/tamil-ie/media/media_files/uploads/2023/04/Annamalai.jpg)
தமிழக பாரதிய ஜனதா மாநிலத் தலைவர் அண்ணாமலை
பிரதமர் நரேந்திர மோடி பல்வேறு நலத் திட்டங்களை தொடங்கிவைக்க இன்று சென்னை வந்தார். அப்போது, முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் பிரதமர் நரேந்திர மோடியை விமான நிலையத்துக்கு நேரடியாக சென்று வரவேற்றார்.
கவர்னர் ஆர்.என். ரவி, மக்களவை உறுப்பினர்கள், மாநில அமைச்சர்கள் என பலரும் இந்நிகழ்வில் காணப்பட்டனர். எனினும் தமிழக பாஜக மாநிலத் தலைவர் கு. அண்ணாமலை இதில் கலந்துகொள்ளவில்லை.
இதற்கிடையில், திமுகவுக்கு எதிராக அண்ணாமலை கடுமையாக பேசி வருகிறார். மாநில அரசுடன் சமூக உறவை கடைபிடிக்க வேண்டிய இந்த விழாவில் அண்ணாமலை தலை காட்டுவதை பாஜக மேல் இடம் விரும்பவில்லை என ஊடகங்களில் பலரும் பேசி வருகிறார்கள்.
அதே சமயம் பாஜக தரப்பு அண்ணாமலை இன்று தமிழகத்திலேயே இல்லை கர்நாடக சட்டமன்றத் தேர்தல் பொறுப்பாளர் என்ற வகையில் வேட்பாளர்களை இறுதி செய்யும் பணியில் இருக்கிறார்.
இதற்காக பெங்களூருக்கும் டெல்லிக்கும் பறந்து கொண்டிருக்கிறார்; அந்தப் பணியை விட்டுவிட்டு பிரதமரை வரவேற்பதற்காக வரத் தேவையில்லை என கட்சி அவருக்கு அறிவுறுத்தி இருக்கிறது.
அதனால் வரவில்லை என்கிறார்கள். அதேசமயம் பிரதமர் நிகழ்ச்சி தொடர்பாக மாலையில் அடுத்தடுத்து ட்வீட்களை போட்டு இதில் தனக்கு எந்த அதிருப்தியும் இல்லை என்பதையும் சூசகமாக தெளிவுபடுத்தி இருக்கிறார் அண்ணாமலை.
.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.