முதல்வர் பதவிக்கு என்னைவிட திறமையான, தகுதியான நபர்கள் பாஜகவின் உள்ளதாக அண்ணாமலை தெரிவித்துள்ளார்.
“ உச்சநீதிமன்றத்தில் பல ஆண்டுகளாக நடைபெற்ற வழக்கில், இஸ்லாமிய நீதிபதிகள் இருந்த அமர்வில், தீர்ப்பு வழங்கப்பட்டது. சட்டப்படி எங்கே ராமர் கோவில் கட்ட வேண்டும். எங்கே மசூதி கட்டப்பட வேண்டும் என்று நீதிமன்றம் வழிகாட்டி உள்ளது. உதயநிதி ஸ்டாலின் வரலாற்றை தெரிந்து வைத்துகொள்ள வேண்டும். 83 % மாநில அரசு சமந்தமாக இருக்கிறது. 17 % மத்திய அரசு சமந்தமாக இருக்கிறது. மாநில அரசு சமந்தமாக இருப்பதால் வேகமாக இது நகரவில்லை. என்னைவிட திறமையான, தகுதியான முதலமைச்சர் பதவிக்கு தகுதியுடைய பலரும் பாஜகவில் உள்ளனர். என்னுடைய வேலை என்பது கட்சியை வளர்ப்பது.
தகுதியான முதல்வர் யார் என்பதை என்னைப்போல் தி.மு.கவில் இருக்கும் ஒருவர் சொல்ல முடியுமா? அவர்களை சொல்லச்சொல்லுங்கள். 75 ஆண்டுகளாக மாநில உரிமைகளை மீட்பதை மட்டுமே தி.மு.க பேசி வருகிறது. மாநில உரிமைகளை மீட்டெடுப்பது தி.மு.க-விற்கு வெறும் வாய்ச்சொல்” என்று அவர் கூறியுள்ளார்.
இதை பேசும்போது வானதி சீனிவாசன் உடன் இருந்தார் என்பது குறிப்பிடதக்கது.