/indian-express-tamil/media/media_files/zSNecMuimo9u5wDlKpjC.jpg)
கோவையில் பாஜக சார்பில் அண்ணாமலை போட்டியிடுகிறார்.
தமிழ்நாட்டில் ஏப்ரல் 19ஆம் தேதி நாடாளுமன்றத் தேர்தல் நடைபெற உள்ளதை முன்னிட்டு அனைத்து கட்சியினரும் அவர்களது வேட்பாளர்களின் பட்டியலை வெளியிட்டு வருகின்றனர்.
கோவையில் I.N.D.I.A கூட்டணியில் இருக்கும் தி.மு.க கட்சி சார்பில் கணபதி ராஜ்குமார், அதிமுக சார்பில் சிங்கை ராமச்சந்திரன், பாஜக சார்பில் தமிழக மாநில தலைவர் அண்ணாமலை ஆகியோர் போட்டியிடுகின்றனர்.
I am waiting @annamalai_k 😎 pic.twitter.com/kYmwrtWY1U
— Singai G Ramachandran - Say No to Drugs and DMK (@RamaAIADMK) March 21, 2024
நேற்று திமுக வேட்பாளர் பட்டியல் வெளியான நிலையில் இன்று காலை அதிமுக வேட்பாளர் பட்டியல் வெளியானது. அதனைத் தொடர்ந்து மாலை பாஜக வேட்பாளர் பட்டியலானது வெளியாகி உள்ளது.
இந்நிலையில் கோவை மாவட்டத்தில் கோவை பாராளுமன்றத் தொகுதிக்கு பாஜக மாநில தலைவர் அண்ணாமலை போட்டியிடுவதை தனது எக்ஸ் வலைத்தள பக்கத்தில் அதிமுக வேட்பாளராக போட்டியிடும் சிங்கை ராமச்சந்திரன், “I am Waiting“ என நடிகர் விஜயின் பிரபல வசனத்தை குறிப்பிட்டு பதிவிட்டுள்ளார்.
செயதியாளர் பி. ரஹ்மான்
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.