Advertisment

விஜய் குறித்து கருத்து கூற விரும்பவில்லை... செந்தில் பாலாஜி அமைச்சர் பதவி - சஸ்பென்ஸ் வைத்த அண்ணாமலை

மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களை சந்திக்க களத்திற்கு வராத விஜய் குறித்து கருத்து கூற விரும்பவில்லை என்றும் செந்தில் பாலாஜி அமைச்சர் பதவி குறித்து உச்ச நீதிமன்றம் டிசம்பர் 13-ம் தேதி என்ன சொல்லப் போகிறது காத்துக்கொண்டிருக்கிறேன் என்று அண்ணாமலை தெரிவித்துள்ளார்.

author-image
WebDesk
New Update
Annamalai press x

செந்தில் பாலாஜி அமைச்சர் பதவி குறித்து உச்ச நீதிமன்றம் டிசம்பர் 13-ம் தேதி என்ன சொல்லப் போகிறது என்பதற்காக காத்துக்கொண்டிருக்கிறேன் என்று பா.ஜ.க மாநிலத் தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார்.

மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களை சந்திக்க களத்திற்கு வராத விஜய் குறித்து கருத்து கூற விரும்பவில்லை என்றும் செந்தில் பாலாஜி அமைச்சர் பதவி குறித்து உச்ச நீதிமன்றம் டிசம்பர் 13-ம் தேதி என்ன சொல்லப் போகிறது என்பதற்காக காத்துக்கொண்டிருக்கிறேன் என்று பா.ஜ.க மாநிலத் தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார்.

Advertisment

பா.ஜ.க மாநிலத் தலைவர் அண்ணாமலை இன்று (டிசம்பர் 03) செய்தியாளர்களிடம் பேசியதாவது: “இந்த முறை மழையில் பாதித்திருப்பது கிராமப்புற பகுதிகள், விவசாய நிலப் பகுதிகள், டெல்டா பகுதி வழக்கம் போல இந்த ஆண்டும் பெரிய பாதிப்பு இருக்கிறது. மரக்காணம், விழுப்புரம், திருவண்ணாமலை இந்த பகுதி எல்லாமே 8 ஆண்டுக்கு பிறகு வரலாறு காணாத அளவுக்கு மழை வெள்ளத்தால் மக்களுடைய இயல்பு வாழ்க்கை பெரும் பாதிப்புக்கு உள்ளாகி இருக்கிறது. அதுவும் குறிப்பாக காலையில் மரக்காணம் உப்பளம் பகுதியில் பார்த்துக் கொண்டு வந்தோம். அதன் பிறகு, விவசாய நிலங்கள் இறால் பண்ணைகள் என எல்லா இடத்திலும் மக்கள் பெரிய பாதிப்புகள் இருப்பதை சுட்டிக்காட்டி வருகிறார்கள். வெள்ளத்தால் பாதிக்கப்பட்டவர்கள் அரசு பள்ளிகளில் தங்கி இருக்கிறார்கள் அவர்களுக்கு நிவாரண பொருட்கள் வழங்கினோம்.

வரலாறு காணாத மழை பெய்திருக்கிறது என்று ஒரு பக்கம் மாநில அரசு சொல்கிறார்கள். 50 சென்டிமீட்டர் வரை மழை பெய்திருக்கிறது நாங்கள் என்ன செய்ய முடியும் என்று மாநில அரசு சொல்கிறது. அதில் ஓரளவு உண்மை இருக்கிறது. வருடம் முழுவதும் பெய்யும் மழை ஒரே நேரத்தில் பெய்து இருக்கிறது.

இதனால் இயல்பு வாழ்க்கை மிகவும் பாதிப்புக்கு உள்ளாகி இருக்கிறது இதில் முக்கியமான விஷயம் என்னவென்றால் மழை பெய்தாலும் கூட தண்ணீர் வெளியே செல்லக்கூடிய பகுதிகளில் எல்லாம் மாநில அரசு முன்கூட்டியே கால்வாய்களை தூர்வாரி தண்ணீர் வெளியேறுவதற்கு வழியை செய்திருக்க வேண்டும். குறிப்பாக இந்த பகுதிக்கு இது பொருந்தவில்லை என்றாலும் கூட இந்த முறை வெல்ல சேரும் இதற்காக அதிகமாக இருக்கிறது என்றால் சாத்தனூர் டேம் திறப்பு ஒரு காரணம்.

Advertisment
Advertisement

இதை மனிதனால் உருவாக்கப்பட்ட பேரிடர் என்று ஒரு விதத்தில் சொல்லலாம். சாத்தனூர் ஆணையைப் பொறுத்தவரை டிசம்பர் 1-ம் தேதி காலையில் 5 ஆயிரம் கன அடி தண்ணீர் உள்ளே வருகிறது, மதியம் வரை அதே அளவு தண்ணீர் உள்ளே வருகிறது. மாலையில் மாநில அரசு சொல்கிறார்கள் 30 ஆயிரம் கன அடி தண்ணீர் வரை திறப்பதற்கு வாய்ப்பு உள்ளதாக கூறுகிறார்கள். டிசம்பர் இரண்டாம் தேதி காலையில் ஒரு லட்சம் கன அடி தண்ணீர் திறக்கிறார்கள். அதிகாலை 4 மணிக்கு ஒரு லட்சத்து 68 ஆயிரம் கன அடி தண்ணீர் திறக்கும் போது அங்கிருந்து மக்கள் எப்படி தப்பிக்க முடியும். இன்று 38 கிராமங்களுக்குள் தண்ணீர் புகுந்து இருக்கிறது. கிட்டத்தட்ட தென் தமிழ்நாடு, வட தமிழ்நாடு தொடர்பு துண்டாகிவிட்டது. விழுப்புரம் பகுதியில் நெடுஞ்சாலையில் எல்லாம் துண்டிக்கப்பட்டது. இதற்கெல்லாம் காரணம், அரசு இயந்திரம் முன்கூட்டியே இன்னும் கொஞ்சம் முன்னெச்சரிக்கையாக மழை வருவதற்கு முன்பாகவே கால்வாய் தூர் வரவில்லை, குறிப்பாக சாத்தனூர் அணையில் இருந்து ஒரே நேரத்தில் தண்ணீரை திறந்து விட்டிருக்கிறார்கள்.”
என்று குற்றம் சாட்டினார்.

