திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் கந்தசஷ்டி திருவிழா கடந்த 4ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கப்பட்டது. இந்த விழாவின் முக்கிய நிகழ்வான சூரசம்ஹாரம் நிகழ்ச்சி நேற்று நடைபெற்றது.
கொரோனா தடுப்பு நடவடிக்கையாக, இவ்விழாவில் பக்தர்கள் பங்கேற்க அனுமதி இல்லை என கோயில் நிர்வாகம் தெரிவிக்கப்பட்டிருந்தது.
சூரசம்ஹாரம் நடைபெற்ற கடற்கரை நுழைவு பகுதியில் 3 பக்கமும் தகரத்தை கொண்டு அடைக்கப்பட்டு இருந்தன. மேலும் கடற்கரை வழியாக பக்தர்கள் வராத வகையில் நாழிக்கிணற்றில் இருந்து கடல் நீர் வரை தடுப்பு வேலிகள் அமைக்கப்பட்டு இருந்தன. சூரசம்ஹாரத்தை ஒட்டி சுமார் 2 ஆயிரம் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர்.
இந்நிலையில், பக்தர்களுக்கு அனுமதி மறுக்கப்பட்ட சூரசம்ஹார விழாவில் திமுக நிர்வாகிகளின் குடும்பத்தினர் பங்கேற்றிருப்பது குறித்து பிரபல ஆங்கில செய்தி நிறுவனம் வெளியிட்டுள்ள செய்தியை தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை தனது ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.
தொடர்ந்து, அந்த செய்தியை பதிவிட்டு தமிழில் குறியிருப்பதாவது," திருச்செந்தூர் சூரசம்ஹாரம் நிகழ்ச்சிக்கு மக்களுக்கு அனுமதி இல்லை என்று சொன்ன பின்பு, அங்கிருந்த மக்களை போலீஸ் மூலமாக விரட்டிய பின்பு அந்த நிகழ்ச்சியில் பங்கேற்றவர்கள், ஆளும் கட்சியான அறிவாலயத்தை சேர்ந்த இந்து இறநிலையத்துறை அமைச்சர், அவர்களுடைய குடும்பத்தினர் என்பதுதான் செய்தி! எனத் தெரிவித்துள்ளார்.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil