BJP Annamalai | Coimbatore | Lok Sabha Election | கோயம்புத்தூரில் தி.மு.க வேட்பாளரை ஆதரித்து அமைச்சர் டி.ஆர்.பி ராஜா, “தேர்தலுக்கு பின்னர் ஆட்டை பிரியாணி போட போகிறோம்” என மறைமுகமாக தமிழ்நாடு பா.ஜ.க மாநிலத் தலைவர் கு. அண்ணாமலையை விமர்சித்து பேசினார்.
இதற்கு பதிலளித்த கு. அண்ணாமலை, “ஆட்டை பிரியாணி போடுங்கள்; ஆனால் வலிக்காமல் போடுங்கள். தி.மு.க-வுக்கு என் மீது பயம்.
அதனால்தான் ஆடு, ஆட்டுக் குட்டி போன்ற விமர்சனங்களை என் மீது வைக்கின்றனர். முதலமைச்சர் மு.க ஸ்டாலினுக்கு தைரியம் இருந்தால், தமிழ்நாட்டில் எங்காவது ஒரு இடத்தில் ரோடு ஷோ நடத்தட்டும்” என்றார்.
தொடர்ந்து, பிரதமர் மோடியை போன்று அமித் ஷாவும் தேனியில் ரோடு ஷோ நடத்த உள்ளார்” என்றார். உதயநிதியின் 29 பைசா விமர்சனக்கு பதிலளித்த அண்ணாமலை, “அவர் 29 பைசா என்றால் பீர், சாராயம், ட்ரக் (போதைப் பொருள்) என உதய நிதியை அழைப்போம்” என்றார்.
சீமான் தொடர்பாக பேசுகையில், “தான் செய்த தவறை மறைக்க என்னையும், பாரதிய ஜனதா கட்சியையும் சீமான் தினந்தோறும் விமர்சித்து வருகிறார்.
அவர் செய்த தவறுக்கு எங்கள் மீது பழி போட்டால் எப்படி? சீமான்தான் சின்னத்துக்கு முறைப்படி விண்ணப்பித்து இருக்க வேண்டும்” என்றார்.
தமிழ்நாட்டில் உள்ள 39 தொகுதிகள் மற்றும் புதுச்சேரியில் உள்ள ஒரு தொகுதிக்கு மக்களவை தேர்தல் வாக்குப்பதிவு ஏப்.19ஆம் தேதி நடைபெறுகிறது.
வாக்கு எண்ணிக்கை ஜூன் 4ஆம் தேதி நடைபெறுகிறது என்பது குறிப்பிடத்தக்கது.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“