Advertisment

பா.ஜ.க மாநிலத் தலைவர் பதவி வெங்காயம் போன்றது - அண்ணாமலை

மாநிலத் தலைவர் பதவி வெங்காயம் போன்றது என்றும் தான் அரசியலில் பதவிக்காக வந்தவன் கிடையாது என்றும் பா.ஜ.க மாநிலத் தலைவர் அண்ணாமலை தெரிவித்தார்.

author-image
WebDesk
New Update
anna

மாநிலத் தலைவர் பதவி வெங்காயம் போன்றது என்று பா.ஜ.க மாநிலத் தலைவர் அண்ணாமலை தெரிவித்தார்.

பா.ஜ.க மாநில தலைவர் அண்ணாமலை இன்று விமான மூலம் டெல்லி கிளம்பினார். டெல்லி கிளம்பும் முன்பு விமான நிலையத்தில் அவர் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது எந்த நகரங்கள் தூய்மையாக இருக்கிறதோ, அங்கு சுற்றுலா துறை வளர்ந்திருக்கிறது எனவும்,மத்திய அரசு தூய்மைக்கு முன்னிரிமை அளித்து வருவதால், தமிழக அரசு  போட்டி போடாமல் இந்தியா திட்டமாக நினைத்து அதற்கு முன்னுரிமை வழங்க வேண்டும் எனவும் தெரிவித்தார். தி.மு.க பொய் பேசுவதற்கு சமூகவலைதளங்களை பயன்படுத்துகிறார்கள் எனவும் அண்ணாமலை தெரிவித்தார்.

Advertisment

கூட்டணி முறிவு குறித்து என்னிடம்  எந்த அறிக்கையும், கேட்கவில்லை , இது கார்ப்பரேட் நிறுவனம் அல்ல எனவும் தெரிவித்தார்.  தன்மைகளை ஒரு பையுடன் டெல்லி போகிறேன், யாரும் என்னிடம் அது கேட்கவில்லை, யாரிடமும் அறிக்கை கொடுக்கவில்லை எனவும் அவர் தெரிவித்தார். தேர்தலுக்கு இன்னும் ஏழு ,எட்டு மாதங்கள் இருக்கிறது, கட்சியை பலப்படுத்தும் பணியில் கவனம் செலுத்துகிறேன் எனவும்  தேசிய ஜனநாயக கூட்டணியின் தன்மை எப்படி இருக்கும் என்பதை சம்பந்தப்பட்ட நேரத்தில் தேசிய தலைமை முடிவு செய்யும் என தெரிவித்தார். அ.தி.மு.க தலைமையில் புதிய கூட்டணி அமையும் பொழுது, தேசிய ஜனநாயக கூட்டணிக்கு பின்னடைவு ஏற்படுமா என்ற கேள்விக்கு பின்னடைவு எதுவும் ஏற்படாது எனவும் அண்ணாமலை தெரிவித்தார். 2024 தேர்தலுக்கு முழு உறுதியுடன் இருப்பதாகவும், தினமும் மக்களை சந்திப்பதாகவும் 2024 மக்களவை  தேர்தலில் வலுவான இடத்தை பிடிப்பதாகவும்  57 சதவீத வாக்காளர்கள் 35 வயதுக்கு உட்பட்டு இருக்கின்றார்கள் அவர்கள் இன்ஸ்டாவில் வாழ்கின்றனர் எனவும் தெரிவித்தார். இப்போது டி.வி, பேப்பர் எல்லாம் யார் படிக்கின்றனர் எனவும் , இளைஞர்கள் வேறு உலகத்தில் வாழ்கின்றனர் என தெரிவித்தார்.

மக்களவை தேர்தலில்  எத்தனை இடங்களில் கிடைக்கும் என்ற எண்ணிக்கையை சொல்ல விரும்பவில்லை எனவும், தேர்தல் நேரத்தில் இது சொல்லப்படும் எனவும் தெரிவித்தார். 

மாநிலத் தலைவர் பதவி வெங்காயம் போன்றது, அரசியலில் பதவிக்காக வந்தவன் கிடையாது எனவும் தெரிவித்தார். எனக்கு என தனி உலகம் இருக்கின்றது, அதில் வாழ்கின்றேன் என தெரிவித்தார். அட்ஜெஸ்மென்ட் பாலிடிக்ஸ் அண்ணாமலையிடம் கிடையாது, என்னால் யாருக்காகவும் மாறமுடியாது எனவும் தெரிவித்தார்.

தி.மு.க-வை புகழ்பாடவே கம்யூனிஸ்ட் கட்சி இருக்கின்றது எனவும், கே.பாலகிருஷ்ணன் கம்யூனிஸ்ட் இயக்கத்திற்கு கரும்புள்ளி. கம்யூனிஸ்டுகள் இந்தியாவின் வளர்ச்சிக்கு எதிரியாக இருக்கின்றனர். 

அண்ணாமலையை முதல்வராக்க வேண்டும் என்று சொன்னதாக முன்னாள் அமைச்சர்
கே.சி. கருப்பண்ணன் சொன்ன கருத்துக்கு, இன்னொரு முன்னாள் அமைச்சர் பதில் சொல்லி இருக்கிறார். அவர்களுக்குள் மாற்றி மாற்றி பதிலடி கொடுத்து கொள்கின்றனர் எனவும் தெரிவித்தார்.

தமிழக பா.ஜ.க தவறான பாதையில் செல்கின்றது என யாராவது சொன்னால் , அதற்கு நேர் எதிரான திசையில் கட்சி பயணிக்கும் என தெரிவித்தார்.
தமிழக பா.ஜ.க மீது அனைவரும் கோபமாக இருக்கின்றனர் எனவும், ஒரே ஒரு தேர்தல் பா.ஜ.கவிற்கு இருந்தால் 25 சதவீத வாக்கு சதவீதத்தை காட்டி, தமிழகத்தின் அரசியல் தலைகீழாக மாற்றிவிடும் என தெரிவித்தார். இந்தியாவில் பா.ஜ.க மட்டும் தான் சுத்தமான கட்சியாக இருக்கின்றது எனவும் தெரிவித்தார்.

அ.தி.மு.க-வினரின் ஊழல் பட்டியல் வெளியிடப்படுமா என்ற கேள்விக்கு, பொறுத்திருந்து பாருங்கள் எனவும் அண்ணாமலை பதிலளித்தார்.
பா.ஜ.க மாநில தலைவராக இல்லாமல் இருந்தால், கட்சியில் தொடர்ந்து செயல்பட வாய்ப்பு இருக்கிறதா என்ற கேள்விக்கு ஆவேசமான அண்ணாமலை, பத்திரிகையாளருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டார். 

மரபை தாண்டினால் யாராக இருந்தாலும் விடமாட்டேன் என தெரிவித்த அண்ணாமலை, இன்னிக்கும் நான் விவசாயியாக இருக்கின்றேன் முழு நேர அரசியல்வாதி கிடையாது என தெரிவித்தார். கோவையில் அரசு நிலத்தை அபகரித்ததாக பா.ஜ.க மாவட்ட தலைவர் மீது குற்றச்சாட்டு எழுந்திருப்பது குறித்து மாவட்ட தலைவர் பதில் அளிப்பார் என தெரிவித்தார்.

டெல்லியில் என்னை சேர் போட்டு உட்கார வைத்து  கேள்வி கேட்கப் போகிறார்களா? டெல்லி சென்றாலும் இப்படியே தான், போகாவிட்டாலும் இப்படித்தான்  இருப்பேன் எனவும் தெரிவித்தார். என்னை எல்லாரும் எதிர்க்கிறீர்கள், அதுதான் என் வளர்ச்சிக்கு காரணம், இதை நான் மாற்றி கொள்ள விரும்பவில்லை எனவும் அரசியல் பல கோணங்கள்  இருக்கும் எனவும் தெரிவித்தார்.

நான் நேர்மையாக இருக்கின்றேன். டெல்லி செல்வது வழக்கமான பணிக்காக, நடைபயணம் குறித்தும், நடை பயணத்தில் பங்கேற்க இருப்பவர்கள் குறித்தும் ஆலோசிப்பதற்காகவே செல்கிறேன் எனவும்  இரு வாரங்களுக்கு முன்பு திட்டமிடப்பட்டது எனவும்  தெரிவித்தார். அதிமுகவை நான் ஏன் விமர்சிக்க வேண்டும், கருத்து சொல்ல வேண்டும் எனவும் நான் நடைபயணத்தில் கவனம் செலுத்துகிறேன் எனவும் தெரிவித்தார். கூட்டணி குறித்து தேசிய தலைவர்கள் கருத்து சொல்வார்கள் எனவும் தெரிவித்தார்

அண்ணா குறித்து பேசியது கூட்டணி முறிவுக்கு காரணமாக இருக்கும் நிலையில், இது குறித்து தேசிய தலைமை இதுவரை என்னிடம் எதுவும் கேட்கவில்லை எனவும்,  என்னிடம் கேட்டால் பதில் சொல்வேன் எனவும் தெரிவித்தார். தனித்துப் போட்டி என்பதற்குள் செல்ல விரும்பவில்லை எனவும்,  தேசிய ஜனநாயக கூட்டணிக்குள் நிறைய கட்சிகள் இருக்கின்றது, கூட்டணிக்கான காலமும் நேரமும் இருக்கிறது,  ஜெயிப்பதற்காகத்தான் போட்டியிடுவோம், தமிழகத்தில் நிறைய இடங்களில் ஜெயிப்போம் எனவும் அதனால் தான் பிற கட்சிகள் பயந்து போய் இருக்கின்றன எனவும் தெரிவித்தார். அ.தி.மு.க சொல்வதற்கு எல்லாம் நான் ஏன் பதில் சொல்ல வேண்டும் எனவும், இதற்கு எல்லாம் நான் ஏன் கருத்து சொல்ல தெரிவித்தார். இரட்டை இலக்கத்தில் வெற்றி பெறுவோம் எனவும், தமிழகத்தின் பல இடங்களில் ஜெயிப்போம் எனவும் தெரிவித்தார்.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Annamalai
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment