‘பணம் கேட்டு மிரட்டல்’; இளைஞர் வீடியோ குற்றச்சாட்டு.. அண்ணாமலை அன்னூர் காவல் ஆய்வாளருக்கு கடிதம்

தமிழ்நாடு பா.ஜ.க முன்னாள் மாநில தலைவர் அண்ணாமலை பெயரை சொல்லி 10 லட்ச ரூபாய் பணம் கேட்டு பா.ஜ.க-வினர் மிரட்டுவதாக இளைஞர் ஒருவர் வீடியொ வெளியிட்டது பரபரப்பை ஏற்படுத்திய நிலையில், இது தொடர்பாக நடவடிக்கை எடுக்க அண்ணாமலை காவல் ஆய்வாளருக்கு கடிதம் எழுதியுள்ளார்.

தமிழ்நாடு பா.ஜ.க முன்னாள் மாநில தலைவர் அண்ணாமலை பெயரை சொல்லி 10 லட்ச ரூபாய் பணம் கேட்டு பா.ஜ.க-வினர் மிரட்டுவதாக இளைஞர் ஒருவர் வீடியொ வெளியிட்டது பரபரப்பை ஏற்படுத்திய நிலையில், இது தொடர்பாக நடவடிக்கை எடுக்க அண்ணாமலை காவல் ஆய்வாளருக்கு கடிதம் எழுதியுள்ளார்.

author-image
WebDesk
New Update
Annamalai speaks 2

பா.ஜ.க முன்னாள் மாநிலத் தலைவர் அண்ணாமலை

கோவை மாவட்டம், அன்னூர் குமாரபாளையம் பகுதியைச் சேர்ந்தவர்கள் நாகராஜ் – நாகமணி தம்பதியினர். இவர்களுடைய மூத்த மகன் திருமூர்த்தி் கடந்த 2023-ம் ஆண்டு ஒரு விபத்தில் உயிரிந்தார். இந்த விபத்து தொடர்பான வழக்கின் முடிவில், நீதிமன்றம் மூலம் 50 லட்ச ரூபாய் இழப்பீடு பெறப்பட்டது. 

Advertisment

இந்நிலையில், நாகராஜ் - நாகமணி தம்பதியின் இளைய மகன் அருணாச்சலம் முகநூலில் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில், தனது சகோதரன் திருமூர்த்தி உயிரிழந்த விபத்து தொடர்பான வழக்கை நடத்த அவருடைய ஊரைச் சேர்ந்த பா.ஜ.க-வைச் சேர்ந்த கோகுல கண்ணன், சாமிநாதன், ராசுகுட்டி ஆகியோர் உதவி செய்தனர். இந்த வழக்கில் ரூ.50 லட்சம் இழப்பீடு வந்தவுடன், அண்ணாமலை பெயரை சொல்லி 10 லட்சம் ரூபாய் கட்டாயப்படுத்தி வாங்கிக்கொண்டனர்.

சில மாதங்கள் கழித்து, இப்போது தேர்தல் வருகிறது. இதனால் தேர்தல் செலவுக்கு பணம் வேண்டும் என பா.ஜ.க முன்னாள் மாநில தலைவர் அண்ணாமலை பெயரை சொல்லி, பா.ஜ.கவைச் சேர்த்த கோகுல கண்ணன், சாமிநாதன் ஆகியோர் மிரட்டுகிறார்கள். 10 லட்ச ரூபாய் கொடுக்கவில்லை எனில் குடும்பத்தில் அனைவரையும் கொலை செய்து விடுவோம் என கொலை மிரட்டல் விடுக்கிறார்கள்” என அருணாச்சாலம் குற்றம் சாட்டி உள்ளார். 

அண்ணாமலை பெயரைச் சொல்லி, பா.ஜ.க-வைச் சேர்ந்தவர்கள் பணம் கேட்டு மிரட்டுவதாக அருணாச்சலம் என்பவர் வெளியிட்ட வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி பரபரப்பை ஏற்படுத்தியது.

Advertisment
Advertisements

அண்ணாமலை பெயரைச் சொல்லி பணம் கேட்டு மிரட்டப்படுவதாக வீடியோ வெளியாகி இருந்த நிலையில், “எனது பெயரைச் சொல்லி பணம் கேட்டதாக வெளியான வீடியோவுக்கும், எனக்கும் எந்த தொடர்பும் இல்லை” என்றும் இது தொடர்பாக நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் அண்ணாமலை அன்னூர் காவல் நிலைய காவல் ஆய்வாளருக்கு புகார் அளித்துள்ளார்.

அதில் அண்ணாமலை கூறியிருப்பதாவது: “கோவை மாவட்டம், அன்னூர் வட்டம், குமாரபாளையத்தைச் சேர்ந்த நாகராஜ் மகன் அருணாச்சலம் தனது முகநூல் பக்கத்தில் காணொளி ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் அன்னூரைச் சேர்ந்த சாமிநாதன் என்கிற ராஜ ராஜ சாமி, கோகுல கண்ணன், ராசுக்குட்டி ஆகியோர் நான் பணம் கேட்டதாகக் குறி இளங்கோ மாஸ்டர் மூலம் அருணாச்சலத்தின் தந்தை நாகராஜ் மற்றும் தாய் நாகமணி ஆகியோரை மிரட்டி உள்ளதாக நான் அறிகிறேன். மேற்படி, அந்த வீடியோவானது சமூக வலைதளங்களும் ஊடகங்களிலும் வெளியாகி உள்ளது. மேலே குறிப்பிட்ட நிகழ்வுக்கும் எனக்கும் எந்த தொடர்பும் இல்லை. மேற்படி என் கவனத்திற்கு வந்த சங்கதிகள் குறித்து, உரிய விசாரணை மேற்கொண்டு பாதிக்கப்பட்டவர்களுக்கு உரிய நிவாரணம் கிடைத்திட விதவிடுமாறு கேட்டுக்கொள்கிறேன்.அதே சமயம் எனது பெயரை தவறான நோக்கத்துடன் பயன்படுத்தியிருப்பது தெரியவந்தால் அவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்குமாறு கேட்டுகொள்கிறேன் என்று அண்ணாமலை தெரிவித்துள்ளார்.

Annamalai

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us: