Advertisment

"தமிழ்நாடு பாடநூல் கழகத்திற்கு போதைப்பொருளின் பணம்; அமைச்சர் விளக்கமளிக்க வேண்டும்": அண்ணாமலை குற்றச்சாட்டு

தமிழ்நாடு பாடநூல் கழகத்தில், போதைப் பொருள் வழக்கில் கைதான ஜாஃபர் சாதிக்கின் பணம் பயன்படுத்தப்பட்டதாக அண்ணாமலை குற்றம்சாட்டியுள்ளார்.

author-image
WebDesk
New Update
Annamalai and TNBESC

போதை பொருள் வழக்கில் கைது செய்யப்பட்ட ஜாஃபர் சாதிக்கின் பணம், தமிழ்நாடு பாடநூல் கழகத்தில் பயன்படுத்தப்பட்டதாக தமிழக பா.ஜ.க தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார். மேலும், இது குறித்து அமைச்சர் அன்பில் மகேஷ் விளக்கம் அளிக்க வேண்டும் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார். இந்த விவகாரம் தொடர்பாக தனது எக்ஸ் தள பக்கத்தில் அண்ணாமலை அறிக்கை ஒன்றை பதிவிட்டுள்ளார்.

Advertisment

அதில், "சர்வதேச போதைப்பொருள் கடத்தல் கும்பல் தலைவனும், தி.மு.க நிர்வாகியுமான ஜாஃபர் சாதிக், போதைப் பொருள் விற்பனை மூலம் கிடைத்த பணத்தை வெள்ளையாக்குவதற்கு, தமிழ்நாட்டுப் பாடநூல் கழகத்தைப் பயன்படுத்தியுள்ளது அமலாக்கத்துறை விசாரணையில் தெரிய வந்துள்ளது. ஜாஃபர் சாதிக்கின் நிறுவனமான Coalescence Ventures என்ற நிறுவனம், தமிழ்நாட்டுப் பாடநூல் கழகத்தின் ஒப்பந்ததாரர் நிறுவனமான Sri Appu Direct என்ற நிறுவனத்துடன் ஒப்பந்தம் செய்து, பொருள்களை வழங்கியுள்ளது தெரியவந்துள்ளது. 

ஜாஃபர் சாதிக், போதைப் பொருள் விற்பனை மூலம் கிடைத்த பணத்தை, 2022 – 2023 காலகட்டத்தில், தனது Coalescence Ventures நிறுவனத்தில் முதலீடு செய்திருப்பது, அமலாக்கத்துறை விசாரணையில் வெளிவந்துள்ளது. இதே காலகட்டத்தில் தான், Sri Appu Direct நிறுவனம், தமிழ்நாட்டுப் பாடநூல் கழகத்துடன் ஒப்பந்தம் செய்திருந்ததும் குறிப்பிடத்தக்கது. இந்த ஒப்பந்தத்துக்கான பொருள்களை வழங்கியது, ஜாஃபர் சாதிக்கின் Coalescence Ventures நிறுவனம் ஆகும்.

குறிப்பிட்ட காலகட்டத்தில், தி.மு.க நிர்வாகியாக இருந்த ஜாஃபர் சாதிக், போதைப்பொருள் விற்பனை மூலம் கிடைத்த பணத்தை, வெள்ளையாக்குவதற்கு, தமிழ்நாட்டுப் பாடநூல் கழகம் மறைமுகமாக உதவி செய்துள்ளதாகவே இதன் மூலம் தெரிய வருகிறது. பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் திரு. அன்பில் மகேஷ் பொய்யாமொழி அவர்கள், இது குறித்து விளக்கமளிக்க வேண்டும் என்று வலியுறுத்துகிறேன்" என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

Advertisment
Advertisement

 

 

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil
Anbil Mahesh Annamalai
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment