கச்சத் தீவு விவகாரம் தொடர்பாக தமிழ்நாடு பா.ஜ.க மாநிலத் தலைவர் கு. அண்ணாமலை இன்று செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் பேசுகையில், “கச்சத் தீவு விவகாரத்தில் வெளியுறவு அமைச்சகத்தில் ஆர்.டி.ஐ மூலமாக தகவலல்களை சேகரித்துள்ளோம்.
அது ஒரு பெரிய மர்மம். இது தொடர்பாக பொதுவெளியில் தகவல்கள் இல்லை. கச்சத் தீவு இலங்கைக்கு தாரை வார்க்கப்பட்டதால், மீனவர்கள் கைது தொடர்ச்சியாக நடந்தது.
அரசியல்வாதிகளும் எரியும் தீயில் எண்ணெய் ஊற்றுவது போல் நடந்துக்கொண்டனர். காங்கிரஸ் மற்றும் திமுக தமிழர்களுக்கு செய்த துரோகம். காங்கிரஸும் திமுகவும் கூட்டணி சேர்ந்து, இலங்கைக்கு கச்சத்தீவைத் தாரைவார்த்த வரலாறு இதில் உள்ளது.
மத்தியில் எப்போதெல்லாம் காங்கிரஸ் ஆட்சியில் இருந்ததோ, அப்போதெல்லாம் நமது நாட்டின் எல்லைகளை, நாட்டின் ஒருமைப்பாட்டை, நாட்டின் இறையாண்மையைப் பாதுகாப்பதில் எந்தவித அக்கறையுமின்றிச் செயல்பட்டிருக்கிறது.
மேலும் கச்சத் தீவு என்பது நமக்கு மிகவும் முக்கியம். ஏனெனில் இந்தச் கச்சத்தீவு நமது எல்லைப் பகுதியில் அமைந்துள்ளது. இந்த நிலையில், கச்சத் தீவு சின்னத் தீவு, அதில் பெரிதளவு முக்கியம் இல்லை என ஜவஹர்லால் நேரு கூறியுள்ளார்.
மேலும் கச்சத் தீவு விவகாரத்தில் காங்கிரஸூம், தி.மு.க.வும் மக்களும் துரோகம் செய்தன எனக் குற்றஞ்சாட்டினார்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“