Advertisment

ஸ்ரீரங்கம் கோவிலை தொடர்ந்து காஞ்சிபுரத்திலும் பிரதமர் உரை நேரடி ஒளிபரப்பு: அசராத அண்ணாமலை

ஸ்ரீரங்கம் கோயிலில் திரை அமைத்து பிரதமர் மோடியின் உரை ஒளிபரப்பிய நிகழ்வு சர்ச்சையான நிலையில், காஞ்சிபுரத்தில் கோயில் அருகே திருமண மண்டபத்தில் திரை அமைத்து ஒளிபரப்பப்பட்டது.

author-image
WebDesk
New Update
BJP President Annamalai, Annamalai, DMK Stop to criticise central govt, PM Modi speech screening event, Kanchipuram, பிரதமர் மோடி உரை திரையில் ஒளிபரப்பு, மத்திய அரசு மீது திமுக குறைகூறக் கூடாது, பாஜக, அண்ணாமலை, Tamilnadu, PM Modi, BJP

ஸ்ரீரங்கம் கோயிலில் கடந்த நவம்பர் மாதம், பிரதமர் மோடியின் உரை, திரை அமைத்து ஒளிபரப்பிய நிகழ்வு சர்ச்சையான நிலையில், பிரதமர் மோடியின் உரை கோயில் அருகே திருமண மண்டபத்தில் திரை அமைத்து மீண்டும் ஒளிபரப்பப்பட்டது. மேலும், இந்த நிகழ்ச்சிக்குப் பிறகு, செய்தியாளர்களிடம் பேசிய பாஜக மாநில தலைவர் அண்ணாமலை, மத்திய அரசை திமுக குறைகூறக் கூடாது என்று கருத்து தெரிவித்துள்ளார்.

Advertisment

திருச்சி, ஸ்ரீரங்கம் கோயிலுக்குள் நவம்பர் 5ம் தேதி பெரிய திரை மூலம் பிரதமர் மோடியின் பேச்சு ஒளிபரப்பானது. பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை தலைமையில் நடந்த இந்த நிகழ்ச்சி குறித்து ரங்கராஜ் நரசிம்மன் என்ற தீவிர வைணவர் தவறென்று சுட்டிக்காட்டினார். மேலும், பலரும் ஸ்ரீரங்கம் கோயிலில் அகன்ற திரை அமைத்து பிரதமர் மோடியின் பேச்சு ஒளிபரப்பப்பட்டது குறித்து விமர்சித்ததால் சர்ச்சையானது.

இந்த நிலையில், காசி விஸ்வநாதர் கோயிலில் புதியதாக கட்டப்பட்டுள்ள கோயில் வளாகத்தை நேற்று (டிசம்பர் 13) பிரதமர் மோடி திறந்து வைத்தார். இந்த நிகழ்ச்சியில் பிரதமர் மோடி கலந்துகொண்டதையும் அங்கே நிகழ்ச்சியில் அவர் பேசியதையும் காஞ்சிபுரம் ஏகாம்பரநாதம் கோயில் அருகே உள்ள திருமண மண்டபத்தில் பெரிய திரை அமைத்து நேரடியாக ஒளிபரப்பு செய்யப்பட்டது.

இந்த நிகழ்சி குறித்து அண்ணாமலை தனது ட்விட்டர் பக்கத்தில் குறிப்பிடுகையில், “காஞ்சிபுரத்தில் அருள்மிகு ஏகாம்பரேஸ்வரர் சுவாமியை தரிசித்துவிட்டு, பாரத பிரதமர் நரேந்திர மோடி அவர்கள் காசியில் புனரமைக்கப்பட்ட விஸ்வநாதர் ஆலயத்தை நாட்டு மக்களுக்கு அர்ப்பணித்ததை பொது மக்கள், கட்சி நிர்வாகிகள், சாது, சந்நியாசி சுவாமிகளுடன் அமர்ந்து பார்த்தோம்” என்று தெரிவித்துள்ளார்.

இந்த நிகழ்ச்சியில் பங்கேற்பதற்காக காஞ்சிபுரம் வந்த பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை, ஏகாம்பரநாதர் கோயிலுக்கு சென்று வழிபட்டார். பின்னர், அவர் துறவிகள், பாஜகவினருடன் அமர்ந்து, காசியில் பிரதமர் மோடி பங்கேற்ற விழாவைப் பார்த்தார்.

நிகழ்ச்சிக்குப் பின்னர், பாஜக மாநில தலைவர் அண்ணாமலை செய்தியாளர்களிடம் பேசினார். அப்போது அவர் கூறியதாவது: “மத்திய அரசை திமுக குறைகூறக் கூடாது. தமிழ்நாடு அரசு பெயரளவுக்கு மாநில அரசு பெயரளவுக்கு மட்டுமே விவசாயத்துக்காக தனியாக பட்ஜெட் போடுகிறது. மோடி ஆட்சியில் கடந்த 7 ஆண்டுகளில் உரத்தட்டுப்பாடு எதுவும் ஏற்படவில்லை. மத்திய அரசு மீது மாநில அரசு புகார் கூறுவதை தவிர்த்துவிட்டு விவசாயிகளுக்காக என்ன செய்திருக்கிறது என்பது குறித்து சிந்திக்க வேண்டும்.

பரதநாட்டிய கலைஞர் ஜாகீர் உசேன் விஷயத்தில் இந்து சமய அறநிலையத் துறை நாடகமாடுகிறது. யாரெல்லாம் கடவுளை நம்பி கோயிலில் சுவாமி தரிசனம் செய்ய விரும்புகிறார்களோ அவர்களுக்கு நமது நம்பிக்கையின் அடிப்படையில் கோயிலில் நிச்சயம் இடம் உண்டு. அதைத் தடுத்து நிறுத்துவதற்கு யாருக்கும் உரிமை இல்லை.

இந்து சமய அறநிலையத் துறை அமைச்சருக்கு காவல் துறை தலைவரை ஆதரித்து பேசுவதற்கு எந்தத் தகுதியும் இல்லை. பாரபட்சம் இல்லாமல் திமுக உறுப்பினர்கள் யாரெல்லாம் தவறு செய்திருக்கிறார்களோ அவர்கள் மீது முதல் தகவல் அறிக்கை பதிவு செய்யப்பட்டால் காவல் துறை தலைவரை பாஜகதான் முதல் ஆளாக வரவேற்கும்” என்று கூறினார்.

ஸ்ரீரங்கம் கோயிலில் திரை அமைத்து பிரதமர் மோடியின் உரை ஒளிபரப்பிய நிகழ்வு சர்ச்சையான நிலையில், காஞ்சிபுரத்தில் கோயில் அருகே திருமண மண்டபத்தில் திரை அமைத்து ஒளிபரப்பப்பட்டது.

"தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil"

Pm Modi Speech Annamalai Kanchipuram
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment