தமிழ்நாடு பா.ஜ.க. மாநிலத் தலைவர் கு. அண்ணாமலை சென்னையில் இன்று செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது, “கடந்த காலங்களில் 5 சீட் வாங்கிக்கோங்க. பா.ஜ.க 3 சதவீதம் வாக்குகளை தாண்டுமா? நோட்டாவை தாண்டுமா? என்றெல்லாம் கேட்டார்கள்.
இன்று பா.ஜ.க தொண்டர்கள் தலைநிமிர்ந்து நடக்கும் வரையில் வாக்கு பெற்றுள்ளோம். 20 ஆண்டுகளாக தாமரை போகாத கட்சியில் வாக்கு வாங்கியுள்ளோம். ஒரு கட்சி படிப்படியாகதான் வளரும். எனது பணி தாமரை கட்சியை வளர்ப்பதே ஆகும். அணுசரனையாக செல்வது அல்ல. வெற்றியையும் பார்க்கிறோம், தோல்வியையும் பார்க்கிறோம்.
நாங்கள் எங்கள் இலக்கில் செல்கிறோம். நாளை காலை தமிழ்நாட்டில் ஆட்சியை பிடிக்கிறோம் என்று சொல்லவில்லை. ஆனால் தமிழ்நாட்டில் ஆட்சியை பிடிப்போம் எனச் சொல்கிறோம்.
பல இடங்களில் நாங்கள் அதிமுகவை பின்னுக்கு தள்ளியுள்ளோம். திருநெல்வேலி, கன்னியாகுமரியில் எங்களது வாக்கு எண்ணிக்கை என்ன? ஆக அவர்கள் நாவடக்கத்தோடு பேச வேண்டும்” என்றார்.
நாம் தமிழருக்கு பாராட்டு
தொடர்ந்து நாம் தமிழர் குறித்து பேசிய அண்ணாமலை, “நாம் தமிழர் கட்சியினர் நேர்மையாக பணம் கொடுக்காமல் சுயேச்சை சின்னத்தில் நின்று இந்த வாக்குகளை பெற்றுள்ளனர். கூட்டணி இன்றி தனித்து நின்ற நாம் தமிழர் கட்சியை நான் பாராட்டுகிறேன்” என்றார்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“