மழை வெள்ளத்தால் மக்கள் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், அரசியலுக்கு வந்துள்ள விஜய் இன்னும் மக்களைச் சந்திக்க களத்திற்கு வரவில்லை என்பது குறித்து செய்தியாளர்கள் கருத்து கேட்டதற்கு பதிலளித்த அண்ணாமலை, ஒவ்வொருவருக்கும் ஒரு அரசியல் ஸ்டைல் இருக்கிறது. அணுகுமுறை இருக்கிறது. மற்றொரு அரசியல் கட்சித் தலைவர் குறித்து நான் கருத்து கூற விரும்பவில்லை என்று அண்ணாமலை தெரிவித்தார்.

செந்தில் பாலாஜி அமைச்சரானதால் சாட்சியங்களுக்கு பாதிப்பு இருப்பதாக உச்ச நீதிமன்றம் கருத்து தெரிவித்திருப்பது குறித்து செய்தியாளர்களின் கேள்விக்கு பதிலளித்த பா.ஜ.க மாநிலத் தலைவர் அண்ணாமலை,  “உச்ச நீதிமன்றம் சொல்லியிருக்கக் கூடிய கருத்து மிக முக்கியமான கருத்து. பெயிலில் வந்த உடனே எவ்வளவு வேகமாக அமைச்சர் பதவி கொடுத்திருக்கிறீர்கள், எவ்வளவு முக்கியமான துறையைக் கொடுத்திருக்கிறீர்கள். முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் கோயம்புத்தூர் விழாவில் பேசியதை நான் மேற்கோள் காட்டுகிறேன். என் மகன் உட்பட தி.மு.க அமைச்சரவையில் இருக்கக்கூடிய எல்லா அமைச்சர்களையும்விட பார்க்கும்போது, செந்தில் பாலாஜிதான் சிறந்தவர் என்கிறார். இதை எப்போது சொல்கிறார் என்றால், செந்தில் பாலாஜி பெயிலில் இருந்து வெளியே வந்து, இரண்டு வாரத்தில் அமைச்சர் பொறுப்பை ஏற்றுக்கொண்டு அவரை மேடையிலே அமர வைத்துக்கொண்டு முதலமைச்சர் வாசிக்கக்கூடிய பாராட்டுப் பத்திரம். இதையெல்லாம் உச்ச நீதிமன்றம் பார்க்கிறார்கள். அதைத்தான் நீதிபதிகள் சொன்னார்கள், இவ்வளவு வேகமாக மாநில அரசு அவருக்கு முக்கியமான பொறுப்பைக் கொடுக்கிறீர்கள் என்றால், அவர் சாட்சியைக் கலைப்பதற்கான வாய்ப்பு அதிகம். உச்ச நீதிமன்றம் அவரை எங்கேயும் நிரபராதி என்று சொல்லவில்லை. குற்றப்பத்திரிகை தாக்கல் செய்துவிட்டார்கள், குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்ட பிறகு, நீங்கள் எதற்கு சிறையில் இருக்க வேண்டும் வெளியில் செல்லுங்கள் என்று பெயில் கொடுத்திருக்கிறார்கள். உச்ச நீதிமன்றம் என்ன கருத்து சொன்னாலும்கூட, தமிழக மக்கள் இதை உற்றுநோக்கிப் பார்த்துக்கொண்டிருக்கிறார்கள். எந்த கோர்ட்டில் வேண்டுமானாலும் அவர்கள் தப்பிக்கலாம், ஆனால், அவர்கள் மக்கள் கோர்ட்டில் தப்பிக்க வேண்டும். அதற்கெல்லாம் மக்கள் நிச்சயமாக 2026-ல் ஒரு பெரிய பதில் கொடுப்பார்கள் என்று ஒரு நம்பிக்கை இருக்கிறது. அதே நேரத்தில், உச்ச நீதிமன்றம் அந்த வழக்கை டிசம்பர் 13-ம் தேதிக்கு தள்ளி வைத்திருக்கிறார்கள். 13-ம் தேதி உச்ச நீதிமன்றம் ஒரு உறுதியான அறிக்கை கொடுப்பார்கள் என்பது எங்களுடைய நம்பிக்கை. 

குறிப்பாக, பொறுப்பில் இருக்க வேண்டுமா, துறையில் கையெழுத்து போட வேண்டுமா, நிதி அதிகாரம் இருக்கவேண்டுமா, குற்றம் சாட்டப்பட்டவரின் மீது, குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டவரின் மீது, முகாந்திரம் இருக்கக்கூடிய ஒரு வழக்கில், அரசு அதிகாரிகள் போல அவர்களுக்கு அதிகாரம் கொடுக்க வேண்டுமா என்பது குறித்து உச்ச நீதிமன்றம் பார்ப்பார்கள் என்ற நம்பிக்கை இருக்கிறது. டிசம்பர் 13-ம் தேதி உச்ச நீதிமன்ற நீடிபதிகள் என்ன சொல்வார்கள் என்பதைக் கேட்பதற்காக நானும் காத்துக்கொண்டிருக்கிறேன்” என்று கூறினார்.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

 

Annamalai
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment