/indian-express-tamil/media/media_files/2025/09/28/annamalai-press-karur-2025-09-28-23-00-05.jpg)
பா.ஜ.க முன்னாள் மாநிலத் தலைவர் கரூர் சென்று பாதிக்கப்பட்டவர்களைப் பார்த்து ஆருதல் கூறினார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அண்ணாமலை, “விஜய்யின் பயணத் திட்டத்தில் கோளாறு உள்ளது என்றும் தனக்கு ஒரு நபர் ஆனையத்தில் நம்பிக்கை இல்லை அதனால், சி.பி.ஐ விசாரிக்க வேண்டும்” என்று வலியுறுத்தினார்.
கரூரில் த.வெ.க தலைவர் விஜய் பிரச்சாரக் கூட்ட நெரிசலில் இதுவரை 40 பேர் உயிரிழந்துள்ளனர். பலர் காயமடைந்து சிகிச்சை பெற்று வருகின்றனர். இந்த சம்பவம் தமிழகத்தை மட்டுமல்லாமல் நாட்டையே உலுக்கியுள்ளது.
இந்நிலையில், பா.ஜ.க முன்னாள் மாநிலத் தலைவர் கரூர் சென்று பாதிக்கப்பட்டவர்களைப் பார்த்து ஆருதல் கூறினார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அண்ணாமலை, “விஜய்யின் பயணத் திட்டத்தில் கோளாறு உள்ளது என்றும் தனக்கு ஒரு நபர் ஆனையத்தில் நம்பிக்கை இல்லை அதனால், சி.பி.ஐ விசாரிக்க வேண்டும்” என்று வலியுறுத்தினார்.
விஜய் குறிப்பிட்ட நேரத்துக்கு வராமல் 5-6 மணி நேரம் தாமதமாக வருகிறார். நாமக்கல்லில் 9 மணிக்கு ஒரு இடத்துக்கு வருகிறார் என சொல்கிறார்கள், ஆனால் 2.30 மணிக்குதான் வருகிறார். கரூரில் 12 மணிக்கு சொல்லிவிட்டு 7 மணிக்கு வருகிறார். சென்னையில் இருந்தே காலையில் 7 மணிக்குதான் விஜய் கிளம்புகிறார் என்று குறிப்பிட்டு செய்தியாளர்கள் பா.ஜ.க முன்னாள் மாநிலத் தலைவர் அண்ணாமலையிடம் கருத்து கேட்டனர். இதற்கு பதிலளித்த அண்ணாமலை, “நான் தமிழக வெற்றிக் கழகத்தின் அனுமதி கடிதத்தைப் பார்த்தேன். அவர்கள் அதில் போட்டிருக்கிற நேரம், கரூரைப் பொறுத்தவரை 3 மணியில் இருந்து இரவு 10 மணி வரை என்று அனுமதி கடிதம் கொடுத்திருக்கிறார்கள். அப்படி இருக்கும்போது, எல்லோருக்கும் தெரியும் 3 மணிக்கு விஜய் வரப்போவதில்லை. 3 மணியில் இருந்து 10 மணி வரை என்றால் 8 மணி 9 மணிக்குதான் வருவார்கள். காவல்துறை எதற்காக நீண்ட நேரம் கொடுக்கிறீர்கள். இன்றைக்கு தாமதமாக வந்தார்கள் என்பது முக்கியம் கிடையாது. அனுமதி கடிதத்திலேயே 3 மணியில் இருந்து 10 மணி வரை என்று இருக்கிறது. அப்படி என்றால், விஜய் 3 மணிக்கும் வரலாம், 10 மணிக்கும் வரலாம். நாம் விஜய்யை குற்றம் சொல்ல முடியாது. காரணம் அனுமதி கடிதம் தந்த நேரம் இருக்கிறது. காவல்துறை எதற்கு 7 மணி நேரம் கொடுக்கிறீர்கள். ரோடு ஷோ வருகிறார்கள், பார்க்கிறார்கள். போகிறார்கள். 2 மணிநேரம் கொடுங்கள். கட்டுப்பாடு செய்யுங்கள். 2 மணி நேரத்தில் தலைவர் வரவில்லையா போகவிடாதீர்கள். 144 என எத்தனை சி.ஆர்.பி.சி-யில் இருக்கிறது பயன்படுத்துங்கள்.
அதனால், இதைப் பொறுத்தவரை விஜய் தாமதமாக வந்தார் என்பதை நான் ஏற்றுக்கொள்ள மாட்டேன். காரணம், அனுமதி கடிதத்தில் 3 மணியில் இருந்து 10 மணி வரை என்று இருக்கிறது. காவல்துறை எதற்கு அனுமதி கொடுத்துங்கள். விஜய் 3 மாவட்டங்களுக்கு சென்றவர், 2 மாவட்டங்களுக்கு செல்வதாக மாற்றி இருக்கிறார்கள். மாவட்டம் என்றால் பொதுவாக சாயந்திரம்தான் வருவார்கள். எனவே, நான் ஏற்கெனவே சொன்னதுபோல, பயணத்தினுடைய வடிவமைப்பில் கோளாறு இருக்கிறது.
சனிக்கிழமை வேண்டாம். குழந்தைகள் வருவார்கள். வேண்டாம் என்றாலும் குழந்தைகள் எட்டிப் பார்ப்பார்கள். ஒரு சின்னக் குழந்தை, விஜய்யைப் பார்ப்போம், தலைவரைப் பார்ப்போம், நடிகரைப் பார்ப்போம் என்று எட்டிப் பார்க்கும். நீங்கள் எதற்கு அனுமதி கொடுக்கிறீர்கள். சனிக்கிழமை பண்ணாதீர்கள். பெண்கள் வீட்டு வேலையை முடித்துவிட்டு சனிக்கிழமை வருவார்கள். ஞாயிற்றுக்கிழமை யாரும் வேலைக்குப் போகமாட்டார்கள். அதனால், விஜய்யின் யாத்திரையின் வடிவமைப்பில் கோளாறு இருக்கிறது. அதை முதலில் சரி செய்யுங்கள்.
அதற்காக யாத்திரையை நிறுத்துகிறோம். ஒரு அரசியல் தலைவர் யாத்திரை போயித்தான் ஆக வேண்டும். விஜய் அவர்களோ, யாருமே மக்கள் சாக வேண்டும் என யாரும் விரும்பவில்லை. தவறு எல்லாப் பக்கமும் நடந்திருக்கிறது. அதைத் திருத்திக்கொண்டு, அடுத்த கட்ட யாத்திரையை இன்னும் பாதுகாப்பாக பண்ண வேண்டும் என்பதுதான் எங்களின் வேண்டுகோள்.” என்று கூறினார்.
தூத்துக்குடி துப்பாக்கிச் சூட்டில் நியமித்த ஒரு நபர் ஆணையத்தின் அறிக்கைப்படி இதுவரை இன்னும் ஒருவர் மீது கூட நடவடிக்கை எடுக்கப்படவில்லை. இந்த நிலையில், இந்த ஒரு நபர் ஆணையம் அமைக்கப்பட்டுள்ளது என்று செய்தியாளர்கள் அண்ணாமலையிடம் கருத்து கேட்டனர்.
இதற்கு பதிலளித்த அண்ணாமலை, “எனக்கு இந்த ஒரு நபர் ஆணையத்தில் நம்பிக்கை இல்லை. ஏனென்றால், ஒரு நபர் ஆணையத்தின் நீதிபதியை நியமிப்பது யார், முதலமைச்சர். அதிலேயே ஓரவஞ்சகம் இருக்கிறது. நீதிபதியைப் பற்றி எனக்கு எந்த குற்றச்சாட்டும் இல்லை. ஒரு முதலமைச்சர் இந்த ஒரு நீதிபதிதான் வேண்டும், அவர்களை வைத்துதான் ஒரு நபர் ஆணையம் அமைக்கப்போகிறேன் என்றால், அங்கேயே நான் பிரச்னையைப் பார்க்கிறேன். அதனால், அதில் நியாயமிருப்பதாக எனக்குத் தெரியவில்லை. சுதந்திரமான அமைப்பான சி.பி.ஐ-க்கு கொடுங்கள். இல்லை, உயர் நீதிமன்றத்தில் தலைமை நீதிபதிக்கு எழுதுங்கள். ஐயா நீங்களே விசாரணை நடத்த ஒரு நீதிபதியை நியமனம் பண்ணுங்கள் என்று எழுதுங்கள். அதனால், அந்த நீதிபதியை ஓய்வு பெற்ற நீதிபதியாக இருந்தாலும் முதலமைச்சர் எப்படி தேர்வு செய்யலாம், அதனால், இந்த ஒரு நபர் ஆணையத்தில் எனக்கு நம்பிக்கை இல்லை. சி.பி.ஐக்கு கொடுங்கள். அடிப்படைக் காரணம் பார்க்க வேண்டும். கீழே யார் வந்தார்கள்.
எப்படி செருப்பு வந்தது, ஒரு 4-5 பேர், ஒரு சின்ன கலவரம் ஆனது. அது எப்படி ஆச்சு? ஏன் ஆச்சு? அதைக் கண்டுபிடிக்க வேண்டும். அதைக் கண்டுபிடித்தால் அந்த கூட்டம் எப்படி தூண்டப்பட்டார்கள் என்று நாம் பார்க்க வேண்டும். அது கும்பல் மனநிலை. அதனால், முதலமைச்சர், அஜித்குமார் வழக்கில் நெஞ்சை நிமிர்த்திக்கொண்டு சி.பி.ஐ-யிடம் கொடுத்தீர்கள். அது ஒரு இறப்பு. இன்றைக்கு 40 பேர் இறந்திருக்கிறார்கள். இன்றைக்கு ஏன் சி.பி.ஐ-யிடம் நெஞ்சை நிமிர்த்திக்கொண்டு கொடுக்கவில்லை. எல்லா உயிரும் ஒரே உயிர்தானே, ஒரே மதிப்புதானே. அதனால், உடனடியாக சி.பி.ஐ-க்கு கொடுங்கள்.
ஒருபக்கம் த.வெ.க உயர் நீதிமன்றத்துக்கு செல்வது, இன்னொரு பக்கம் கரூர் மாவட்டத்தைச் சார்ந்தவர் சென்னை உயர் நீதிமன்றத்துக்கு செல்வது, எதற்கு இது. சி.பி.ஐ அறிக்கை கொடுக்கட்டும். யார் தப்பு பண்ணார்கள் என்று தெரிந்த பிறகு, எல்லார் மீதும் நடவடிக்கை எடுங்கள். யார் மீதும் நடவடிக்கை எடுக்க வேண்டாம் என்று சொல்லவில்லை. அடிப்படை நடவடிக்கை எஸ்.பி மற்றும் கலெக்டர் மீது ஏன் எடுக்கவில்லை. இதற்கு யார் பொறுப்பு. ஒரு எஸ்.பி, கலெக்டரின் முதன்மைக் கடமை உயிரைப் பாதுகாப்பது. அப்புறம்தான் எல்லாமே. ஒரு உயிரைப் பாதுகாக்க முடியாத எஸ்.பி, கலெக்டர், 40 பேர் இறந்த ஒரு மாவட்டத்தில் அவர்கள் எஸ்.பி, கலெக்டராக இருக்க தார்மீக உரிமை கிடையாது.” என்று கூறினார்.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.