Advertisment

மத்திய அரசின் திட்டங்களை தொடர்ந்து மறுத்தால், மாநிலத்தின் வளர்ச்சிக்கு என்ன செய்வது? - அண்ணாமலை கேள்வி

“இந்தியா வளர்ச்சிப் பாதையில் செல்ல உள்கட்டமைப்புகள் அவசியம். மத்திய அரசின் திட்டங்களைத் தொடர்ந்து மறுத்து வந்தால் மாநிலத்தின் வளர்ச்சிக்கு என்ன செய்வது?” என்று பா.ஜ.க மாநிலத் தலைவர் அண்ணாமலை கேள்வி எழுப்பியுள்ளார்.

author-image
WebDesk
New Update
Annamalai press meet xy

பா.ஜ.க மாநிலத் தலைவர் அண்ணாமலை சென்னையில் கட்சியின் தலைமை அலுவலகம் கமலாலயத்தில் புதன்கிழமை செய்தியாளர்களை சந்தித்துப் பேசினார்.

பா.ஜ.க மாநிலத் தலைவர் அண்ணாமலை சென்னையில் கட்சியின் தலைமை அலுவலகம் கமலாலயத்தில் புதன்கிழமை செய்தியாளர்களை சந்தித்துப் பேசினார். அப்போது அண்ணாமலை கூறுகையில், “தமிழக அரசு தொடரந்து செய்துவரக்கூடிய ஒரு ஏமாற்று வேலை தமிழகத்தில் இருக்கக்கூடிய எந்த கோயில்களின் வரவு செலவு கணக்குகளையும் சி.ஏ.ஜி  தணிக்கைக்கு கொடுக்கவில்லை. சென்னை உயர் நீதிமன்றத்தில் நீதிபதி மகாதேவன் ஆதிகேசவன் அடங்கிய அமர்வில் ஜூன் 8-ம் தேதி 2023-ல் அளித்த தீர்ப்பில் தமிழ்நாட்டில் இருக்கக்கூடிய இந்து அறைநிலையத் துறையின் கீழ் உள்ள எல்லா கோவில்களும் தணிக்கைக்கு உட்படுத்தப்பட வேண்டும் என்று தீர்ப்பு கொடுத்துள்ளது. கோயில்களுக்கு எப்படி பணம் வருகிறது, எப்படி செலவாகிறது என்பதை மக்கள் பார்க்க வேண்டும், அதனால் நீதிமன்றம் கொடுத்த தீர்ப்புக்கு எதிராக தமிழக அரசுச் துறை சம்பந்தப்பட்ட எந்த கணக்கு வழக்கும் சி.ஏ.ஜி அமைப்புக்கு எந்த விவரத்தையும் கொடுக்கவில்லை. இதை வன்மையாக நாங்கள் கண்டிக்கிறோம். இது தமிழகத்தில் எச்.ஆர்.என்.சி.இ சி அமைப்பு ஏன் இருக்கக் கூடாது என்பதற்கு
இதுவும் ஒரு உதாரணம்” என்று அண்ணாமலை கூறினார். 

Advertisment

மேலும், “உயர்நீதிமன்றம் கொடுத்து இருக்கக்கூடிய தீர்ப்புக்கு எதிராக தமிழக அரசின் நடவடிக்கை இருப்பதால் பா.ஜ.க சார்பில், உயர் நீதிமன்றத்தில் நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தமிழக அரசின் மீது நாங்கள் தாக்கல் செய்யப் போகிறோம்” என்று அண்ணாமலை கூறினார். 


“சி.ஏ.ஜி அறிக்கை, தமிழக அரசு நிர்வாகம் அதள பாதாளத்தில் செயல்பட்டுக்கொண்டிருக்கிறது என்பதை இந்த தணிக்கை உறுதி செய்துள்ளது. ஏனென்றால், அடுத்த தணிக்கை வருவதற்கு இன்னும் 4 ஆண்டுகள் ஆகும். தமிழக அரசு விழித்துக்கொள்ள வேண்டும்.” என்று அண்ணாமலை கூறினார்.

“அதானிக்கும் தி.மு.க அரசு ஒப்பந்தம் கொடுத்திருக்கிறார்கள் என்பதை நாங்கள் தொடர்ந்து பேசுகிறோம். இதற்கு ஒரு அமைச்சர் அதை அ.தி.மு.க ஆட்சியில் கொடுத்தார்கள், நாங்கள் கொடுக்கவில்லை என்கிறார். அதற்கு, நீங்கள் ஆட்சிக்கு வந்த பிறகு, கமுதி சோலார் பவர் பிளாண்ட் கொடுத்திருக்கிறீர்கள் என்று கூறினோம். முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் சட்டமன்றத்தில் என் மீது அபாண்டமான குற்றச்சாட்டை வைக்கிறார்கள். நான் அதானியை சந்தித்ததே இல்லை என்று கூறினார். நாங்கள் எங்கேயும் முதலமைச்சர் ஸ்டாலின் அதானியை சந்தித்தார்கள் என்று நாங்கள் சொல்லவில்லை. அதானியை சந்திப்பது குற்றமும் அல்ல. நீங்கள் அதானிக்கு ஒப்பந்தம் கொடுத்திருக்கிறீர்கள் என்பதுதான் எங்கள் கேள்வி. நாங்கள் உங்கள் மருமகனும் அதானியும் சந்தித்தார்கள் என்ற குற்றச்சாட்டை வைக்கிறோம். உங்கள் சார்பாக ஐ.ஏ.எஸ் அதிகாரிகள், தனிச் செயலர்கள் அதானி நிறுவனத்தைச் சார்ந்த அதிகாரிகளை சந்தித்திருக்கிறார்கள். கடந்த வாரமும் சந்திப்பு நடந்திருக்கிறது. உங்கள் மருமகன் சந்திக்கிறார், உங்களைச் சுற்றி இருக்கக்கூடிய அதிகாரிகள் சந்திக்கிறார்கள். இப்போதும் அதானியை சந்திப்பது நாங்கள் தவறு என்று சொல்லவில்லை. இதை நீங்கள் சொன்னதற்காக சொல்கிறோம். அதனால், உங்கள் மருமகன் சந்திப்பது நீங்கள் சந்திப்பது மாதிரி தான், அதனால், முதல்வர் ஸ்டாலின், அவரது மருமகன் அதானி நிறுவனத்தைச் சார்ந்தவர்களை சந்திக்கவில்லை என்று சட்டமன்றத்தில் சொல்லட்டும். அவர்கள் சந்தித்தார்கள் என்று நாங்கள் ஆதாரம் தருகிறோம். அதனால், முதலமைச்சர் ஸ்டாலின் அதானியை சந்திக்கவில்லை என்று மடைமாற்றம் செய்யப்படுகிற விஷயத்தைக் கைவிட வேண்டும்.” என்று அண்ணாமலை கூறினார்.

Advertisment
Advertisement

தொடர்ந்து பேசிய பா.ஜ.க மாநிலத் தலைவர் அண்ணாமலை, “இந்தியா வளர்ச்சிப் பாதையில் செல்ல உள்கட்டமைப்புகள் அவசியம். மத்திய அரசின் திட்டங்களைத் தொடர்ந்து மறுத்து வந்தால் மாநிலத்தின் வளர்ச்சிக்கு என்ன செய்வது?” என்று அண்ணாமலை கேள்வி எழுப்பினார்.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil
Annamalai
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment