நீட் தேர்வில் இருந்து தமிழ்நாட்டுக்கு விலக்கு அளிக்க வேண்டும் எனக் திமுக இளைஞரணி சார்பில் மாநிலம் தழுவிய உண்ணாவிரத பேராட்டம் நடந்தது.
சென்னையில் நடந்த பேராட்டத்தில் அமைச்சர் உதயநிதி கலந்துகொண்டார். அப்போது அவர், “ஆளுனர் தமது பதவியை ராஜினாமா செய்துவிட்டு தேர்தலில் போட்டியிடத் தயாரா? எனக் கேள்வியெழுப்பினார்.
மேலும் ஆளுனரை ஆட்சேபத்துக்குரிய வகையில் பேசியதாகவும் குற்றச்சாட்டுகள் எழுந்தன. இதற்கு பதிலளிக்கும் விதமாக தமிழக பாஜக மாநிலத் தலைவர் கு. அண்ணாமலை திருநெல்வேலியில் பேசினார்.
அப்போது அவர், “ஆளுனரை தேர்தலில் போட்டியிடச் சொல்லும் உதயநிதி ஸ்டாலின், எம்.எல்.ஏ. பதவியை துறந்துவிட்டு யூபிஎஸ்சி முதன்மை தேர்வில் வெற்றி பெற்றுவிட்டால் நான் அரசியலை விட்டே விலகுகிறேன்” என்றார்.
தொடர்ந்து யூபிஎஸ்சி தேர்வை விடுங்கள், சாதாரண டிஎன்பிஎஸ்சி தேர்விலாவது வெற்றி பெற்றுவிட்டு பேசட்டும். குறைந்தப்பட்சம் குரூப் 4 தேர்விலாவது வெற்றிப் பெற்றுவிட்டு பேசட்டும்” என்றார்.
அப்போது, “அது குளறுபடிகள் செய்யக் கூடாது என்று சிரித்துக் கொண்டே பேசினார். இதைக் கேட்டு அங்கிருந்தவர்கள் சிரித்து விட்டனர்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“