குடந்தை அருகே உள்ள திருவிடைமருதூரில் புதன்கிழமை (ஜன.24,2024) என் மண் என் மக்கள் நடை பயணத்தில் பங்கேற்பதற்காக பாஜக மாநில தலைவர் அண்ணாமலை திருச்சி வந்தார்.
முன்னதாக, திருச்சி விமான நிலையத்தில் செய்தியாளர்களை சந்தித்த அவர், “என் மண் என் மக்கள் நிறைவு விழாவில் பங்கேற்க பிரதமர் மோடிக்கு அழைப்பு விடுத்துள்ளோம், பங்கேற்க வேண்டும் என்பது எங்களது விருப்பம்” என்றார்.
தொடர்ந்து, “என்.டி.ஏ கூட்டணியில் தற்போது கதவு, ஐன்னல் திறந்து உள்ளது. மோடியை பிரதமராக ஏற்றுக் கொள்பவர்கள் தாராளமாக இணையலாம்.
திமுக இளைஞர் மாநாட்டை பொருத்தவரை குடும்பத்திற்காக திமுகவினர் நடத்திய குடும்ப மாநாடு. இந்த மாநாட்டில் இயற்றிய தீர்மானத்தில் ஒன்றுக்கு கூட தகுதி இல்லை.
திமுக தொண்டர்கள் நீட்டுக்கு எதிரான கையெழுத்திட்ட அஞ்சலட்டையை கூட சேலம் மாநாட்டில் தூக்கி எறிந்துவிட்டு சென்று விட்டார்கள்.
தமிழகத்தை திமுகவிடமிருந்தும், திமுக குடும்பத்தினரின், அராஜகம் மற்றும் அடாடிவயிடம் இருந்து மீட்பது தான் பாஜகவில் கொள்கை.
சிறுமியை துன்புறுத்தியதாக திமுக எம்எல்ஏ குடும்பத்தினரை ஏன் இதுவரையிலும் கைது செய்யவில்லை. இது போன்று தான் கடலூர் எம்பி ரமேஷ் மீதும் நடவடிக்கை இல்லை. சமூக நீதியை பற்றி பேச திமுகவுக்கு தகுதி இல்லை.
ஸ்ரீரங்கத்தில் நடந்த கம்பராமாயண நிகழ்வு என்பது உயிர் உள்ளவரை மறக்க மாட்டேன் என பிரதமர் கூறியுள்ளார். ஆகவே, திருச்சி பிரதமர் இதயத்தில் உள்ளது. ஆகவே பாஜக வேட்பாளர் திருச்சியில் போட்டியிட ஆசை. முதல்வர் ஸ்டாலின் மோசமாக திமுக சரித்திரத்தில் தோற்றுள்ளார்.
2014 இல் ஜீரோ பல எம்பி எலெக்ஷனில் பூஜ்ஜியம் பெற்றுள்ளனர். வாக்கு சதவீதம் 20% ஆக இருந்தது முதல்வர் தற்போது பலவீனம் அடைந்து விட்டார். மனதளவில் பாஜக ஜெயிக்க ஆரம்பித்து விட்டது என எண்ண தொடங்கிவிட்டார்” என்றார். தொடர்ந்து, “நேர்த்திக் கடன் உள்ளதால் தாடி வளர்க்கிறேன்” என்றார்.
தனது தாடி குறித்து செய்தியாளர்
இந்த சந்திப்பின்போது மாவட்டத் தலைவர் ராஜசேகரன், துணைத் தலைவர் ஜெயகர்ணா உள்ளிட்ட பாஜக பிரமுகர்கள் திரளாக பங்கேற்றனர்.
செய்தியாளர் க.சண்முகவடிவேல்
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“