தமிழக பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை ஏப்.14ம் தேதி திமுக அமைச்சர்கள் முக்கிய பிரமுகர்களின் சொத்துப் பட்டியலை வெளியிட்டார். தொடர்ந்து அவர் மீது சம்பந்தப்பட்ட அமைச்சர்கள், திமுக மூத்தத் தலைவர்கள் அவதூறு வழக்கு நீதிமன்றத்தில் தாக்கல் செய்தனர்.
இந்த நிலையில், விளையாட்டுத் துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலினின் மனைவி கிருத்திகா உதயநிதியின் ரூ.36 கோடி சொத்துக்கள் அமலாக்கத் துறையால் முடக்கப்பட்டுள்ளன.
இதற்கிடையில் ட்விட்டரில் அண்ணாமலை மீண்டும் கேள்வியெழுப்பி உள்ளார். அதில், “#DMKFiles வெளியிட்ட போது நோபல் ஸ்டீல் நிறுவனத்தின் 1000 கோடி ரூபாய் முதலீடு குறித்த கேள்வியை எழுப்பியிருந்தோம்.
முதலீடும் வரவில்லை முறைகேடான முதலீடு என்று எழுப்பப்பட்ட குற்றச்சாட்டுக்கு இன்று வரை பதிலும் வரவில்லை.
முறைகேடான பணப்பரிவர்த்தனை மேற்கொண்ட உதயநிதி ஸ்டாலின் அறக்கட்டளை அமலாக்கத் துறையிடம் சிக்கியுள்ளது.
நோபல் ப்ரிக்ஸ் நிறுவனம் இயங்கி வந்த அதே விலாசத்தில் உதயநிதி ஸ்டாலின் அறக்கட்டளை இயங்கி வருகிறது. இந்த இரு நிறுவனங்களுக்கு உள்ள தொடர்பு என்ன? இதற்காவது பதில் வருமா?” எனக் கேட்டுள்ளார்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“