Advertisment

காங்கிரஸிடம் பணம் வாங்கினாரா துரைமுருகன்? அண்ணாமலை பரபரப்பு கேள்வி

“கர்நாடக காங்கிரஸை கண்டிக்காத துரைமுருகன் அவர்களிடம் காசு வாங்கிவிட்டாரா என சந்தேகம் உள்ளது” என தமிழ்நாடு மாநில பா.ஜ.க தலைவர் கு. அண்ணாமலை கேள்வியெழுப்பி உள்ளார்.

author-image
WebDesk
New Update
Annamalai press meet x

காங்கிரஸிடம் காசு வாங்கிவிட்டாரா துரைமுருகன் என அண்ணாமலை கேள்வியெழுப்பியுள்ளார்.

தமிழ்நாடு பாஜக மாநிலத் தலைவர் கு. அண்ணாமலை செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர், “ஆக.20 முதல் நடைபெறும் உண்ணாவிரத போராட்டத்தில் நானும் பங்கேற்கிறேன்" என்றார்.
மேலும், “உண்ணாவிரத போராட்டத்தில் பாஜக விவசாய அணி தலைவர் தொடர்ச்சியாக பங்கேற்பார். அவிநாசி - அத்திக்கடவு திட்டத்தை உடனே அமல்படுத்த வேண்டும். விவசாயிகளுக்கு உரிய இழப்பீட்டை ஒரு வாரத்திற்குள் தர வேண்டும்” என்றார்.

Advertisment

தொடர்ந்து, “இன்றைய தினம், அவிநாசி அத்திக்கடவு திட்டத்திற்கு உட்பட்ட திருவாச்சி நீரேற்று நிலையத்தில், அத்திக்கடவு அவிநாசி திட்டப் போராட்டக்குழுவினரையும் இந்த திட்டத்தால் பயன்பெறக்கூடிய விவசாயிகளையும் சந்தித்து அவர்கள் குறைகளைக் கேட்டறிந்தபின் பத்திரிக்கையாளர்களைச் சந்தித்தேன்.

திமுக ஆட்சிக்கு வந்து கடந்த 39 மாதங்களாக, அவிநாசி அத்திக்கடவு திட்டத்தை நடைமுறைப்படுத்தா
மல் காலதாமதமாக்கி வருகிறார்கள். கடந்த 2021 ஆம் ஆண்டிலிருந்து, அமைச்சர்கள், ஆளுக்கொரு பணி நிறைவு சதவீதத்தைக் கூறி பொதுமக்களையும், விவசாயிகளையும் ஏமாற்றிக் கொண்டிருக்கிறார்கள். அது மட்டுமின்றி, இந்தத் திட்டத்திற்காகக் குழாய் அமைக்க நிலம் கொடுத்த விவசாயிகளுக்கான நிதியையும் இதுவரையிலும் வழங்கவில்லை.

உண்மையில், அவிநாசி அத்திக்கடவு திட்டத்தில் என்ன நடந்து கொண்டிருக்கிறது என்ற கேள்வி எழுகிறது. கடந்த 39 மாதங்களில், இது வரை பலமுறை திட்டத்தை நடைமுறைப்படுத்தப் போகிறோம் என்று கூறி திசைதிருப்புவதிலேயே குறியாக இருக்கிறார்களே தவிர, எதனால் இன்று வரை இந்தத் திட்டத்தை நடைமுறைப்படுத்தவில்லை என்பதை, பொதுமக்களுக்குத் தெரிவிக்க, திமுக அரசு கடமைப்பட்டுள்ளது. 

அது மட்டுமின்றி, பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான மத்திய அரசு, கடந்த 2021 ஆம் ஆண்டு கொண்டு வந்த தேசிய அணைகள் பாதுகாப்புச் சட்டத்தின் அடிப்படையில், தமிழ்நாடு அணைகள் பாதுகாப்புக் குழுவை உருவாக்கியிருக்க வேண்டும்.

பவானிசாகர், ஆழியாறு, திருமூர்த்தி அணை, அமராவதி அணை உள்ளிட்ட பல தமிழக அணைகள், போதிய பராமரிப்பின்றி இருக்கின்றன. தமிழக அணைகளைப் பராமரிப்பதும், பாதுகாத்துக் கண்காணிப்பதும்தான் இந்தக் குழுவின் பணி. ஆனால், மூன்று ஆண்டுகள் கடந்தும், இதுவரை திமுக அரசு, இந்தக் குழுவை அமைக்கவில்லை.

உடனடியாக, அத்திக்கடவு அவிநாசி திட்டத்தை நடைமுறைக்குக் கொண்டு வர வேண்டும் என்றும், குழாய் அமைக்க நிலம் வழங்கிய விவசாயிகளுக்குச் சேர வேண்டிய நிதியை, இன்னும் ஒரு வாரக் காலத்திற்குள் வழங்க வேண்டும் என்றும், தேசிய அணைகள் பாதுகாப்புச் சட்டத்தின் அடிப்படையில், தமிழக அணைகள் பாதுகாப்புக் குழுவை அமைக்க வேண்டும் என்றும் திமுக அரசை வலியுறுத்துகிறோம். 

இவற்றை நிறைவேற்ற திமுக அரசு தவறினால், வரும் ஆகஸ்ட் 20 முதல் தொடர் உண்ணாவிரதப் போராட்டம் நடைபெறும் என்பதையும் தெரிவித்துக் கொள்கிறேன்” என்றார்.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற  https://t.me/ietamil“

Annamalai
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment