/indian-express-tamil/media/media_files/HKgAn0tUNbv51GxaSwct.jpg)
தமிழ்நாட்டில் ஏப்ரல் 19-ம் தேதி மக்களவைத் தேர்தல் நடைபெறுகிறது. இதையொட்டி நேற்று உடன் வேட்புமனுத் தாக்கல் நிறைவடைந்தது. இன்று (மார்ச் 28) தமிழகம் முழுவதும் தாக்கல் செய்யப்பட்ட வேட்பு மனுக்கள் மீது அந்தந்த மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில், தேர்தல் அதிகாரி மூலம் வேட்பு மனு பரிசீலனை செய்யப்படுகிறது.
அந்த வகையில் இன்று கோவை மக்களவைத் தொகுதியில் போட்டியிடும் வேட்பாளர்களின் வேட்பு மனு மீது
பரிசீலனை செய்யப்பட்டது. கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மாவட்ட ஆட்சியரும் தேர்தல் நடத்தும் அலுவலருமான கிராந்திகுமார், மற்றும் அதிகாரிகள் தலைமையில் வேட்பாளர்கள், வழக்கறிஞர்கள் முன்னிலையில் இந்த பரிசீலனை நடைபெற்றது. கோவை தொகுதியில் திமுக சார்பில் கணபதி ராஜ்குமார், அதிமுக சார்பில் சிங்கை ராமச்சந்திரன், பாஜக சார்பில் அக்கட்சி மாநிலத் தலைவர் அண்ணாமலை போட்டியிடுகிறார். சீமானின் நாம் தமிழர் கட்சி சார்பில் கலாமணி என்ற பெண் வேட்பாளர் போட்டியிடுகிறார்.
இந்நிலையில், ஆட்சியர் அலுவலகத்தில் வேட்பு மனு பரிசீலனையின் போது பாஜக சார்பில் போட்டியிடும் அண்ணாமலையின் வேட்பு மனு ஏற்ககப்பட்டதாக தேர்தல் அதிகாரி அறிவித்தார். இந்நிலையில், அண்ணாமலை வேட்பு மனுவில் சில தகவல்கள் குறிப்பிடப்படவில்லை. முறையாக நிரப்பப்படவில்லை எனக் கூறி அவரது வேட்பு மனுவை நிராகரிக்க வேண்டுமென என அதிமுக மற்றும் நாம் தமிழர் கட்சியினர் வலியுறுத்தி வாக்குவாதம் செய்தனர்.
இதில் அண்ணாமலை தரப்பில் இரண்டு வேட்பு மனுக்கள் அளிக்கப்பட்டு இருந்த நிலையில் ஒரு வேட்பு மனுவை தள்ளுபடி செய்யப்பட்டது. மற்றொரு வேட்பு மனுவில் பிரமாண பத்திரத்தில் அண்ணாமலையின் ஆவணங்கள் முறையாக தாக்கல் செய்யவில்லை எனவும் நம்பர்:26 விண்ணப்பத்தில் வேட்பாளரின் குற்றப்பின்னணி வரிசைப்படுத்தவில்லை எனவும் வேட்பாளரின் வாக்கு செலுத்தும் இடமானது முறையாக குறிப்பிடவில்லை எனவும் பல்வேறு கட்சியினர் குற்றம் சாட்டினர்.
அதிமுக , திமுக, நாம் தமிழர் கட்சி சார்ந்த வழக்கறிஞர்கள் தேர்தல் நடத்தும் அதிகாரியான கிராந்தி குமார் பாடி முன்னிலையில் தேர்தல் ஆணையத்தின் கையேடு புத்தகத்தை மேற்கோள் காட்டி தெரிவித்தனர்.
அண்ணாமலையின் வேட்பு மனுவை நிறுத்தி வைக்க வேண்டும் என கோரிக்கை விடுத்தனர்.
அதனை தொடர்ந்து இந்த குற்றச்சாட்டுகளை பிழைகளாக ஏற்றுக் கொள்ள முடியாது என தேர்தல் நடத்தும் அதிகாரி தெரிவித்து அண்ணாமலையின் வேட்பு மனு ஏற்கப்பட்டதாக அறிவித்தார். இது குறித்து வேறு வேறு கட்சியினர் கூறுகையில்,தேர்தல் ஆணையம் பாஜகவிற்கு சாதகமாக செயல்படுவதாக குற்றம் சாட்டியுள்ளனர். அதே சமயம் பாஜகவினர் அதிகாரிகளே அண்ணாமலையில் வேட்புமனு ஏற்று கொள்ளப்பட்டதாக தெரிவித்துள்ளதாக கூறினர்.
பல்வேறு கட்சியினர் வாக்குவாதத்தில் ஈடுபட்டதால் அங்கு சிறிது நேரம் சலசலப்பு ஏற்பட்டது. நாம் தமிழர் வேட்பாளர் கலாமணி, ஹிந்துஸ்தான் ஜனதா கட்சி வேட்பாளர் ராகுல் காந்தி, தி.மு.க, அ.தி.மு.க வழக்கறிஞர்கள் இதுகுறித்து குற்றஞ்சாட்டினர்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.