டி.எம். கிருஷ்ணாவுக்கு சங்கீத கலாநிதி விருது வழங்க எதிர்ப்பு தெரிவித்த ரஞ்சனி-காயத்ரி, திருச்சூர் சகோதரர்கள் ஆகியோருக்கு பா.ஜ.க. மாநிலத் தலைவர் கு. அண்ணாமலை ஆதரவு தெரிவித்துள்ளார்.
இது குறித்து தமிழ்நாடு பா.ஜ.க மாநிலத் தலைவர் கு. அண்ணாமலை ட்விட்டர் எக்ஸ் தளத்தில், “ஒன்பது தசாப்தங்களுக்கும் மேலாக கர்நாடக இசை மற்றும் ஆன்மீக உணர்வின் ஆலயமாகப் போற்றப்படும் மியூசிக் அகாடமி, அமைப்பின் புனிதத்திற்குக் கேடு விளைவிக்கும் பிரிவினை சக்திகளால் சிதைந்துவிடும் அச்சுறுத்தலுக்கு உள்ளாகியுள்ளது.
அகாடமியின் தற்போதைய அதிகாரத்தின் விரோத அணுகுமுறைக்கு எதிராக கூட்டாக குரல் எழுப்பிய மியூசிக் அகாடமியின் அனைத்து புகழ்பெற்ற கலைஞர்களுக்கும் ஒற்றுமையாக நிற்கிறது.
நாங்கள் புகழ்பெற்ற இசைக்கலைஞர்களுடன் நிற்கிறோம். ரஞ்சனிகாயத்ரி, திருச்சூர் பிரதர்ஸ், ரவிகிரண், ஹரிகதா, ஸ்ரீமதி விஷாகா ஹரி உள்ளிட்டோர் பெயரை டேக் செய்துள்ளார்.
மேலும், “செயலிழந்த பிரச்சாரம் மற்றும் வெறுப்பு மற்றும் பிரிவினையின் சித்தாந்தத்தின் ஆதரவாளர்களின் கடைசி புகலிடம் கர்நாடக இசைக் கோவிலாக இருக்க முடியாது” எனவும் தெரிவித்துள்ளார்.
இதற்கிடையில், டி.எம் கிருஷ்ணா தலைமையில் இந்தாண்டு மாநாடு நடைபெறுவதால் பிரபல கர்நாடக இசைக் கலைஞர்களான ரஞ்சனி- காயத்ரி சகோதரிகள் இந்த நிகழ்ச்சியில் கலந்து கொள்ளாமல் புறக்கணிக்க போவதாக அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளனர்.
இது குறித்து அவர்கள் விடுத்துள்ள அறிக்கையில், “டி.எம்.கிருஷ்ணா கர்நாடக இசை உலகில் பெரும் சேதத்தை ஏற்படுத்தியவர், வேண்டுமென்றே இந்த சமூகத்தின் உணர்வுகளை மிதித்து, தியாகராஜா மற்றும் எம்.எஸ்.சுப்புலட்சுமி போன்ற மரியாதைக்குரியவர்களை அவமதித்தவர்” எனத் தெரிவித்துள்ளார்கள்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“