப்பாடி பழனிசாமிதான் காரணம் என சில பா.ஜ.க தலைவர்களும் பேசிவருகின்றனர். இதனால், இருவருக்கும் இடையே மோதல் முற்றிவருகிறது.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“