என்.டி.ஏ கூட்டணியில் இருந்து விலகிய ஓ.பி.எஸ், டி.டி.வி தினகரன்; மறுபரிசீலனை செய்ய அண்ணாமலை வேண்டுகோள்

“தேசிய ஜனநாயகக் கூட்டணியில் இருந்து விலகிய முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம், அ.ம.மு.க பொதுச் செயலாள்ர் டி.டி.வி தினகரன் தங்கள் முடிவை மறுபரிசீலனை செய்ய வேண்டும் என்று பா.ஜ.க முன்னாள் மாநிலத் தலைவர் அண்ணாமலை வேண்டுகோள் விடுத்துள்ளார்.

“தேசிய ஜனநாயகக் கூட்டணியில் இருந்து விலகிய முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம், அ.ம.மு.க பொதுச் செயலாள்ர் டி.டி.வி தினகரன் தங்கள் முடிவை மறுபரிசீலனை செய்ய வேண்டும் என்று பா.ஜ.க முன்னாள் மாநிலத் தலைவர் அண்ணாமலை வேண்டுகோள் விடுத்துள்ளார்.

author-image
WebDesk
New Update
Annamalai press meet

பா.ஜ.க முன்னாள் மாநிலத் தலைவர் அண்ணாமலை

சென்னையில் வியாழக்கிழமை செய்தியாளர்களிடம் பேசிய பா.ஜ.க முன்னாள் மாநிலத் தலைவர் அண்ணாமலையிடம், அ.தி.மு.க-வை ஒன்றினைக்கும் பணியில் மத்திய அமைச்சர் அமித்ஷாவின் திட்டம் தோல்வி அடைந்துவிட்டது என்று டி.டி.வி தினகரன் என்.டி.ஏ கூட்டணியில் வெளியேறுகிறோம் என்று அறிவித்திருப்பது குறித்து கருத்து கேட்டனர். 

Advertisment

இதற்கு பதிலளித்த பா.ஜ.க முன்னாள் மாநிலத் தலைவர் அண்ணாமலை, “நான் டி.டி.வி.தினகரனிடம் பேசினேன். அவர் ஒரு மிக முக்கியமான தலைவர், 2024-ல் தேசிய ஜனநாயக கூட்டணியில் (என்.டி.ஏ) மிக முக்கிய தலைவராக இருந்தவர், தேர்தலில் போட்டியிட்டவர், தமிழக அரசியலில் நீண்ட நெடிய பயணத்தை பார்த்தவர், நிறைய உயரத்தை பார்த்தவர், அதே நேரத்தில் நிறைய பிரச்னைகளையும் சந்தித்தவர். அதெல்லாம் தாண்டி அரசியலில் நிலைத்திருக்கக்கூடிய ஒரு தலைவர்.

நான் அவரிடம் தொலைபேசி மூலமாக வேண்டுகோள் விடுத்தேன். அவருடைய முடிவை மறுபரிசீலனை செய்ய வேண்டும். தமிழ்நாட்டில் 2026 நம்முடைய இலக்கு என்பது மக்களுக்கு நல்ல ஒரு ஆட்சியை கொடுக்க வேண்டும். மக்களுக்கு நல்ல ஒரு வித்தியாசமான, மக்களுக்கு தொலைநோக்கு பார்வை இருக்கக்கூடிய, சட்டம் ஒழுங்குக்கு முக்கியத்துவம் கொடுக்கக்கூடிய ஆட்சி கொடுக்க வேண்டும் என்றால் கண்டிப்பா நீங்கள் உங்களுடைய முடிவை மறுபரிசீலனை செய்ய வேண்டும் என்று டி.டி.வி தினகரனிடம் வேண்டுகோள் வைத்திருக்கிறோம். அதனால், அவர் பரிசீலனை செய்வார் என்ற நம்பிக்கை எனக்கு இருக்கிறது.

இரண்டாவது நாம் தேவையில்லாத சில விஷயங்களைக் குழப்பிக்கொள்ள வேண்டிய அவசியமில்லை. மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா, தேசிய ஜனநாயக கூட்டணி விரிவுபடுத்தப்பட்ட பொழுது, ஏப்ரல் 10-ம் தேதி சென்னையில் அ.தி.மு.க பொதுச் செயலாளர், இன்றைக்கு எதிர்க்கட்சித் தலைவராக இருக்க கூடிய எடப்பாடி பழனிசாமி என்.டி.ஏ-வின் முதலமைச்சர் வேட்பாளராக இருப்பார் என்று தெள்ளத்தெளிவாகக் கூறினார்.

Advertisment
Advertisements

அமித்ஷாவைப் பொறுத்தவரை நிறைய நேரம் கொடுத்து தமிழகத்துக்கு வருகிறார். மதுரை, திருநெல்வேலி, வந்தார். அதன் பிறகு பா.ஜ.க-வின் மூத்த தலைவர்களை டெல்லியில் தன்னுடைய இல்லத்திற்கு அழைத்து 2, 3 மணி நேரம் செலவழித்து பேசி இருக்கிறார்.

தமிழகத்தில் 2026-ல் மாற்றம் வர வேண்டும், தேசிய ஜனநாயக கூட்டணி ஆட்சி இங்கே வர வேண்டும் என்பதில் அமித்ஷா ரொம்ப தெளிவாக இருக்கிறார். அதனால், எந்த தேவையில்லாத குழப்பமும் வேண்டாம். நிச்சயமாக தமிழகத்தில் நல்ல ஒரு மாற்றம் நடக்கும். 

அதே நேரத்தில், டி.டி.வி. தினகரன், ஓ.பி.எஸ் இருவரும் எடுத்திருக்கக்கூடிய முடிவுகளை நிச்சயமாக மறுபரிசீலனை செய்வார்கள் என்ற நம்பிக்கை ஒருபுறம் எனக்கு இருக்கிறது. காரணம் 2024-ல் அவர்களுடைய நடவடிக்கை. டி.டி.வி. தினகரன் எந்த நிபந்தனையும் வேண்டாம் என்று கூட்டணிக்கு வந்தார். 

முன்னாள் முதலமைச்சர் ஓ. பன்னீர்செல்வம் ஒரு சாதாரண அரசியல்வாதி கிடையாது. நம்முடைய பாரத திருநாட்டில் எத்தனை அரசியல்வாதிகள் முன்னாள் முதலமைச்சர்கள், ஒரு தேர்தலில் சின்னம் இல்லாமல் சுயேச்சை வேட்பாளராகப் எத்தனை பேர் போட்டியிட்டிருப்பார்கள், எனக்கு தெரிந்து இந்திய அரசியல் சரித்திரத்தில் யாரும் கிடையாது. ஒ.பி.எஸ் மட்டும்தான். ஏனென்றால், பிரதமர் மோடியின் மீது இருக்கும் அன்பின் காரணமாக ஓ.பி.எஸ் சுயேச்சை வேட்பாளரக ராமநாதபுரத்தில் போட்டியிட்டார். அதனால், அப்படிப்பட்ட 
பெரிய உள்ளம் கொண்டவர்கள், நல்ல மனிதர்கள். நிச்சயமாக பரிசீலனை செய்வார்கள், தேவையில்லாமல் குழப்பி வேறு வேறு யூகங்களுக்கு விடைகொடுத்த நாங்கள் பதில் சொன்னால் அது நன்றாக இருக்காது.

தேசிய ஜனநாயகக் கூட்டணி வலிமையடைந்து வருகிறது. இன்னொரு பக்கம் எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி சுற்றுப் பயணத்தில் இருக்கிறார். அதனால், எல்லாரும் ஒரு வேலையை செய்கிறார்கள்.” என்று கூறினார்.

மேலும், “2026-ல் விஜய் தாக்கத்தை ஏற்படுத்துவார். மாற்றத்துக்காக 10% வாக்காளர்கள் எப்போதுமே காத்திருப்பர். அவர்கள் விஜயை முன்னிறுத்துவர். ஆனால், யார் ஆட்சியமைப்பார்கள் என்பதே முக்கியம். நாங்கள் ஆட்சி அமைப்போம் என்பது எனது நம்பிக்கை” என்று அண்ணாமலை கூறினார்.

Annamalai

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us: