/tamil-ie/media/media_files/uploads/2022/11/Annamalai-political-pulse.jpg)
தமிழ்நாடு பா.ஜ.க-வின் இளம் தலைவரும், தேசியத் தலைவர்களின் ஆதரவைப் பெற்ற முன்னாள் காவல்துறை அதிகாரியுமான இவர், அடிப்படையின்றிக் கேள்விகளை முன்வைத்ததற்காக காவல்துறையின் விமரசனங்களைப் பெற்றுள்ளார்.
அக்டோபர் 23, 2022 அன்று அதிகாலை 4 மணியளவில் கோயம்புத்தூர் சங்கமேஸ்வரர் கோயில் முன் ஒரு காரில் எல்.பி.ஜி சிலிண்டர் வெடித்தது. இது தற்கொலை குண்டு தாக்குதலா அல்லது வேறு இலக்கை நோக்கிச் செல்லும் வழியில் தற்செயலாக வெடித்ததா? குற்றம் சாட்டப்பட்ட முபீன் தனது வீட்டிலிருந்து மற்றொரு பாதுகாப்பான வீட்டிற்கு, ஒரு திட்டத்திற்காக கொண்டு செல்லும்போது அது வெடித்திருக்கலாம்.
இந்த கருத்து நம்பத்தகுந்தவை. மேலும், விசாரிக்கப்பட்டு வருகின்றன. ஆனால், இந்த விவகாரம் பா.ஜ.க மாநிலத் தலைவர் கே. அண்ணாமலைக்கு ஒரு புதிய உள்கட்சி சிக்கலைத் தூண்டியுள்ளது. அவர் யோசிக்காமல் அவசரப்பட்டதோடு மட்டுமல்லாமல், தெளிவில்லாத விவரங்களின் அடிப்படையில் கேள்வி எழுப்பியுள்ளார். அவருடைய பெயரைக் குறிப்பிட்டு வெளியிட்ட மாநில காவல்துறையின் அறிக்கையால் தடுமாறி, பின்னர், கோயம்புத்தூரைச் சேர்ந்த அவரது மூத்த தலைவர்களுடன் மோதினார்.
அண்ணாமலை 37 வயது இளம் தலைவர். இவர் கடந்த காலத்தில் கர்நாடகாவில் ஐ.பி.எஸ் அதிகாரியாக இருந்தவர். பா.ஜ.க-வின் மிக முக்கியமான சில தேசியத் தலைவர்களின் ஆதரவு உள்ளிட்ட பல காரணங்களால் மாநில பா.ஜ.க தலைவராக பதவியேற்றதில் இருந்து கவனம் பெற்றுள்ளார். வழக்கமான அரசியல் விவகாரங்களில் அவருடைய ஆர்வமும் உற்சாகமும் பா.ஜ.க மீதான பார்வையை மாநிலத்தில் அதிகரிக்க உதவியுள்ளது.
கோயம்புத்தூரைச் சேர்ந்த மூத்த ஆர்.எஸ்.எஸ் தலைவர் ஒருவர் கூறுகையில், “பின்விளைவுகள் இருந்தாலும்கூட, அவர் என்னவாக இருக்கிறார்” என்பதுதான் என்று கூறினார். கோயம்புத்தூர் குண்டுவெடிப்புக்குப் பிறகு தந்து செயல்பாட்டை ஆரம்பித்தவர் அண்ணாமலை என்று இந்த தலைவர் நம்புகிறார். ஆனால், விஷயங்கள் அவரது கை மீறி சென்றபோது அவர் பின்வாங்க வேண்டியிருந்தது. இது கோவை பாஜக தலைவர்களின் பந்த் அழைப்பைக் குறிக்கிறது. பின்னர், அந்த பந்த் அழைப்பு திரும்பப் பெறப்பட்டது.
மாநில காவல்துறை சனிக்கிழமை வழக்கத்திற்கு மாறான ஒரு அறிக்கை வெளியிட்டது. அண்ணாமலையின் பெயரைக் குறிப்பிட்டு, வழக்கு எவ்வாறு கையாளப்படுகிறது என்பது குறித்து வதந்திகளைப் பரப்புவதை நிறுத்துங்கள் என்று கேட்டுக் கொண்டது. அவருடைய அந்த கருத்துகள் பெரும்பாலும் ஊடக தொடர்புகள், கருத்துகள், மற்றும் ட்வீட் வழியாக இருந்தன.
“அண்ணாமலை போன்ற ஒரு கட்சியின் மாநிலத் தலைவர் தனது ட்வீட்களில் அந்த விவரங்களை அவசரமாகப் பயன்படுத்தியிருக்கக் கூடாது. விசாரணை சரியான திசையில் செல்கிறதா என்பதைப் பார்க்க அவர் காத்திருந்திருக்க வேண்டும்” என்று அந்த ஆர்.எஸ்.எஸ் தலைவர் கூறினார்.
சென்னையில் உள்ள மற்றொரு மூத்த ஆர்.எஸ்.எஸ் தலைவர் இது அண்ணாமலையின் தவறு அல்ல என்றும், மாநிலத் தலைமை என்ற முறையில் அவர் இந்தப் பிரச்சினையை தவறாகப் புரிந்துகொண்டார் என்றும் கூறினார். “முபீனை அறிந்த என்.ஐ.ஏ பயிற்சி பெற்ற அதிகாரிகள் இருந்தபோதிலும், கோயம்புத்தூரில் உள்ள உள்நாட்டுப் பாதுகாப்பில் கவனம் செலுத்திய சிறப்புப் புலனாய்வுப் பிரிவு (எஸ்.ஐ.யு) அவரைக் கண்காணிக்கத் தவறிவிட்டது. அவர்கள் ஏன் அவரைப் கண்காணிக்கவில்லை? 2019 விசாரணைக்குப் பிறகு ஒருமுறையாவது அவரைக் கண்காணித்தார்களா? தவறுகள் இருந்தால், அவர்கள் தண்டிக்கப்படுவார்களா? உள் பாதுகாப்பு கண்காணிப்பில் இந்த குறிப்பிட்ட குறைபாடுகளை அண்ணாமலை கவனித்திருக்க வேண்டும். தனக்கு கிடைத்த தகவல்களை ட்வீட் செய்வதை விட, சம்பவம் மற்றும் அதன் காரணங்களில் அதிக கவனம் செலுத்த வேண்டும்” என்று அவர் கூறினார்.
குண்டுவெடிப்பு நடந்த ஒரு நாளில், இது தீவிரவாத தாக்குதல் என்றும், வெடிவிபத்து பற்றிய விவரங்களை 12 மணி நேரம் தமிழக அரசு மறைத்துள்ளது என்றும் அண்ணாமலை திட்டவட்டமாக அறிவித்தார். அப்போது அவர் விசாரணையில் குறைபாடுகள் இருப்பதாகக் கூறி மாநில காவல்துறை மற்றும் தி.மு.க அரசு மீது விமர்சனங்களை வைத்தார். இது மாநில உளவுத்துறை மற்றும் தி.மு.க அரசின் தோல்வியில்லையா? என்று அண்ணாமலை கேள்வி எழுப்பினார்.
இதுபோன்ற பல ட்வீட்டுகள் மற்றும் அறிக்கைகளுக்கு மத்தியில், தி.மு.க அரசு இந்த விசாரணையை மந்தமாக கையாள்வதைக் கண்டித்து கோவையில் கட்சியின் தலைமை அக்டோபர் 31 ஆம் தேதி பந்த் அறிவித்தது. இதனால், கோயம்புத்தூர் தொழிலதிபர் ஒருவர் சென்னை உயர்நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்து, பந்த் நிறுத்தப்பட வேண்டும் என்று கோரினார்.
நீதிமன்றத்தில், அண்ணாமலை தனது கட்சித் தலைவர்கள் அழைப்பு விடுத்த பந்தை நிராகரிக்க வேண்டியிருந்தது. அப்படியொரு அழைப்பை தாம் ஒருபோதும் விடுத்ததில்லை என்றார். கட்சியின் நான்கு எம்.எல்.ஏ.க்களில் ஒருவரான கோயம்புத்தூர் (தெற்கு) வானதி சீனிவாசன் பந்த் போராட்டத்தை யாராலும் தடுக்க முடியாது என்று அறிவித்த சில மணி நேரங்களுக்குப் பிறகு அக்டோபர் 28-ம் தேதி அண்ணாமலை நீதிமன்றத்தில் தனது கருத்தை தெரிவித்தார். தொழிலதிபர்களின் கோரிக்கைகளை மேற்கோள் காட்டி, பா.ஜ.க தலைமை பின்னர் பந்த்தை தற்காலிகமாக ஒத்திவைக்க முடிவு செய்ய வேண்டியிருந்தது.
அண்ணாமலைக்கும் கோயம்புத்தூரைச் சேர்ந்த இரண்டு உயர்மட்டத் தலைவர்களான சி.பி. ராதாகிருஷ்ணன் மற்றும் வானதி சீனிவாசன் எம்.எல்.ஏ-வுக்கும் இடையேயான பனிப்போர் இது என்று கட்சியில் பலர் சுட்டிக்காட்டினர். அதன் விளைவுதான் பந்த் அழைப்பு திரும்பப் பெறப்பட்டது என்றனர். “கார் குண்டுவெடிப்பு வழக்கைக் கையாள்வதில் அண்ணாமலை இருந்ததைப் போலவே கோவையில் தலைவர்களும் அதே உற்சாகத்துடன் இருந்தனர்” என்று கோவையில் பா.ஜ.க மூத்த தலைவர் ஒருவர் கூறினார்.
இந்த வழக்கை கையாண்ட மாநில காவல்துறை மூத்த அதிகாரி ஒருவர் கூறியதாவது: “ஆரம்பத்தில், அரசு தகவல்களை மறைப்பதாக அண்ணாமலை கூறினார். ஆனால், நாங்கள் கார் வெடிப்பு எவ்வளவு தீவிரமானது என்பதை உணர்ந்து, வெடித்த சில மணி நேரங்களிலேயே டி.ஜி.பி தானாகவே கோவை வந்தார். இந்த வழக்கு 48 மணி நேரத்தில் தீர்க்கப்பட்டது. முக்கியமான ஒன்பது பேர் சில மணிநேரங்களில் எங்கள் காவலில் இருந்தனர். மேலும், ஒருவர் பின்னர் காவலில் இருந்தார். ஒரு வாரத்தில் 6 பேர் கைது செய்யப்பட்டனர். விசாரணையின் மூன்றாவது மற்றும் நான்காவது நாளில், சதி மற்றும் பெரிய நெட்வொர்க் மட்டுமே எஞ்சியிருந்தது. இந்த நிலையில், அண்ணாமலை ட்வீட் செய்தது, அறிக்கைகளை வெளியிட்டது, தகவல்களைக் கையாள்வதைப் பார்த்து நான் ஆச்சரியப்பட்டேன். இது ஒரு அரசியல்வாதிக்கு மிகவும் பொருத்தமற்றது. குறிப்பாக விசாரணையின் ஆரம்ப நாட்களில் இது பொருத்தமற்றது.” என்று அவர் கூறினார். அண்ணாமலையின் கருத்து முதிர்ச்சியற்றது என்றும் இந்த சம்பவம் குறித்து அவர் ஆதாரமற்ற வதந்திகளை பரப்புவதாகவும் அந்த அதிகாரி கூறினார்.
குறிப்பாக அண்ணாமலையின் பெயரைக் குறிப்பிட்டு அக்டோபர் 29ஆம் தேதி மாநில காவல்துறை அறிக்கை வழக்கத்திற்கு மாறானது என்றும் அவர் குறிப்பிட்டார்.
கோயம்புத்தூர் மாநகர போலீஸ் கமிஷனர் வி. பாலகிருஷ்ணன் இந்தியன் எக்ஸ்பிரஸ்ஸிடம் கூறுகையில், கடந்த வார இறுதியில் அவர்கள் என்.ஐ.ஏ-விடம் விசாரணையை ஒப்படைப்பதற்கு முன்பு ஒரு வாரத்திற்குள் சுமார் 90 சதவீத விசாரணையை முடித்ததாகக் கூறினார்.
சமீபகாலமாக அண்ணாமலையும் தனது நிலைப்பாட்டை மென்மையாக்கிக் கொண்டுள்ளார். குண்டுவெடிப்பு விஷயத்தில் மாநில காவல்துறையின் விரைவான நடவடிக்கைக்காக திங்கள்கிழமை பாராட்டினார். ஆனால், காவல்துறை தலைமையை தொடர்ந்து விமர்சித்தார்.
"தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil"
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.