scorecardresearch

‘தமிழகத்தில் 25 எம்.பி-க்களை நாம் ஜெயித்தால் தி.மு.க நடை பிணம் ஆகிவிடும்’: அண்ணாமலை

நாடாளுமன்றத் தேர்தலில் தமிழகத்தில் பா.ஜ.க சார்பில் 25 எம். பி.க்கலை ஜெயித்துவிட்டால், தி.மு.க நடைபிணம் ஆகிவிடும் என கோவையில் பா.ஜ.க மாநில தலைவர் அண்ணாமலை புதன்கிழமை கூறினார்.

‘தமிழகத்தில் 25 எம்.பி-க்களை நாம் ஜெயித்தால் தி.மு.க நடை பிணம் ஆகிவிடும்’: அண்ணாமலை

கோவையில் குறிச்சி பகுதியில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில், மாற்றுத்திறனாளிகளுக்கு காது கேட்கும் கருவி, செயற்கை கால்கள் உள்ளிட்டவை வழங்கும் நிகழ்ச்சியில் பா.ஜ.க மாநில தலைவர் அண்ணாமலை கலந்து கொண்டார்.

இந்த நிகழ்ச்சியில் சுமார் 100 மாற்றுத்திறனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டன. இதில், அக்கட்சி தொண்டர்கள், பயனாளிகள் என மொத்தம் 200-க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.

மேடையில் சிறப்புரை ஆற்றிய அண்ணாமலை, ரபேல் வாட்ச் விவகாரம் மற்றும் நாடாளுமன்ற தேர்தலுக்கான முன்னெடுப்புகள் குறித்தும் பேசினார்.

அப்போது அண்ணாமலை பேசியதாவது:

தேசத்தை இதயத்தில் வைத்து நடக்கும் கட்சி பாஜக. கடவுளுக்கு மிக நெருக்கத்தில் இருப்பவர்கள் உடலில் சிறு குறைகளுடன் மனதில் எந்த குறையும் இல்லாதவர்களே.

திமுக வந்த பிறகு பாஜகவுக்கு பெரிய எழுச்சி கிடைத்துள்ளது.2024 இல் 25 எம். பி. க்கள் கிடைப்பர்கள் என்பது இலக்கு.தமிழகத்தில் 70 ஆண்டுகளாக ஊழல் செய்து வருகிறார்கள். டீக்கடையில் எப்போது ரபேல் விவகாரம் குறித்து பேசுகிறார்களோ அன்றைக்கு வாட்ச்சின் பில்லை வெளியிடுகிறேன்.

ஊழலைப் பற்றி பேச அருகதை இல்லாதவர்கள் நம் மீது குற்றம் சாட்டுகிறார்கள். 2ஜி விவகாரம் எப்படி திமுகவை 10 ஆண்டுகள் ஆட்சியில் அமரவிடமால் செய்ததோ அதே போல் மீண்டும் நிகழும்.70 ஆண்டுகளாக நாங்கள் காத்துக் கொண்டு இருக்கிறோம்.

பொதுமக்கள் திமுக ஊழல் பற்றி தெரிவிக்க ஒரு வெப்சைட் அப்ளிகேஷன் தயார் தயாராகிறது.
தமிழகம் முழுவதும் உள்ள பினாமிகள் குறித்து அதில் தெரிந்து கொள்ளலாம்.இந்த அப்ளிகேஷன் மூலம் பொதுமக்கள் ஒரு புகைப்படம் எடுத்து பதிவு செய்யலாம். ஊழலைப் பற்றி பேச தராதரம் வேண்டும். கருணாநிதி உயிரோடு இருந்திருந்தால் தி.மு.க நமக்கு வாய்ப்பு கொடுத்திருக்காது. 25 எம்.பி -க்களை வாங்க ரஃபேல் வாட்சும் உழைக்கும்.

முதலமைச்சரின் குடும்பத்தை பற்றி பேச யாருக்கும் தைரியம் இல்லை. நமக்கு தைரியம் உள்ளது. டீக்கடையில் பேசும் பொழுது தான் அரசியல் ஆரம்பிக்கிறது. தி.மு.க-வினரிடம் உள்ள இரண்டு லட்சம் கோடியா.? வாட்சின் பில்லா.? டீக்கடையில் பேசுவார்கள்.

பா.ஜ.க-வின் சார்பில் பூத்து கமிட்டி அமைக்கும் பணி வேகமாக நடைபெற்று வருகிறது. வசிக்கும் இடத்தில் பூத் கமிட்டி இல்லை என்றால் நீங்கள் அவமானமாக நினைக்க வேண்டும். டூ ஆர் டை (செய் அல்லது செத்துமடி) என்ற காலத்தில் நாம் உள்ளோம்.

2024-ல் தி.மு.க கட்சிக்கு முடிவுரை எழுத முடியும்.
25 எம்.பி-க்கள் வாங்கி விட்டால் தி.மு.க ஆட்சியில் இருந்தால் என்ன இல்லை என்றால் என்ன. நடைபிணம் ஆகிவிடும்.

எல்லா சூழ்நிலையும் உருவாக்கி விடலாம். தொண்டர்கள் தான் பா.ஜ.க வெற்றியை தீர்மானிப்பவர்கள். நீங்கள் வெற்றி பெற வைக்க வேண்டும். ஆண்டவன் எங்கள் மூலமாக மாற்றுத்திறனாளிகளுக்கு
உதவ வைக்கிறார்.

உண்மையான மனிதத்தை பார்க்க நலத்திட்ட உதவிகள் தான் தேவை. தொண்டர்கள் கடுமையாக பாடுபடுங்கள்.
விரைவில் கோவையில் பொதுக்கூட்டம் நடக்கும்.2024 இன் நிலை பொள்ளாச்சியில் இருந்து மாற்றம் நடைபெறும்” என்று கூறினார்.

செய்தி: பி.ரஹ்மான் – கோவை மாவட்டம்

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“

Stay updated with the latest news headlines and all the latest Tamilnadu news download Indian Express Tamil App.

Web Title: Annamalai says if we win 25 mps in tamil nadu dmk will become living cadaver