தமிழக பாரதிய ஜனதா கட்சியின் தலைவர் கு. அண்ணாமலை ட்விட்டர் எக்ஸில், “குலசேகரப்பட்டினத்தில் ராக்கெட் ஏவுதளம் அமைக்கப்பட உள்ளது” குறித்து கூறியுள்ளது.
அதில், “பிரதமர் நரேந்திர மோடி குலசேகரப்பட்டினத்தில் இஸ்ரோவின் 2வது ராக்கெட் ஏவுதளத்துக்கு ஒப்புதல் அளித்துள்ளார்.
முதல் ராக்கெட் தளத்தையும் தமிழ்நாடு பெற்றிருக்க வேண்டும். ஆனால் திமுக முன்னாள் அமைச்சர் மதியழகனின் தவறான அணுகுமுறையால் அந்த வாய்ப்பு தவறிவிட்டது” எனக் கூறியுள்ளார்.
மேலும், “குலசேகரப்பட்டினம் ஏவுதளத்தின் வெளிப்புறச் சுற்றளவு தற்போது அறிவிக்கப்பட்டு, அது நிறுவப்பட்டதும், தமிழகத்தில் உள்ள தூத்துக்குடி மாவட்டம் விண்வெளித் தொழில்களுக்கான மையமாக மாறும் என்று நாங்கள் நம்புகிறோம்” எனவும் தெரிவித்துள்ளார்.
அண்ணாமலை தற்போது மருத்துவ ஓய்வில் உள்ளார். இதனால் அவரது என் மண் என் மக்கள் யாத்திரை 10 நாள்கள் தள்ளி வைக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“