நாடாளுமன்ற தேர்தலை முன்னிட்டு கோவை தொகுதியில் பாஜக சார்பில் போட்டியிடும் அக்கட்சியின் மாநில தலைவர் அண்ணாமலை கோவையில் மூன்று நாட்களாக பிரச்சாரம் மேற்கொண்டார்.
நேற்று முன்தினம் கவுண்டம்பாளையம் தொகுதியில் பிரச்சாரம் மேற்கொண்ட அவர் துடியலூர் - நஞ்சுண்டாபுரம் பகுதியில் வந்து கொண்டிருக்கையில் அவரை வரவேற்க இளைஞர்கள் ஜமாப் அடித்துக்கொண்டிருந்தனர்.
அப்போது பிரச்சார வாகனத்தில் இருந்து இறங்கிய அண்ணாமலை நேராக டிரம்ஸ் அடிக்கும் இடத்திற்கு வந்து அவரும் இளைஞர்களுடன் சேர்ந்து டிரம்ஸ் அடித்து அசத்தினார். தற்பொழுது அந்த காட்சிகள் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“