அண்ணாமலையின் இந்த நிலைப்பாடு தமிழகத்தில் பல பா.ஜ.க தலைவர்கள் இடையே மனக்கசப்பை எழுப்பியுள்ளது. அவர்களில் சிலர், ‘முழு கட்சியையும், அனைத்து அரசியல்வாதிகளையும் இழிவுபடுத்தும் வகையில், மாநில பா.ஜ.க தலைவராக எப்படி பணியாற்ற முடியும்’ என்று கேட்கின்றனர்.
தமிழக பா.ஜ.க தலைவர், 38 வயதான முன்னாள் ஐ.பி.எஸ் அதிகாரி கே அண்ணாமலை, கடந்த வாரம் மாநிலத்தில் தேர்தலில் அரசியல் அமைப்பு முறையின் ஊழல், ஏமாற்றுதல் மற்றும் வாக்காளர்களுக்கு லஞ்சம் கொடுப்பது ஆகியவற்றுக்கு எதிராக வலுவான குரலை உருவாக்குவதன் மூலம் அதிர்வலைகளை உருவாக்கினார்.
2024 நாடாளுமன்றத் தேர்தலுக்கு முன்னதாக தனது முக்கிய கூட்டணிக் கட்சியான திராவிடக் கட்சிக் கூட்டணியுடனான உறவை முறித்துக் கொள்ளுமாறு பா.ஜ.க.வை வற்புறுத்தியபோதும், இந்த விஷயத்தில் அ.தி.மு.க.வும் குழப்பத்தில் இருப்பதாக அண்ணாமலை
“ஊழலை எதிர்த்து, நல்லாட்சியை வழங்குவதற்கு எந்த திராவிடக் கட்சியின் ஆதரவும் இல்லாமல் பா.ஜ.க தேர்தலில் போட்டியிட வேண்டியதன் அவசியத்தை வலியுறுத்திய அண்ணாமலை, அ.தி.மு.க.வுடன் பா.ஜ.க கூட்டணி வைப்பது ஊழலில் ஈடுபடுவது மற்றும் வாக்காளர்களுக்கு லஞ்சம் கொடுப்பதற்கு சமம் என்றும் குற்றம் சாட்டினார். அவருடைய கருத்துகள் மாநில அரசியல் வட்டாரங்களில் அதிர்ச்சியை ஏற்படுத்தியதோடு மட்டுமல்லாமல், அவரது சொந்தக் கட்சி முகாமையும் சங்கடப்படுத்தியது என்றால் ஆச்சரியமில்லை. இருப்பினும் அவரது கருத்துக்கள் குறித்து இதுவரை எந்தக் கட்சியிலிருந்தும் அதிகாரப்பூர்வ எதிர்வினை எதுவும் வெளிப்படவில்லை.
அ.தி.மு.க.வுடன் பா.ஜ.க கூட்டணியைத் தொடர்வதற்கு எதிராக அண்ணாமலை சில காலமாகப் போராடிக்கொண்டிருக்கலாம், ஆனால் அவரது கட்சித் தலைமைக்கு 2024-ம் ஆண்டு தேர்தலில் கூட்டணி தொடர்வதை உறுதி செய்வது முக்கியமானது என்பது தெளிவாகிறது. தமிழகத்தில் 39 நாடாளுமன்றத் தொகுதிகள் உள்ளன. மாநிலத்தில் ஆளும் தி.மு.க – காங்கிரஸ் முக்கிய கூட்டணியாக உள்ளது.
கோபத்துக்கும் கொந்தளிப்புக்கும் பெயர் பெற்ற அண்ணாமலை தமிழ்நாட்டின் ஒவ்வொரு முக்கிய அரசியல் தலைவரையும் பின்தொடர்ந்து செல்லும் போது, உயர்ந்த தார்மீகத் தளத்துக்கு மீண்டும் மீண்டும் உரிமை கோரினார்.
ஊழல் செய்வதற்காகவோ அல்லது வாக்காளர்களுக்கு பணம் கொடுப்பதற்காகவோ அரசியலில் சேருவதற்காக தான் ஐ.பி.எஸ் பதவியை ராஜினாமா செய்யவில்லை என்றார். ஆளும் கட்சியைப் போலவே எதிர்க்கட்சிகளும் மாநிலத்தில் வாக்காளர்களுக்கு பணம் கொடுக்கின்றன. இருப்பினும், அவர்களின் அளவுகள் வேறுபட்டிருக்கலாம் என்று அவர் குற்றம் சாட்டினார்.
