/indian-express-tamil/media/media_files/iq4iKiqvpqkHUybekadJ.jpg)
ரூ.4442 கோடி ஒப்பந்தத்தை தனியார் நிறுவனத்திற்கு கொடுத்து விட்டு, பெல் நிறுவனத்தைச் சார்ந்திருக்கும் சிறு, குறு நிறுவனங்கள் பாதிக்கப்பட்டு உள்ளதாக ஸ்டாலின் முதலைக் கண்ணீர் வடிக்கிறார்; அண்ணாமலை
4442 கோடி ரூபாய் மதிப்பிலான ஒப்பந்தத்தை தனியார் நிறுவனத்திற்கு கொடுத்து விட்டு, இன்று, பெல் நிறுவனத்தின் ஆர்டர்களை நம்பியிருக்கும் சிறு, குறு நிறுவனங்கள் ஏமாற்றமடைந்துள்ளதாக தமிழக முதல்வர் முதலைக் கண்ணீர் வடிக்கிறார் என பா.ஜ.க தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார்.
இதுதொடர்பாக அண்ணாமலை தனது எக்ஸ் பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில், ”இன்று தமிழக முதல்வர் ஸ்டாலின்திருச்சியில் நமது பிரதமர் மோடியுடன் மேடையில்இணைந்து 20,000 கோடி ரூபாய் மதிப்பிலான திட்டங்களை துவக்கி வைத்தும்/ அடிக்கல் நாட்டியும் வைத்தார். ஆனால், பின்னர் பேசிய ஸ்டாலின், பெல் (BHEL) நிறுவனத்தைச் சார்ந்திருக்கும் சிறு குறு நிறுவனங்களுக்கு (MSME) முந்தைய காலங்களைப் போலல்லாமல் ஆர்டர்கள் குறைவாக இருப்பதாகக் கூறியுள்ளார்.
தமிழக முதல்வர் ஸ்டாலின், 2021 இல், எரிசக்தி துறைக் கூட்டத்திற்குத் தலைமை தாங்கி, BGR எனர்ஜி நிறுவனத்திற்கு ஒப்பந்தத்தை மீண்டும் அளித்தார், சமீப காலம் வரை, அந்தப் பணிகளில் எந்த முன்னேற்றமும் இல்லை. இந்த ஒப்பந்தத்திற்கான மற்றொரு ஏலதாரரான BHEL நிறுவனம், அவர்களுக்கு நன்கு தெரிந்த காரணங்களுக்காக தமிழ்நாடு அரசாங்கத்தால் பரிசீலிக்கப்படவில்லை.
BHEL தொழிற்சங்கங்கள், BGR எனர்ஜி உடனான ஒப்பந்தத்தை மீண்டும் ஏற்படுத்துவது தொடர்பாக சி.பி.ஐ (CBI) விசாரணை கோரி சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தன.
பி.ஜி.ஆர் எனர்ஜி போன்ற தரம் குறைவான நிறுவனத்தை ரூ.4442 கோடி மதிப்பிலான ஒப்பந்தத்தை நிறைவேற்ற தி.மு.க ஆதரவு அளித்தது. இன்று, பெல் நிறுவனத்தின் ஆர்டர்களை நம்பியிருக்கும் சிறு, குறு நிறுவனங்கள் ஏமாற்றமடைந்துள்ளதாக தமிழக முதல்வர் முதலைக் கண்ணீர் வடிக்கிறார். இந்த நிலைக்கு தாங்கள் காரணம் என்பதை தி.மு.க இன்னும் உணரவில்லை.” இவ்வாறு அண்ணாமலை பதிவிட்டுள்ளார்.
Today, TN CM Thiru @mkstalin on the stage after our Hon PM Thiru @narendramodi avl Inaugurated/laid foundation for projects worth ₹20,000 Crores in Trichy, said that the MSMEs dependent on BHEL are short of orders, unlike earlier times.
— K.Annamalai (@annamalai_k) January 2, 2024
TN CM Thiru @mkstalin, in 2021, chaired… https://t.co/0YEAJM8vYG
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெறhttps://t.me/ietamil“
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.