scorecardresearch

ஜூலை முதல் வாரத்தில் தி.மு.க. ஃபைல்ஸ் பார்ட்-2; அண்ணாமலை அதிரடி

வரும் ஜூலை மாதம் தி.மு.க. ஃபைல்ஸ் இரண்டாம் பாகம் வெளியிடப்படும் என தமிழக பாரதிய ஜனதா கட்சியின் மாநிலத் தலைவர் கு. அண்ணாமலை தெரிவித்துள்ளார்.

Annamalai said In the first week of July DMK Files Part-2 will be revealed
தமிழக பாரதிய ஜனதா மாநிலத் தலைவர் அண்ணாமலை

தமிழ்நாடு பாரதிய ஜனதா மாநிலத் தலைவர் கு. அண்ணாமலை, தி.மு.க. அமைச்சர்களின் சொத்துப் பட்டியல் என்று அறிக்கை ஒன்றை வெளியிட்டார்.
அதில், மு.க. ஸ்டாலின், உதயநிதி, கனிமொழி, தயாநிதி, கலாநிதி மாறன்களின் சொத்து மதிப்பு மட்டும் ரூ.1 லட்சம் கோடியை தாண்டுகிறது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து தி.மு.க., உதயநிதி, கனிமொழி, மு.க. ஸ்டாலின் தரப்பில் அவதூறு வழக்குகள் தாக்கல் செய்யப்பட்டுள்ளன.

இந்த நிலையில் செய்தியாளர்களை சந்தித்த அண்ணாமலை, “ஜூலை முதல் வாரத்தில் தி.மு.க.வினர் இரண்டாம் கட்ட சொத்துப் பட்டியல் வெளியிடப்படும்” என்றார்.
தொடர்ந்து, டி.ஆர். பாலு, புதிய அமைச்சர்களின் சொத்துப் பட்டியலும் வெளியிடப்படும் என்றார். மேலும் ஆர்.எஸ். பாரதிக்கு சவால் விடுகிறேன். முடிந்து கைது செய்து பாருங்கள்” என்றார்.

அமைச்சர் பி.டி.ஆர். ஆடியோ பற்றி பேசிய அண்ணாமலை, அந்த ஆடியோவில் இருப்பது அனைத்தும் உண்மை. என் மீது வழக்கு தொடுத்தால் நான் முழுமையான ஆதாரங்களை நீதிமன்றத்தில் ஒப்படைப்பேன் என்றார்.

முன்னதாக அண்ணாமலை பி.டி.ஆர். தொடர்பாக ஆடியோ ஒன்று வெளியிட்டிருந்தார். அந்த ஆடியோ தமிழக அரசியலில் பெரும் சர்ச்சையை கிளப்பியது குறிப்பிடத்தக்கது.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“

Stay updated with the latest news headlines and all the latest Tamilnadu news download Indian Express Tamil App.

Web Title: Annamalai said in the first week of july dmk files part 2 will be revealed