பா.ஜ.க மாநிலத் தலைவர் அண்ணாமலை, அமைச்சர் செந்தில் பாலாஜியை அமைச்சரவையில் இருந்து நீக்கக் கோரி தமிழக ஆளுநர் ஆர்.என். ரவியை சந்தித்து மனு அளித்தார். ஆளுநர் உடன் நிமிடம் சந்தித்த அண்ணாமலை செய்தியாளர்களைச் சந்தித்தார்.
விழுப்புரம், செங்கல்பட்டு மாவட்டங்களில் விஷச் சாராயம் குடித்து 22 பேர் உயிரிழந்தது தொடர்பாகவும் சட்டம் ஒழுங்கு பிரச்னைகள் குறித்து விசாரணை நடத்த வேண்டும் என்று பா.ஜ.க மாநிலத் தலைவர் அண்ணாமலை, பா.ஜ.க சட்டமன்றக் குழு தலைவர் நயினார் நாகேந்திரன், பா.ஜ.க மாநில மகளிர் அணித் தலைவி உமா ரவி ஆகியோர் ஆளுநர் ஆர்.என். ரவியை சந்தித்து மனு அளித்தனர்.
பா.ஜ.க மாநிலத் தலைவர் அண்ணாமலை பா.ஜ.க சட்டமன்றக் குழு தலைவர் நயினார் நாகேந்திரன், பா.ஜ.க மாநில மகளிர் அணித் தலைவி உமா ரவி ஆகியோர் இன்று (மே 21) காலை ஆளுநர் ஆர்.என். ரவியை ஆளுநர் மாளிகையில் சந்தித்தனர். ஆளுநர் ஆர்.என். ரவியுடன் 20 நிமிடங்கள் நடைபெற்ற இந்த சந்திப்பின்போது, கடந்த வாரம், விழுப்புரம், செங்கல்பட்டு மாவட்டங்களில் விஷச் சாராயம் குடித்து 22 பேர் உயிரிழந்த விவகாரத்தில், அமரன் 11 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். கள்ளச் சாராயம் விற்பனை செய்தவர்களுக்கு அமைச்சர் செஞ்சி மஸ்தான் உடன் தொடர்பு இருப்பதாகக் கூறி அவர் மீது நடவடிக்க எடுக்க வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளனர்.
மேலும், பண மோசடி வழக்கில் அமைச்சர் செந்தில் பாலாஜி மீது விசாரணை நடத்த உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ள நிலையில், ஆளுநரின் அதிகாரத்தைப் பயன்படுத்தி, அமைச்சரவையில் இருந்து நீக்க வேண்டும் என அந்த மனுவில் வலியுறுத்தியுள்ளனர்.
ஆளுநர் உடனான சந்திப்புக்குப் பிறகு செய்தியாளர்களிடம் பேசிய பா.ஜ.க மாநிலத் தலைவர் அண்ணமலை, “விஷச்சாரய மரணம் குறித்து விசாரணை நடத்தவும் அமைச்சரவையில் இருந்து செந்தில் பாலாஜியை நீக்கவும் ஆளுநரிடம் கோரிக்கை வைத்தோம். டாஸ்மாக் கடைகளை மூடுவது குறித்டு முதலமைச்சர் மு.க. ஸ்டாலினிடம் விரைவில் வெள்ளை அறிக்கை வழங்கப்படும்.
அரசியலமைப்பு சட்டத்தை அமைச்சர் மீறும்போது, சட்டத்தைக் காக்கும் பொறுப்பு ஆளுநருக்கு உண்டு.” என்று கூறினார்.
ஆளுநர் ஆர்.என். ரவியை சந்தித்து மனு அளித்தது குறித்து அண்ணாமலை தனது ட்விட்டர் பக்கத்தில் கூறியிருப்பதாவது: “தமிழகத்தில் கள்ளச் சாராயம் காரணமாக 22 உயிர்கள் பலியாவதற்குக் காரணமாக இருந்த, சாராய வியாபாரிகளுடன் நெருங்கிய தொடர்பிலிருந்து கொண்டிருக்கும் அமைச்சர் செஞ்சி மஸ்தானைப் பதவி நீக்கம் செய்யும்படி தமிழக முதலமைச்சரை வலியுறுத்தக் கோரி, தமிழக பா.ஜ.க சார்பாக தமிழக ஆளுநர் திரு ஆர்.என்.ரவியை நேரில் சந்தித்து மனு கொடுத்தோம்.
மேலும், கள்ளச் சாராய விற்பனையைத் தடுக்காமல், தன் கடமையிலிருந்து தவறியது மற்றும் போக்குவரத்துத் துறையில் வேலை வாங்கித் தருவதாகக் கூறி லஞ்சம் பெற்று, பண மோசடி செய்த வழக்கில், ஊழல் தடுப்புச் சட்டத்தின் கீழ் விசாரணையை எதிர்கொள்வது ஆகிய காரணங்களுக்காக அமைச்சர் திரு செந்தில் பாலாஜியையும் பதவி நீக்கம் செய்ய வலியுறுத்தக் கோரி கேட்டுக் கொண்டோம்.” என்று குறிப்பிட்டுள்ளார்.
"தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil"