பெண்கள் உடன்கட்டை (sati) ஏறிய நிகழ்வு சனாதன தர்மத்தில் வரவில்லை என தமிழக பாஜக மாநிலத் தலைவர் கு. அண்ணாமலை கூறினார்.
சென்னை சனாதன ஒழிப்பு மாநாட்டில் கலந்துகொண்ட இந்து அநிலையத் துறை அமைச்சர் சேகர் பாபு, தார்மீக அடிப்படையில் தனது பதவியை ராஜினாமா செய்ய வேண்டும் என தமிழக பாஜக மாநிலத் தலைவர் கு. அண்ணாமலை கேட்டுக்கொண்டார்.
தொடர்ந்து, “செப்.10ஆம் தேதிக்குள் அவர் பதவி விலகாவிட்டால் அவருக்கு எதிராக தமிழக பாஜக சார்பில் தொடர் போராட்டங்கள் முன்னெடுக்கப்படும்” என்றார்.
இந்த நிலையில் அமைச்சர் சேகர் பாபு பதவி விலகக் கோரி சென்னை வள்ளூவர் கோட்டத்தில் பாஜக சார்பில் ஆர்ப்பாட்டம் நடந்தது. அப்போது, சாலையில் அமர்ந்து அண்ணாமலை தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டார்.
அப்போது சனாதன தர்மம் குறித்து ஆட்சேபத்துக்குரிய வகையில் பேசிய உதயநிதிக்கும் கண்டனம் தெரிவிக்கப்பட்டது.
முன்னதாக கடந்த வாரம் சென்னையில் சனாதன ஒழிப்பு நடத்தப்பட்டது. இதில், இந்து அறநிலையத் துறை அமைச்சர் சேகர் பாபு, அமைச்சர் உதயநிதி ஸ்டாலின், திராவிடர் கழகத் தலைவர் ஆசிரியர் கி வீரமணி உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.
அப்போது சனாதன தர்மத்தை டெங்கு, மலேரியா, கொரோனா உடன் உதயநிதி ஒப்பிட்டு பேசினார்.
இதற்குப் பதிலளித்த அண்ணாமலை D-டெங்கு M-மலேரியா K-கொசு என்றார். இதனால் சமூக வலைதளத்தில் திமுக, பாஜக இடையே வார்த்தைப் போர் ஏற்பட்டது.
இதற்கிடையில், கடந்த காலங்களில் அமலில் இருந்த உடன்கட்டை ஏறுதல் நிகழ்வு குறித்து பேசிய அண்ணாமலை, “கடந்த காலங்களில் அந்நிய படையெடுப்பாளர்களிடம் இருந்து பெண்கள் தங்கள் கற்பினை பாதுகாத்துக் கொள்ள உடன்கட்டை ஏறினார்கள்” எனத் தெரிவித்துள்ளார்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“