Advertisment

நாடாளுமன்றத் தேர்தலில் போட்டியிட மாட்டேன் - அண்ணாமலை பேட்டி

நாடாளுமன்றத் தேர்தலில் போட்டியிட மாட்டேன் என்றும் டெல்லி அரசியலில் தனக்கு விருப்பமில்லை என்றும் பா.ஜ.க மாநிலத் தலைவர் அண்ணாமலை ஞாயிற்றுக்கிழமை தெரிவித்தார்.

author-image
WebDesk
New Update
Annamalai, BJP, Annamalai says I will not contest in parliamentary elections, Annamalai not interested in Delhi Politics, நாடாளுமன்றத் தேர்தலில் போட்டியிட மாட்டேன், அண்ணாமலை பேட்டி, Annamalai press meet, coimbatore

பா.ஜ.க மாநிலத் தலைவர் அண்ணாமலை

நாடாளுமன்றத் தேர்தலில் போட்டியிட மாட்டேன் என்றும் டெல்லி அரசியலில் தனக்கு விருப்பமில்லை என்றும் பா.ஜ.க மாநிலத் தலைவர் அண்ணாமலை ஞாயிற்றுக்கிழமை தெரிவித்தார்.

Advertisment

சென்னையிலிருந்து விமானம் மூலம் கோவை வந்த பா.ஜ.க வின் மாநில தலைவர் அண்ணாமலை செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது: “காவல்துறையினருக்கு டைமிலி பிரமோஷன் கிடைப்பதில்லை. கிரேட் 2 பதவியில் இருக்கும் காவல்துறை நண்பர்களுக்கு ப்ரோமோஷன் வராதது கண்டிக்கத்தக்கது. காவல்துறையின் நலத்தை பார்க்க வேண்டும். டிஜிபி பிரமோஷனுக்கு முதலமைச்சர் இடம் பேசிக் கொண்டு வர வேண்டும். இதைப் போர்க்கால அடிப்படையில் செய்ய வேண்டும்.

தி.மு.க அரசு வந்த பிறகு, கமிஷன் அரசு கமிஷனுக்காக வேலை செய்கின்றனர். மின்சாரத் துறை அமைச்சர் பேசுவது பாதி தான் உண்மை பாதி உண்மை இல்லை. ரென்யூபில் எனர்ஜியில் பயனடைந்து வருகிறோம். ரென்யூபில் எனர்ஜி மத்திய அரசின் கனவு.ரென்யூபில் எனர்ஜியில் உலகத் தலைவராக நாம் மாறப் போகிறோம். இதை தமிழக அரசு யூஸ் பண்ணுவதில்லை.

சோலார் சப்சிடி கொடுப்போம் என தி.மு.க அரசு தெரிவித்தது. ஆனால் எத்தனை வீட்டிற்கு கொடுத்துள்ளார்கள். எத்தனை பேருக்கு லஞ்சம் இல்லாமல் இணைப்பு கொடுத்துள்ளார்கள்.

2021-22 ,22-23 ஆண்டை கம்பேர் பண்ணும் பொழுது தமிழ்நாட்டில் 22% விழுக்காடு மது விற்பனை அதிகரித்துள்ளது. இரண்டு லட்சத்து 53 ஆயிரம் லிட்டர் காவல்துறையால் சாராயம் பிடிக்கப்பட்டுள்ளது. 75% டாஸ்மாக்குகளை மூட வேண்டும். 25 சதவீத டாஸ்மாக் கடைகள் திறக்கப்பட வேண்டும். தமிழ்நாடு முழுவதும் கள் விற்பனை செய்ய வேண்டும். கள்ளில் வருமானத்திற்கும் வழி உள்ளது.

அடுத்த ஐந்து ஆண்டுகளில் வருமானத்தை கள்ளால் எப்படி ஈட்டு கொடுக்க முடியும் என்பதை வெள்ளை அறிக்கையில் உள்ளது.

வெள்ளை அறிக்கையை சமர்ப்பித்த பிறகு விழுப்புரத்தில் மாநாடு நடைபெறும். அந்த மாநாட்டில் மக்கள் மத்தியில் வெள்ளை அறிக்கை வெளியிடப்படும். விழுப்புரத்திற்கு பிறகு தமிழ்நாடு முழுவதும் மாநாடு நடைபெறும்.

1985 க்கு பிறகு கர்நாடகத்தில் ஆளுங்கட்சி திரும்ப ஆட்சிக்கு வந்ததில்லை. அங்கு பா.ஜ.க வின் மீது உள்ள சலிப்புத்தன்மையால் ஆட்சி மாற்றம் ஏற்பட்டுள்ளது.

காங்கிரசின் இலவசம். சித்தராமையா இலவசத்தில் மூன்று மாற்றத்தை கொண்டு வந்துள்ளார்.

தேர்தல் அறிக்கையில் அறிவிப்பு வெளியிட்டு விட்டு வேறு செய்கின்றனர். அறிக்கையை மாற்றிவிட்டனர்.

பா.ஜ.க அரசு பொருளாதாரமான நாட்டை கொடுத்து சென்றதால் கர்நாடகாவில் பட்ஜெட் நன்றாக இருக்கிறது. பா.ஜ.க அரசு நடத்தியதை வைத்து தான் பட்ஜெட் சித்தா ராமையா போடுகிறார்.

2000 ரூ நோட்டு புழகத்தில் இல்லை. 2000 ரூபாய் நோட்டு வைத்துள்ளவர்கள் பதுக்கி வைத்தவர்கள். 2000 ரூபாய் நோட்டால் கொள்ளையடித்தவர்களுக்கு தான் பிரச்சனை. டாஸ்மாக்கை, கோ ஆப்பரேட்டிவ் சொசைட்டியை, எலக்ட்ரிக்சிட்டி பில் கட்டும் இடங்களை மத்திய அரசு மானிட்டரி செய்ய வேண்டும் என தெரிவித்துள்ளேன்.

உதயநிதி ஸ்டாலின் மணி லான்டர். இது குறித்து கேள்வி கேட்டால் பத்திரிக்கையாளர்களிடம் சிரித்து செல்கின்றனர். கவர்னரிடம் சென்றுள்ளோம். நாங்கள் விடுவதாக இல்லை.

கேள்விகள் கேட்டால் ஐயாயிரம் கடைக்கு போனாயா என பத்திரிக்கையாளர்களை கிண்டல் பண்ணுகின்றனர். இதற்கு மக்கள் பதிலடி கொடுப்பார்கள். உதயநிதி ஸ்டாலின் எத்தனை நாள் தப்பிப்பார். சின்ன குழந்தையை போல் கோச் செய்கிறார்கள். எத்தனை நாள் தப்பித்துப் போகிறார்கள் என பார்ப்போம்.

2024 இல் போட்டியிட எனக்கு விருப்பமில்லை. தமிழகத்தில் ஆட்சி மாற்றத்திற்கு தான் பா.ஜ.க-விற்கு வந்தேன். 2024 ல் தொண்டனாக வேலை செய்வேன். 2024 தேர்தலில் டெல்லி அரசுக்கு செல்ல எனக்கு விருப்பமில்லை. 2024 நிற்பவர்களை வெற்றி பெற வேலை செய்வேன். தமிழ்நாட்டை விட்டு வெளியே செல்ல விருப்பமில்லை. இந்த மண்ணில் எனது அரசியல் இருக்க வேண்டும் என விரும்புகின்றேன். இவ்வாறு அவர் தெரிவித்தார்.

செய்தி: பி. ரஹ்மான்

"தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Bjp Annamalai
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment