/indian-express-tamil/media/media_files/2025/02/18/ANDNuUUJxFsSMjhSJFL2.jpg)
கோவை மாவட்டத்தில் இன்று நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் பா.ஜ.க மாநில தலைவர் அண்ணாமலை கலந்து கொண்டார். அப்போது, "முதல்வர் ஸ்டாலின் மார்ச் முதல் வாரத்தில் அனைத்து கட்சி கூட்டத்தை கூட்டி இருக்கிறார். பாராளுமன்றத்தின் மறு சீரமைப்பில் தமிழகத்திற்கு அநியாயம் நடக்கப் போவதாக எனக்கு தகவல் கிடைத்தது என்று கூறி இருக்கிறார். உடனடியாக அனைவரும் வாருங்கள் என 45 கட்சிகளை அழைத்து இருக்கிறார். மாநில முதல்வர் தனிப்பட்ட முறையில் பாரதிய ஜனதா கட்சிக்கும் கடிதம் எழுதி இருக்கிறார்.
முதல்வர் கடிதம் எழுதியதால் மாநில தலைவராக அதை விளக்குகிற பொறுப்பும் எனக்கு இருக்கிறது. இன்று அமைச்சர் அமித்ஷா மிகவும் தெள்ளத் தெளிவாக, மறு சீரமைப்பு நடக்கும் பொழுது, எப்படி நடக்கும் என்பதை கூறி இருக்கிறார். இன்றைக்கு 543 சீட்டுகள் பாராளுமன்றத்தில் உள்ளது. மறு சீரமைப்பு வரும்பொழுது 543 ல் இருந்து அது அறநூறு 700 என எதுவாக வேண்டுமானாலும் ஆகலாம். ஆனால் அது விகிதாச்சார அடிப்படையில் இருக்கும். ஜம்மு காஷ்மீரில் ஒரு லட்சம் பேருக்கு ஒரு எம்.பி இருக்கலாம். உத்தரப்பிரதேசத்தில் 45 லட்சம் பேருக்கு ஒரு எம்.பி இருக்கலாம். தமிழகத்தில் 25 லட்சம் பேருக்கு ஒரு எம்.பி இருக்கலாம். அதை தெள்ளத், தெளிவாக அமைச்சர் அமித்ஷா கூறியிருக்கிறார்.
ஆனால், முதலமைச்சரிடம் யார் இந்த தகவலை சொன்னார்கள் என்று நான் கேட்க விரும்புகிறேன். உங்களுக்கு சீட் குறைய போகிறது என்று யார் கூறினார்கள் என்று நான் கேட்கிறேன். இதற்கான பதிலை நீங்கள் கூறவில்லை என்றால், ஒரு மாநிலத்தின் முதலமைச்சர் தவறான தகவலை மக்கள் மன்றத்தில் தெரிவிக்கலாமா? என்ற கேள்வியை முன் வைக்கிறோம். தமிழ்நாட்டிற்கு எவ்வளவு நிதி ஒதுக்கப்பட்டு இருக்கிறது, யு.பி.ஐ 10 வருட ஆட்சிக்கும், மோடி ஆட்சிக்கு வந்த பிறகும் ஐந்து மடங்கு நிதி கொடுப்பது உயர்ந்து இருக்கிறது.
தமிழக வெற்றி கழகத்தின் இரண்டாம் ஆண்டு துவக்க விழா நடைபெற்றுக் கொண்டு இருக்கிறது. சகோதரர் விஜய் பேசும்பொழுது, மத்திய மற்றும் மாநில அரசு ஆகிய இரண்டையும் குறை சொல்லி இருக்கிறார். ஓய் ப்ரோ, வாட் ப்ரோ, எல்.கே.ஜி பசங்களை போன்று சண்டை போட்டுக் கொள்கிறீர்கள் என கூறியிருக்கிறார்.
நான் விஜய் இடம் கேட்கிறேன், practice what you preach, why bro telling lies எனக் கூறிக்கொள்ள விரும்புகிறேன். உங்களுடைய குழந்தைகளுக்கு மூன்று மொழி, நீங்கள் நடத்தும் பள்ளிகளில் மூன்று மொழி, ஆனால் தமிழக வெற்றிக் கழக தொண்டர்களின் குழந்தைகளுக்கு இரண்டு மொழி. அதே போல கையெழுத்து இயக்கம், (Getout) ஆரம்பித்து ஒரு நிமிடத்தில் பிரசாந்த் கிஷோர், விஜய் அவர்களை பார்த்து கெட் அவுட் என்று கூறுகிறார், விஜய்க்கு எடுத்துச் சொல்லக் கூடிய பிரசாந்த் கிஷோரின் நடவடிக்கையை எடுத்துக் காட்டி விட்டது. Getout எல்லாம் ஒரு காரணத்திற்காக இருக்க வேண்டும். எங்கேயும், யாரும் எந்த மொழியையும் திணிக்கவில்லை. நீங்களே மேடையில் பொய் சொல்லலாமா ப்ரோ? விஜய் அவர்கள் இதை செய்ய வேண்டாம் என அன்போடு வலியுறுத்தி கேட்டுக்கொள்கிறேன் என்றார்.
பீகாரில் இருந்து பிரசாந்த் கிஷோர் வருகிறார். அவருக்கு தமிழ்நாட்டில் ஒரு பெயர் கிடைக்கிறது என்றால் சந்தோஷமான விஷயம் தான். தமிழர்கள் அனைவரையும் ஏற்றுக் கொள்பவர்கள் தானே. தமிழ்நாட்டிற்கு நல்லது யார் செய்தாலும் அவர்களை ஏற்றுக் கொள்வோம். பிரசாந்த் கிஷோரிடம் ஒரே ஒரு கேள்வி கேட்க விரும்புகிறேன், இவ்வளவு செய்து ஏன் திராவிட முன்னேற்றக் கழகத்தை ஆட்சியில் கொண்டு வந்து உட்கார வைத்தீர்கள் ?. அதற்காகவே மக்கள் எப்பொழுதும் உங்களை மன்னிக்க மாட்டார்கள். தனிப்பட்ட முறையில் எங்களுக்கும் உங்களுக்கும் எந்த பிரச்சனையும் இல்லை. தமிழகம் நன்றாக இருக்க வேண்டும் என இந்தியாவில் இருந்து யார் எந்த வேலை செய்தாலும் அதை நாங்கள் ஏற்றுக் கொள்வோம்.
உதாரணமாக, கிரிக்கெட் விளையாட்டு வீரர் தோனியை எடுத்துக் கொண்டால் மொழி தெரியாமல் வந்தார். சென்னை சூப்பர் கிங்ஸ்காக விளையாடினார். அவரை அனைவரும் அவர் வீட்டுப் பிள்ளையாகவே ஏற்றுக் கொண்டனர். அதே போல நல்லது செய்தால் அனைவரும் ஏற்றுக் கொள்வார்கள்.
த.வெ.க நிகழ்வில் பத்திரிகையாளர் தாக்கப்பட்டதாக கூறப்படும் படத்தை நான் பார்த்தேன்; மிகவும் கண்டிக்கத்தக்கது, இது போன்ற பஞ்சாயத்துகள் வரக் கூடாது என்பதற்காக தான் பாதுகாப்பு கொடுக்கிறோம். அதற்காகத் தான் crpf ஐ பயன்படுத்துங்கள் என கூறுகிறோம். சி.ஆர்.பி.எப்.இல் இருந்து வரக் கூடியவர்கள் specially trained ஆட்களாக இருப்பார்கள். பவுன்சர்களுக்கு சில இடங்களில், அவர்கள் செய்தியாளர்களா என்பது கூட தெரியாது
இன்று நடைபெறும் மகா சிவராத்திரிக்கு அமைச்சர் அமித்ஷா ஈஷா யோகாவிற்கு செல்கிறார், இது போன்ற அற்புதமான நாளில் மூன்று கட்டிடத்தையும் திறந்து வைக்க வேண்டும் என வேண்டுகோள் விடுத்ததால், இன்று மூன்று கட்டிடங்களையும் திறந்து வைத்து இருக்கிறார். அமித்ஷா அவர்கள் எதற்காக தி.மு.க 2026 ல் வெளியே செல்ல வேண்டும் என்பதை மிகத் தெளிவாக கூறினார். எங்களுக்கு மிகவும் நம்பிக்கை இருக்கிறது. தேசிய ஜனநாயக கூட்டணி நிச்சயம் ஆட்சியை பிடிக்கும். வருகிற காலத்தில் யார் கூட்டணிக்கு வந்தாலும் ஒருமித்த கருத்தோடு சேர்ந்து பயணிக்க நாங்கள் தயாராக இருக்கிறோம்" என அவர் தெரிவித்தார்.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.