தமிழ்நாடு பாரதிய ஜனதா மாநிலத் தலைவர் அண்ணாமலை, தி.மு.க. தலைவர்களின் சொத்துப் பட்டியலை வெளியிட்டார். அப்போது, முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் ரூ.200 கோடியை மெட்ரோ இரு ஷெல் நிறுவனத்திடம் இருந்து லஞ்சமாக பெற்றுள்ளார் என்ற திடுக்கிடும் தகவலையும் வெளியிட்டார்.
தொடர்ந்து, இந்தப் புகார்களை ஏனோ தானோ என்று வெளியிடவில்லை. பூதகண்ணாடி கொண்டு பாருங்கள், 2ஆ ம் தேதி மீண்டும் பத்திரிகையாளர்களை சந்திக்கிறேன். அந்நாளில் கேள்வி பதில் வைத்து கொள்வோம்.
- வீடியோவில் வெளியான சொத்து விவரம் பட்டியல் வருமாறு:
- ஜெகத்ரட்சகன் – ரூ.50 ஆயிரத்து ,219.37 கோடி
- எ.வ.வேலு – ரூ.5,442.39 கோடி
- கே.என்.நேரு – ரூ.2,495.14 கோடி
- கனிமொழி- ரூ.830.33 கோடி
- கலாநிதிமாறன் – ரூ.12,450 கோடி
- டிஆர் பாலு – ரூ.10,841.10 கோடி
- துரைமுருகன் மகன் கதிர் ஆனந்த் – ரூ.579.58 கோடி
- கலாநிதி வீராசாமி – ரூ.2,923.29 கோடி
- பொன்முடி மற்றும் கவுதம் சிகாமணி – ரூ.581.20 கோடி
- திமுக கட்சியின் சொத்து மதிப்பு – ரூ.1,408.94 கோடி
- அன்பில் மகேஷ் பொய்யாமொழி ரூ.1,023.22 கோடி
- உதயநிதி – ரூ.2,039 கோடி
- சபரீசன் – ரூ.902.46
- ஜி ஸ்கொயர் வருமானம் – ரூ.38,827.70 கோடி
- மொத்தம் ரூ.1,343,170,000,000 (ரூ.1,34,317 கோடி)
- ஸ்டாலின் ரூ.200 கோடி லஞ்சம்
தொடர்ந்து, “மு.க. ஸ்டாலின் மீதான புகாரை சிபிஐ இயக்குனரிடம் நானே நேரடியாக புகார் அளிக்க உள்ளேன்” என்றார்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“