/tamil-ie/media/media_files/uploads/2022/09/Annamalai_010522_1200.jpg)
தமிழ்நாடு பாரதிய ஜனதா மாநிலத் தலைவர் கு. அண்ணாமலை
கடலூரில் பத்திரிகை மற்றும் ஊடகவியலாளர்களை குரங்கு என பொருள்படக் கூறி அவமதிக்கப்பட்டதாக சர்ச்சை எழுந்த நிலையில், “நான் ஏன் மன்னிப்பு கேட்க வேண்டும்” என தமிழக பாஜக தலைவர் கு. அண்ணாமலை கேள்வியெழுப்பியுள்ளார்.
நான் கடலூரில் பேசியதை திமுக தகவல் தொழில்நுட்ப அணி வழக்கம்போல் சர்ச்சை ஆக்குகின்றனர். நான் பத்திரிகையாளர்களை எப்படி அணுகுகிறேன் என்பது உங்களுக்கு தெரியும்.
அன்றைய தினம் கூட்டம் முடிந்து கட்சி நிர்வாகி ஒருவரின் வீட்டில் உணவு சென்று திரும்பினேன். அப்போது ஏற்கனவே பேசிவிட்டால் ஊடக சந்திப்பு வேண்டாம் எனக் கூறியிருந்தேன்.
அதனை ஏற்று ஊடக நண்பர்களும் அங்கிருந்து சென்றுவிட்டனர். இந்த நிலையில் நான் கட்சித் தொண்டர்களிடம் பேசிக் கொண்டிருந்த போது ஒரு கட்சியை சேர்ந்த இரண்டு ஊடக நண்பர்கள் மீண்டும் வந்தனர்.
அவர்கள் தொடர்ந்து மைக்-ஐ நீட்டிக் கொண்டிருந்தனர். அப்போது நான் அந்த குறிப்பிட்ட நபர்களை பார்த்து, ஏன் இவ்வாறு குதிக்கிறீர்கள் எனக் கேட்டேன். நான் யாரையும் யாருடனனும் ஒப்பிடு செய்வது கிடையாது.
அந்த வீடியோவை ஒரு பகுதியை நீக்கிவிட்டு, அண்ணாமலை குரங்கு என்று சொல்லிவிட்டார் எனப் பரப்புகின்றனர். மேலும் பத்திரிகையாளர்கள் பொங்க வேண்டும் என்று 3 நாள்களாக பரப்பி பார்த்தார்கள். ஆனால் எதுவும் நடக்கவில்லை” என்றார்.
தொடர்ந்து, அந்தச் சம்பவத்துக்கு வருத்தம் தெரிவிப்பீர்களா எனக் கேள்வியெழுப்பினார்கள். இதற்கு அண்ணாமலை, “நான் தவறே செய்யவில்லை என்ற போது நான் ஏன் மன்னிப்பு கேட்க வேண்டும்” என்றார்.
மேலும் நான் பத்திரிகையாளர்களுடன் எப்படி பழகுகிறேன் என்பது உங்களுக்கு தெரியும். உண்மை இப்படியிருக்க திமுக தகவல் தொழில்நுட்ப அணியை சேர்ந்த யாரே இரண்டு பேர் ட்வீட் செய்தால் அதை நீங்களும் நம்ப வேண்டாம். நானும் நம்ப மாட்டேன்” என்றார்.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.