“ஊழல் கட்சிகளுடன் கூட்டணி அமைக்காமல் தூய்மையான அரசியலைத் தேடும் அவரது கொள்கைக்கு தனது தலைமை ஒப்புதல் அளித்தால், மக்கள் பா.ஜ.க.வை நம்பி மாநிலத்தின் பல்வேறு தேர்தல்களில் அதை ஆதரிப்பார்கள்” என்று அண்ணாமலை கூறியுள்ளார்.
ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலில் எடப்பாடி கே.பழனிசாமி
அரசியலில் ஊழல் குறித்த அண்ணாமலையின் கருத்துகள் தவறில்லை என்று ஒப்புக்கொண்ட ஆர்.எஸ்.எஸ் மூத்த தலைவர் ஒருவர், 2021-ம் ஆண்டு அரவக்குறிச்சி சட்டமன்றத் தொகுதியில் போட்டியிட்டு தோல்வியடைந்த அவருடைய தேர்தல் பிரச்சாரச் செலவுகள் குறித்து கேள்வி எழுப்பினார். நாடாளுமன்றத் தேர்தலில் அ.தி.மு.க-வுடன் கூட்டணி வைப்பதன் முக்கியத்துவத்தை பா.ஜ.க தலைமை கணக்கில் எடுத்துக் கொண்டால், அவர்கள் அண்ணாமலையின் பேச்சைக் கேட்கமாட்டார்கள் என்றும் அவர் கூறினார்.
கடந்த வாரம், அண்ணாமலை, “தமிழகத்தில் நாடாளுமன்றத் தேர்தலில் பங்கேற்க ரூ.80 முதல் ரூ.120 கோடி வரை செலவாகும்” என்று குற்றம் சாட்டினார். “என்னை மாற்றிக்கொண்டு, என் மதிப்புகளை தியாகம் செய்துவிட்டு நான் அரசியலில் இருக்க விரும்பவில்லை” என்று அண்ணாமலை கூறினார்.
அவருடைய கருத்துக்கள் மாநிலத்தில் உள்ள பல பா.ஜ.க தலைவர்கள் இடையே சலசலப்பை எழுப்பியுள்ளன. “ஒட்டுமொத்த கட்சியையும் அனைத்து அரசியல்வாதிகளையும் இழிவுபடுத்தும் அண்ணாமலை எப்படி மாநில பா.ஜ.க தலைவராக பணியாற்ற முடியும்” என்று கேட்ட பா.ஜ.க மூத்த தலைவர் ஒருவர், “எங்கள் டெல்லி
பா.ஜ.க மாவட்ட தலைவர் ஒருவர் கூறுகையில், “கடந்த மாதம், அண்ணாமலை, ஒவ்வொரு மாவட்ட பா.ஜ.க-வும் ரூ. 2 கோடி கட்சி நிதி திரட்ட இலக்கு நிர்ணயித்தார். இருப்பினும், அது சாத்தியப்படவில்லை. இது அவரை “வருத்தப்படுத்தியது” என்று அவர் கூறினார்.
அண்ணாமலை ஐ.பி.எஸ் பணியில் இருந்து விலக முடிவெடுத்தது, முதலில் பா.ஜ.க-வில் சேர்வதற்காக அல்ல. சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் தொடங்க இருந்த அரசியல் கட்சியில் சேர்வதற்காக முடிவெடுத்தார். ஆனால், அது பலனளிக்கவில்லை” என்று ஒரு உயர்மட்ட வட்டாரம் தெரிவித்தது.
மேலும், இந்த வட்டாரம் கூறுகையில், “தமிழர், முன்னாள் ஐ.பி.எஸ் அதிகாரி, லட்சிய இளைஞர், ஒப்பீட்டளவில் நேர்மையான இமேஜ் – இவை அனைத்தும் அண்ணாமலைக்கு சாதகமாக செயல்பட்டன. இந்தத் திட்டங்கள் பா.ஜ.க-வுக்கும் தெரிந்திருந்தது. இருப்பினும், கோவிட் தொற்றுநோய் இந்த திட்டங்களைத் தடம் புரட்டிப் போட்டது: ரஜினிகாந்த் தனது அரசியல் கட்சித் திட்டத்தை கைவிட முடிவு செய்தார். அண்ணாமலை இறுதியில் பா.ஜ.க-வில் சேர்ந்தார்.” என்று தெரிவித்தனர்.
மேலும், அந்த வட்டாரம் கூறுகையில், “அரசியல் கடினமானது என்பதை அண்ணாமலை இப்போது உணர்ந்துள்ளார். தமிழ்நாடு மட்டுமல்ல, தெலுங்கானா, ஆந்திரா, கர்நாடகா என எல்லா இடங்களிலும் ஊழல் மற்றும் வாக்காளர்களுக்கு பணம் கொடுக்கப்படுகிறது. அண்ணாமலையின் வார்த்தைகள் உண்மைதான். ஆனால், அவர் சொன்னதற்கும் அவர் தொடர்ந்து செய்வதற்கும் இடையே ஒரு பெரிய பொருத்தமின்மை உள்ளது. குறிப்பாக அவர் கட்சி ஆளும் கர்நாடகாவில் அதன் சட்டமன்றத் தேர்தல் பிரச்சாரத்தில் பா.ஜ.க இணைப் பொறுப்பாளராக இருப்பதால், அங்கே நிலைமை வேறு இல்லை.” என்று தெரிவித்தன.
அண்ணாமலையின் நிலைப்பாட்டைக் கண்டு பா.ஜ.க மற்றும் ஆர்.எஸ்.எஸ்-ஸின் ஒரு பிரிவினர் குழப்பமடைந்திருக்கிற நிலையில், பா.ஜ.க மாவட்டத் தலைவர் ஒருவர் கூறுகையில், “வேறு எந்தத் தலைவராக இருந்திருந்தால், இந்நேரம் அவர் டெல்லிக்கு வரவழைக்கப்பட்டிருப்பார். பல நாட்களாகியும் இங்கு எதுவும் நடக்கவில்லை. இதற்கு என்ன அர்த்தம்?” என்று கேட்கிறார்.
அண்ணாமலை பா.ஜ.க தேசிய பொதுச் செயலாளர் (அமைப்பு) பி.எல்.சந்தோஷின் ஆதரவைப் பெற்றவராக பரவலாகத் தெரிந்தது. அவரைக் பா.ஜ.க-வில் சேர்த்துக் கொள்ளச் செய்த பெருமைக்குரியவர். இருப்பினும், அவரது முயற்சி பாஜக தலைமையை ஒரு இடத்தில் நிறுத்தியிருக்கலாம். அ.தி.மு.க.வுடன் கூட்டணி தொடர தலைமை அழுத்தம் கொடுத்தால் அவர் மாநில தலைவர் பதவியை ராஜினாமா செய்ய வாய்ப்பில்லை என்று அவருக்கு நெருக்கமான சில மாநில கட்சி தலைவர்கள் கூறுகின்றனர். டெல்லியில் பா.ஜ.க ஆட்சியில் இருப்பதால் அண்ணாமலை புதிய கட்சியை உருவாக்குவதையோ அல்லது வேறு எந்த போக்கில் இறங்குவதையோ அவர்கள் நிராகரிக்கின்றனர்.
“டெல்லி மற்றும் பஞ்சாபில் ஆம் ஆத்மி கட்சி வெற்றிகரமாக முயற்சி செய்த தூய்மையான அரசியல் யோசனையை மட்டுமே அண்ணாமலை முன்மொழிந்தார்” என்று அவருக்கு நெருக்கமான தலைவர் ஒருவர் தெரிவித்தார். “அவர் ராஜினாமா செய்தால், அவர் கர்நாடகாவின் கட்சிப் பொறுப்பாளராக நியமிக்கப்படலாம்… அல்லது ராஜ்யசபா பதவி அல்லது மத்திய அமைச்சர் பதவி அளிக்கப்படலாம்” என்று மற்றொரு தலைவர் கூறினார்.
இதற்கிடையில், மாநில அரசியல் வட்டாரங்களில் உள்ள அனைவரின் பார்வையும் அண்ணாமலையின் எதிர்கால நகர்வுகள் மீது இருக்கும். குறிப்பாக கூட்டணி குறித்து இருக்கும்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“