நீட் தேர்வை ரத்து செய்யக் கோரி 50 நாட்களில் 50 லட்சம் கையெழுத்துப் போராட்டத்தை இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத் துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் சனிக்கிழமை (அக்.21) தொடங்கிவைத்தார்.
தேசிய தகுதி மற்றும் நுழைவுத் தேர்வுக்கு (நீட்) எதிரான திமுகவின் கையெழுத்துப் பிரச்சாரத்தை தமிழக பாஜக தலைவர் கே.அண்ணாமலை ஞாயிற்றுக்கிழமை கடுமையாக சாடினார்.
நீட் தேர்வை ரத்து செய்யக் கோரி 50 நாட்களில் 50 லட்சம் கையெழுத்துப் போராட்டத்தை இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத் துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் சனிக்கிழமை (அக்.21) தொடங்கி வைத்தார்.
அவரது பிரச்சாரத்திற்கு பதிலளித்த அண்ணாமலை, "இன்னும் தமிழக அரசியலை சினிமா என்று நினைக்கிறார்கள். கூலிங் கிளாஸ் அணிந்து கொண்டு படம் காட்டுகிறார். இப்போது உதயநிதி ஸ்டாலின் கல்வி பட்டமே கேள்விக்குறியாக உள்ளது. அவர் எப்படி கல்வி பட்டம் பெற்றார்?
தமிழக மக்கள் நீட் தேர்வை ஏற்றுக்கொண்டனர், கையெழுத்து வாங்குவது பெரிய விஷயம் இல்லை, நீட் தேர்வுக்கு ஆதரவாக, 2 கோடி கையெழுத்து பெற முடியும்.
உதயநிதி ஸ்டாலின் முட்டையை பூஜ்ஜியமாகக் காட்டுகிறார். முட்டை என்பது ஓவல். ஓவலுக்கும் பூஜ்ஜியத்திற்கும் வித்தியாசம் உள்ளது. இது அவர்களுக்குத் தெரியாது” என்றார்.
தொடர்ந்து அமர் பிரசாத் ரெட்டி கைதுக்கு பதிலளித்த அண்ணாமலை, “இந்த தீய சக்தியான திமுகவை தமிழ் மண்ணில் இருந்து வேரோடு பிடுங்கி எறிய வேண்டும் என்பதில் நாங்கள் தெளிவாக இருக்கிறோம். தமிழகத்தில் இன்று 13 பாஜகவினர் சிறையில் உள்ளனர். இவர்கள் பெரிய தலைவர்களாக வளருவார்கள்“ என்றார்.
தொடர்ந்து, “ஆங்கிலேயர்களை விட தமிழ்நாடு காவல்துறை மோசமாக உள்ளது. கிழக்கிந்திய கம்பெனியை விட அவர்கள் திமுகவின் கைக்கூலிகளாக மாறிவிட்டனர்” என்றார்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“