செந்தில் பாலாஜி துறையில் முறைகேடு... ஆளுநரிடம் அண்ணாமலை புகார் மனு!
அவருக்கும் மின்சாரத்துறை அமைச்சர் செந்தில் பாலாஜிக்கும் இடையே வார்த்தைப் போர் தீவிரமான நிலையில் தற்போது இந்த விவகாரத்தில் ஆளுநர் தலையிட்டு விசாரிக்க வேண்டும் என்று கூறி புகார் மனு கொடுத்துள்ளார் அண்ணாமலை.
சமீபத்தில் தமிழக அரசு அறிவித்த மின்சாரத்துறை தொடர்பான புதிய திட்டங்களில் தனியார் நிறுவனம் ஒன்றுக்கு கூடுதல் சலுகைகள் வழங்கப்படுகிறது என்று கூறி பரப்பாக பேசி வந்தார் பாஜக மாநில தலைவர் அண்ணாமலை. அவருக்கும் மின்சாரத்துறை அமைச்சர் செந்தில் பாலாஜிக்கும் இடையே வார்த்தைப் போர் தீவிரமான நிலையில் தற்போது இந்த விவகாரத்தில் ஆளுநர் தலையிட்டு விசாரிக்க வேண்டும் என்று கூறி ஆளுநரிடம் புகார் மனு கொடுத்துள்ளார் அண்ணாமலை.
Advertisment
நஷ்டத்தில் இயங்கி வரும் பி.ஜி.ஆர். எனர்ஜி என்ற நிறுவனத்திடம் முறைகேடாக ரூ. 4,472 ரூபாய் மதிப்பில் ஒப்பந்தம் செய்துள்ளது தமிழக அரசு என்று குற்றச்சாட்டு ஒன்றை முன்வைத்தார் பாஜக தலைவர் அண்ணாமலை.
இதற்கு பதில் அளிக்கும் வகையில் ட்வீட் செய்திருந்த மின்சாரத்துறை அமைச்சர் செந்தில் பாலாஜி, அண்ணாமலை இந்த குற்றச்சாட்டை எதன் அடிப்படையில் கூறுகிறார் என்பதை 24 மணி நேரத்தில் விளக்க வேண்டும் இல்லை என்றால் சட்டப்படி நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்று குறிப்பிட்டிருந்தார். மேலும் தன்னுடைய ட்விட்டரில் ”BGR நிறுவனம் டெண்டர் எடுத்த ஆண்டு 2019. டெண்டர் கொடுத்த ஆட்சி அ.தி.மு.க. வாழ்ந்த 13,700+ சொச்ச நாள்களில் 20,000 புத்தகம் வாசித்திருக்கும் அதிமேதாவி ஆர்வக் கோளாறுகளுக்குப் புரிதல் வேண்டும் அல்லது புரிந்து கொள்ளப் பக்குவம் வேண்டும். அரைவேக்காடுகளுக்கு இரண்டும் இல்லை” என்றும் விமர்சனம் செய்திருந்தார் அமைச்சர்.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil