சென்னை கிண்டி அண்ணா பல்கலைக்கழக வளாகத்தில் மாணவி ஒருவர் பாலியல் துன்புறுத்தலுக்கு ஆளானது பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது.
மாணவிக்கு பாலியல் துன்புறுத்தல் கொடுத்த ஞானசேகரன் என்பவரை போலீசார் கைது செய்து விசாரணை மேற்கொண்ட நிலையில் அவர் திமுகவை சேர்ந்தவர் என்பது தெரியவந்தது.
இந்நிலையில் பல்வேறு அரசியல் கட்சியினர், மாணவர்கள் இதுகுறித்து கேள்வி எழுப்புவதுடன் போராட்டத்திலும் ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில் தான் இதற்கு பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை முதல்வருக்கு கேள்வி எழுப்பி பதிவு ஒன்றையும் தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.
அதில், “ஒரு பெண் கல்லூரிக்குள் நுழைந்தால் அது சமூக புரட்சி என்று நிகழ்ச்சி ஒன்றில் இன்று தமிழக முதல்வர் திரு. மு.க.ஸ்டாலின் அவர்கள் பேசியுள்ளார்.
கல்லூரிக்குள் நுழைந்து அங்கு பயிலும் மாணவியை பாலியல் வன்கொடுமை செய்தவனை உங்கள் கட்சியில் இருந்து இன்று வரை நீக்காமல் ஒரு ஆட்சியை நடத்திக் கொண்டிருக்கும் போது, மேடையில் எப்படி இப்படி பேசுகிறீர்கள் முதல்வர் அவர்களே? ஒரு பெண் கல்லூரிக்குள் நுழைந்தால் அது சமூக புரட்சி, அந்த பெண்ணுக்குக் கொடுக்கப்பட வேண்டிய குறைந்தபட்ச பாதுகாப்பை கூட உறுதி செய்ய முடியாத ஒரு அவல ஆட்சி தான் இந்த திராவிட டிசாஸ்டர் மாடல்” என்று பதிவிட்டுள்ளார்.
தூத்துக்குடியில் நடைபெற்ற புதுமைப்பெண் திட்ட விரிவாக்க விழாவில் முதலமைச்சர் பங்கேற்று திட்டத்தில்ன் விரிவாக்க நலங்களை வழங்கிய பின் பெண்கள் கல்வி குறித்து பேசிய நிலையில் பா.ஜ.க மாநிலத் தலைவர் அண்ணாமலை கேள்வி எழுப்பி எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ளார்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“