/indian-express-tamil/media/media_files/omz6CVyumColR7MMdaYd.jpg)
திமுக அரசு பயப்படுகிறதா என அண்ணாமலை கேள்வியெழுப்பி உள்ளார்.
மணல் சுரங்கம். பணப் பரிமாற்ற வழக்கில் மாவட்ட ஆட்சியர்களுக்கு சம்மன் அனுப்பியதை எதிர்த்து தமிழக அரசு சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளது.
அதில், சுரங்கங்கள் மற்றும் கனிமங்கள் சட்டம் பிஎம்எல்ஏவின் கீழ் திட்டமிடப்பட்ட குற்றமாக இல்லை என வாதிடுகிறது.
மேலும், அரசின் நிர்வாகம் மற்றும் செயல்பாட்டிற்கு இடையூறாக மாநில அதிகாரிகளை துன்புறுத்துவதற்கான விசாரணையாக இது உள்ளது என்ற குற்றச்சாட்டையும் தமிழக அரசு முன்வைத்துள்ளது.
இது குறித்து அண்ணாமலை ட்விட்டரில், “மடியில் கனம் இருப்பவர்கள் பயப்படத்தான் வேண்டும். ஊழலில் திளைத்துக் கொண்டிருக்கும் தி.மு.க அரசின் இந்த கோழைத்தனமான நடவடிக்கை, ஆட்சிக்கு வந்த நாள் முதல் நமது மாநிலத்தின் வளங்களை சுரண்டிய குட்டு வெளிப்பட்டு விடுமோ என்ற திமுகவின் நடுக்கத்தைத்தான் உணர்த்துகிறது.
மணல் குவாரி முறைகேடுகள் குறித்த குற்றச்சாட்டுகள் தொடர்பாக, அரசு ஊழியர்களை அமலாக்கத்துறை விசாரிக்காமல் தடுக்க, திமுக அரசு முயற்சிப்பது ஏன்?
தங்கள் தனிப்பட்ட ஆதாயங்களுக்காக, வேண்டுமென்றே அரசுக்கு ஏற்படுத்திய இழப்பு, அமலாக்கத்துறை விசாரணையில் அம்பலமாகிவிடும் என்று ஊழல் திமுக அரசு பயப்படுகிறதா?” எனக் கேள்வியெழுப்பி உள்ளார்.
மடியில் கனம் இருப்பவர்கள் பயப்படத்தான் வேண்டும். ஊழலில் திளைத்துக் கொண்டிருக்கும் தி.மு.க அரசின் இந்த கோழைத்தனமான நடவடிக்கை, ஆட்சிக்கு வந்த நாள் முதல் நமது மாநிலத்தின் வளங்களை சுரண்டிய குட்டு வெளிப்பட்டு விடுமோ என்ற திமுகவின் நடுக்கத்தைத்தான் உணர்த்துகிறது.
— K.Annamalai (@annamalai_k) November 24, 2023
மணல் குவாரி… https://t.co/iTaPEQkgVN
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.