பா.ஜ.க மாநில தலைவர் அண்ணாமலை திருச்சியில் பல்வேறு நிகழ்ச்சியில் கலந்து கொள்வதற்காக சென்னையில் இருந்து விமானம் திருச்சி வந்தார். விமான நிலையத்தில் செய்தியாளர்களை சந்திக்கும்போது அவர் தெரிவித்ததாவது:
வி.சி.க-வின் கோட்டையாக சொல்லப்படும் கடலூர் மாவட்டத்திலேயே பா.ஜ.க நன்றாக வளர்ந்து வருகிறது. கூட்டணிக் கட்சி விவகாரத்தில் பா.ஜ.க தலையிடுவதாக திருமாவளவன் சொல்வது தவறானது.
ஈரோடு இடைத் தேர்தலில் தி.மு.க கூட்டணி வெற்றி பெற்றது என்பது 23 மாத தி.மு.க ஆட்சிக்கு மக்கள் கொடுத்த வெகுமதி என்று எடுத்துக் கொள்ள முடியாது.
இப்போது இருக்கும் சூழலில் திருமாவளவன் 2024-ம் ஆண்டு பாராளுமன்ற தேர்தலில் டெபாசிட் வாங்குவது சிரமம்.
2018-ம் ஆண்டு காங்கிரஸ் கட்சி தான் ஆட்சியில் நம்பர் ஒன்றாக இருந்தது. ஆனால், அதற்கு பின்னர் அவர்களுக்கு அப்படி சூழல் இல்லை.
1947-க்கு பிறகு வடகிழக்கு மாநிலங்களை காங்கிரஸ் தங்கள் பக்கம் வைத்திருந்தது ஆனால் தற்போது அவை முழுவதுமாக துடைத்தெறியப்பட்டு இருக்கிறது. வட கிழக்கு மாநிலங்களில் பாஜகவை முழுவதுமாக மக்கள் ஏற்றுக் கொண்டுள்ளனர் என்பதை பார்க்க முடிகிறது.
பா.ஜ.க வெற்றி பெறுவதற்கான காரணம் அடிப்படையில் தொண்டர்கள் உழைக்கிறார்கள். ஆனால், காங்கிரஸ் கட்சியில் அடிப்படைத் தொண்டர்கள், கட்சியை உருவாக்கக்கூடிய தலைவர்கள் வழிகாட்டக்கூடிய தலைவர்கள் காங்கிரஸ் கட்சியில் இல்லை.
ஈரோடு கிழக்கில் மக்களுடைய தீர்ப்பை தலைவணங்கி ஏற்றுக் கொள்கிறோம். இடைத்தேர்தல் என்றாலே ஆளும் கட்சி வெற்றி பெறுவது என்பது புதிய விஷயம் அல்ல.
ஈரோடு இடைத்தேர்தலில் திமுக கூட்டணி வெற்றி குறித்த கேள்விக்கு, 23 மாதம் திமுக அரசுக்கு மக்கள் கொடுத்த வெகுமதி என்று பார்க்கக் கூடாது.
திமுக கூட்டணியில் இருந்து வெளியே வர திருமாவளவன் முடிவு செய்து விட்டார். அதனால் அவர் இங்கு சேர்த்துக் கொள்வார்களா அங்கு சேர்த்துக் கொள்வார்களா என்கிற எண்ணத்தில் உள்ளார்.
ஏதோ ஒரு கார்னரில் அரசியல் செய்து கொண்டு உள்ளார் திருமாவளவன். திருமாவளவனை வெளியேற்றுவதற்கு தி.மு.க தயாராகிவிட்டது என்று எண்ணுகிறேன். அதற்கான ஆரம்ப கால அறிகுறிகள் தான் அவர் பேசி வருவது. இப்போது இருக்கும் சூழலில் திருமாவளவன் 2024-ம் ஆண்டு பாராளுமன்ற தேர்தலில் டெபாசிட் வாங்குவது சிரமம்.
கூட்டணிக் கட்சிகளை அரவணைக்க வேண்டியது என்பது எங்களுடைய வேலை இல்லை. அந்தந்த கட்சிகள் அவர்களின் முடிவுகளை எடுப்பார்கள். மற்றொரு கட்சியின் பிரச்சனையில் எப்போதும் தமிழக பாரதிய ஜனதா கட்சி உள்ளே நுழையாது.
2024-ம் ஆண்டில் பலம் வாய்ந்த கட்சியாக பாஜக இருப்பதன் காரணமாக தமிழ்நாட்டில் உள்ள எதிர்க்கட்சிகள் ஒரு நாளைக்கு பத்து முறை பாஜக பாஜக என்று சொல்லிவிட்டு தான் தூங்குகிறார்கள்.
தமிழ்நாட்டில் உள்ள பல அரசியல் கட்சித் தலைவர்கள் கும்மிடிப்பூண்டியை தாண்டி வட கிழக்கு மாநிலங்களுக்கு செல்ல வேண்டும். சிறுபான்மையின மக்கள் கிறிஸ்தவர்கள் போன்ற அதிகம் வாழும் மக்கள் பாரத ஜனதா கட்சியை தற்போது ஏற்றுக்கொள்ள துவங்கி விட்டனர். நாடு முழுவதும் பா.ஜ.க-வை ஏற்றுக்கொள்ளும் இடத்திற்கு மக்கள் வந்துள்ளனர்.
தமிழ்நாடு டி.ஜி.பி ஓய்வு பெறுவதற்கு இன்னும் இரண்டு மாதம் இருக்கிறது. எனவே, அவர் தமிழ்நாடு அமைதி பூங்காவாகத் தான் இருக்கிறது என்று கூறுவார்.” என்று
பா.ஜ.க தலைவர் அண்ணாமலை திருச்சி விமான நிலையத்தில் செய்தியாளர்கள் மத்தியில் பேசினார்.
திருச்சியில் இன்று பா.ஜ.க மாநில தலைவர் அண்ணாமலையும், தமிழ்நாடு டி.ஜி.பி சைலேந்திரபாபுவும் பல்வேறு நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர். இதனால், திருச்சியில் காவல்துறைக்கு கூடுதல் பணிச்சுமை இருந்ததாக காவலர்கள் புலம்பியதை அறிய முடிந்தது.
செய்தி: க. சண்முகவடிவேல்
"தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil"