annamalai | சென்னையில் சனிக்கிழமை (நவ.4) நடந்த கலைஞர் நூற்றாண்டு விழாவில் பேசிய திமுக அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ். பாரதி, ஆளுனர் ஆர்.என். ரவியை தாக்கிப் பேசினார்.
அப்போது, நாய்கறி உண்பவர்கள் கூட சுயமரியாதை உணர்வுடன் அவரை விரட்டியடித்துள்ளனர்” என பொருள்பட பேசியதாக குற்றச்சாட்டுள் எழுந்தன.
மேலும், “உப்பு போட்டு சாப்பிடும் தமிழர்களாகிய நாம் என்ன செய்ய வேண்டும்”? எனவும் கேள்வியெழுப்பி உள்ளார். இதற்கு பதிலளித்த ஆளுனர் மாளிகை, “நாகாலாந்து மக்களை இழிவுப்படுத்துவதை ஏற்க முடியாது. நாகா இன மக்கள் துணிச்சல் மிக்கவர்கள், நேர்மையானவர்கள். கண்ணியமானவர்கள். அவர்களை திமுகவின் ஆர். எஸ். பாரதி நாய்க்கறி உண்பவர்கள் என பகிரங்கமாக இழிவுபடுத்துவது கேவலமானது. ஒட்டுமொத்த இந்தியாவே பெருமைப்படும் சமூகத்தை காயப்படுத்தக் கூடாது” எனத் தெரிவித்திருந்தது.
இற்கிடையில் இது குறித்து ஆர்.எஸ். பாரதி விளக்கம் ஒன்று அளித்துள்ளார். அந்த விளக்கத்தில், “நாகாலாந்து மக்களை நான் இழிவுப்படுத்துவதாக ஆளுநர் கூறுவது முற்றிலும் திசைதிருப்பும் முயற்சி. நாகாலாந்து மக்கள் நாய்க்கறி உண்பது அவர்களின் கலாசாரம் என்பதை கவுகாத்தி உயர்நீதிமன்றமே கூறியுள்ளது” எனத் தெரிவித்திருந்தார்.
இது குறித்து பேசிய தமிழக பாரதிய ஜனதா கட்சித் தலைவர் அண்ணாமலை, “சனாதா ஒழிப்பு மாநாட்டில் கலந்துகொண்ட அமைச்சர்கள் உதயநிதி, சேகர் பாபு ஆகியோர் மீது நடவடிக்கை எடுத்திருக்க வேண்டும்.
அவர்கள் மீது குறைந்தப்பட்ம் வழக்காது தொடுத்திருக்க வேண்டும். ஆனால் காவல்துறையின் கவனம் சட்டம் ஒழுங்கு பற்றி இல்லை.
காவல்துறை நடுநிலை தவறக்கூடாது. ஆனால் காவல்துறை நடுநிலை தவறி பாரதிய ஜனதா தொண்டர்களை கைதுசெய்துவருகிறது” என்றார்.
ஆர்.எஸ் பாரதி குறித்து பேசுகையில், “அவரை நாகாலாந்து போலீசார் கைது செய்வதற்கு முன்பு தமிழ்நாடு போலீஸ் கைது செய்ய வேண்டும். ஆர்.எஸ் பாரதி தொடர்ந்து ஆபாசமாக பேசிவருகிறார். திமுகவின் சொத்து ஆபாசம். அதைத்தான் ஆர்எஸ் பாரதி செய்கிறார். ரொம்ப ரொம்ப மோசமாக பேசுகிறார்” என்றார்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“