scorecardresearch

அ.தி.மு.க கூட்டணியில் பா.ஜ.க இல்லை என நான் கூறவில்லை – அண்ணாமலை

பா.ஜ.க கூட்டணியில் அ.தி.மு.க இல்லை என நான் கூறியதில்லை. அ.தி.மு.க பா.ஜ.க கூட்டணி இறுதி, உறுதி என இப்போது எதுவும் கூற முடியாது என பா.ஜ.க மாநிலத் தலைவர் அண்ணாமலை ஞாயிற்றுக்கிழமை கூறினார்.

Annamalai, AIADMK, alliance of BJP, BJP, பா.ஜ.க கூட்டணியில் அ.தி.மு.க இல்லை என நான் கூறவில்லை, அண்ணாமலை, பாஜ்க, அதிமுக, Annamalai says am not said AIADMK is not in alliance of BJP
தமிழக பா.ஜ.க தலைவர் அண்ணாமலை

பா.ஜ.க கூட்டணியில் அ.தி.மு.க இல்லை என நான் கூறியதில்லை. அ.தி.மு.க பா.ஜ.க கூட்டணி இறுதி, உறுதி என இப்போது எதுவும் கூற முடியாது என பா.ஜ.க மாநிலத் தலைவர் அண்ணாமலை ஞாயிற்றுக்கிழமை கூறினார்.

தமிழக பா.ஜ.க தலைவர் அண்ணாமலை சென்னையில் செய்தியாளர் சந்திப்பில் கூறியதாவது:

“மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமனுடன் சந்திப்பு சாதாரணமானது தான் அரசியல் குறித்து பேசவில்லை. பா.ஜ.க கூட்டணியில் அ.தி.மு.க இல்லை என நான் கூறியதில்லை. அ.தி.மு.க பா.ஜ.க கூட்டணி இறுதி, உறுதி என இப்போது எதுவும் கூற முடியாது. எதுவுமே கல்லில் எழுதப்பட்ட வாக்கியங்கள் அல்ல. கூட்டணி குறித்து தற்போது எந்த இறுதி முடிவும் எடுக்க முடியாது. தேர்தலுக்கு 9 மாதங்கள் இருக்கும் நிலையில் இப்போதே தொகுதிகள் குறித்து முதலுரையும் முடிவுரையும் எழுத முடியாது.

2024, 2026 ஆண்டு தேர்தல் குறித்து 2 மணி நேரம் அமித்ஷாவிடம் பேசினேன். 25 தொகுதிகளில் பா.ஜ.க வெற்றி பெறும் அளவிற்கு நாங்கள் தயாராக வேண்டும். இப்போதைய நிலையில் போட்டியிடும் தொகுதியின் எண்ணிக்கை குறித்து பேசுவது சரியல்ல.

தேர்தலில் தோல்வி அடைந்தாலும் நீண்ட கால நோக்கத்தில் தான் நான் பேசி வருகிறேன். தூய்மையான அரசியலை முன்னெடுப்பதில் பின்னடைவு இருந்தாலும் எனக்கு கவலையில்லை. இப்போது செல்லும் பாதை 20 ஆண்டுகளுக்கு பிறகு சரியாக இருக்காது. நாடாளுமன்ற தேர்தலில் எனக்கு போட்டியிட வாய்ப்பு கிடைத்தால் தூய்மையான அரசியலை பார்ப்பீர்கள். வானதி சீனிவாசனும் கட்சியை வளர்க்க வேண்டும் என்று தான் நினைக்கிறார். ஏப்ரல் 14-ம் தேதி தி.மு.க-வினரின் ஊழல் பட்டியல் வெளியிடப்படும்.” என்று கூறினார்.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“

Stay updated with the latest news headlines and all the latest Tamilnadu news download Indian Express Tamil App.

Web Title: Annamalai says am not told aiadmk no in alliance of bjp